• Viduthalai
இளையான்குடி, செப். 21- சிவகங்கை மாவட்டம், இளையான் குடி அருகே முனைவென்றியில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய மூடியு டன் கூடிய முதுமக்கள் தாழி கள், கீறல் குறியீடுகள் கண்டெடுக்கப் பட்டன. இப்பகுதியை கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல் லூரி தமிழ் உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான முனைவர் ந.ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
முனைவென்றி என்பது கொடு மணலுக்கு இணையான ஊர். இங்குள்ள வயல்வெளி, கொழஞ்சித் திடல், ஆவடியாத்தாள் கண் மாய் பகுதிகளில் 100 ஏக்கரில் பெருங்கற்கால தொல்சான்றுகள் பரவிக் கிடக்கின்றன.
இங்கு மூடியுடன் கூடிய முது மக்கள் தாழிகள், கருப்பு, சிவப்பு நிறப் பானை ஓடுகள், கீறல் குறி யீடுகள், செங்கல் வட்டு சில்கள்,
சிறிய கலயங்கள், கற் கருவிகள், மனித எலும்புகள் காணப்படுகின் றன. இந்த தொல்பொருட்களை ஆய்வு செய்ததில், அவை 3,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது. ஆதிச்சநல்லூர், அழகன் குளம், கொடுமணல், பொருந்தல், கீழடி, சிவகளை அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் பல இங்கும் காணப்படுகின்றன.
இப்பகுதியை தொல்லியல்துறையினர் முழுமையாக ஆய்வுசெய்தால் ஏராளமான தொல்பொருட்கள் கிடைக்கும். இதன் மூலம் தமிழ னின் பெருமையை உலகறியச் செய் யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
விருதுநகர் மாவட்டம், திருச் சுழி அருகே உள்ள புரசலூரில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது சுமார் 400 ஆண்டுகள் பழைமையான சதிக் கல் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து அவ்வூரைச் சேர்ந்த வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் செ.ரமேஷ், ராமநாத புரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுருவுக்குத் தக வல் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக