செவ்வாய், 21 செப்டம்பர், 2021

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் குதிர் கண்டுபிடிப்பு

 

தூத்துக்குடிசெப். 19- தூத்துக் குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கையில் நடைபெற்று வரும் அக ழாய்வுப் பணியில் சுமார் 5 அடி உயரம் கொண்ட பழங்காலக் குதிர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கொற்கையில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு வாய்ந்த துறைமுகம் இருந்துள் ளதுபாண்டிய மன்னர் களின் ஆளுகைக்கு உட் பட்ட பகுதியான இங்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி யும்இங்கிருந்து ஏற்று மதியும் நடந்துள்ளது.

1966-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் நாகசாமி குழுவினர் இங்கு அகழாய் வுப் பணிகளை மேற் கொண்டனர்.

இந்நிலையில்சுமார் 52 ஆண்டுகளுக்கு பின் னர் தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை சார் பில் கொற்கையில் அக ழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றனஇதில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் குழாய் அமைப்புசெங்கல் கட்டுமான அமைப்பு உள்ளிட்ட

100-க்கும் மேற்பட்ட பழங் கால கட்டுமானங்கள் மற் றும் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது சுமார் 5 அடி உயரமுள்ள குதிர் கண்டுபிடிக்கப் பட்டுள் ளதுஇதை அலுவலர்கள் கயிறு கட்டி மேலே எடுத் தனர்நெல் உள்ளிட்ட தானியங்களை சேமித்து வைக்க இக்குதிர் பயன் படுத்தப்பட்டதா என தொல்லியல் அலுவலர் கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து எழுத்தா ளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, ‘‘ஆதிச்சநல்லூர்சிவகளைகொற்கை ஆகியவை உலக நாகரீகத்தின் தொட்டில் என்பதற்கு சான்றாக தொடர்ந்து பழங்காலப் பொருட்கள் கிடைத்து வரு கின்றனகொற்கையில் துறைமுகம் தொடர்பான பெரிய ஆலை இயங்கி வந்திருக் கலாம்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பார்ப்பனர்கள் மட்டுமே நீராட படித்துறையாம்! கல்வெட்டுக் கண்டுபிடிப்பு!

  Published October 21, 2024 விடுதலை நாளேடு நெல்லை, அக். 21- தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழைமையான படித்துறைக் கல்வெட்டு க...