வெள்ளி, 8 அக்டோபர், 2021

புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம் கண்டெடுப்பு

 

புதுக்கோட்டைசெப். 14- புதுக் கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழைமை யான கல்மரம் 12.9.2021 அன்று கண்டெடுக்கப்பட் டுள்ளது.

புதுக்கோட்டை நரி மேட்டின் ஒரு பகுதியில் கூழாங்கல்சுண்ணாம்பு கற்கள் அதிகளவில் காணப்படுகின்றனஇந்தப் பகுதியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தின் தொல்லியல் ஆய்வா ளரான புதுக்கோட்டை யைச் சேர்ந்த எஸ்.பாண் டியன் 12.9.2021 அன்று ஆய்வு செய்தார்அப் போது, 15 செ.மீநீளம், 10.5 செ.மீஅகலத்தில் கல்மரம் ஒன்றை கண் டெடுத்தார்அதைமேலாய்வுக்காக பொற் பனைக் கோட்டையில் அகழாய்வுப் பணியை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் .இனியனி டம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து எஸ்பாண்டியன் கூறியதுஇந்த கல்மரமானதுசுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கிரெட்டே சியஸ் காலத்தைச் சேர்ந் ததுஅதாவதுதற்போ துள்ள பூக்கும் தாவரங் களான ஆஞ்சியோஸ் பெர்முக்கு முந்தைய ஜிம்னோஸ்பெர்ம் வகை யைச் சேர்ந்ததுஇது அரிய தொல்லியல் பொரு ளாக கருதப்படுகிறதுஇப்பகுதியை தமிழ்நாடு அரசு ஆய்வுக்கு உட்படுத் தினால்மேலும் இது போன்ற அரிய தொல்லி யல் பொருட்கள் கிடைக் கும் என்றார்.

ஏற்கெனவேகடந்த 2016இல் இதே பகுதியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழக ஆய்வு மாண வர்களால் கண்டெடுக்கப் பட்ட கல்மரம் ஒன்று புதுக்கோட்டை அருங் காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...