செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் 9ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு

 

செய்யாறு, நவ.6 திருவண்ணா மலை மாவட்டம், செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வக்குமார் ஆய்வு நடத்தியதில், வயல்வெளி நடுவில் செல்லியம்மன் கோயில் அருகே புதைந்து கிடந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக் கல், சந்து தெருவில் கோமாரிக்கல் ஆகியவற்றை கண்டெடுத்தார். 

இதுகுறித்து செல்வகுமார் கூறியதாவது: அய்யனார் சிற்பம் 34 சென்டிமீட்டர் உயரமும், 22 சென் டிமீட்டர் அகலமும் உடையது. அய்யனாரின் தலையை அடர்ந்த ஜடா பாரம் அலங்கரிக்கிறது. காதில் பத்திர குண்டலமும், கழுத்தி லும் கால்களிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன.  

அதேபோல் கல் தூணில் கருடாழ்வார் சிற்பம் 58 சென்டி மீட்டர் உயரமும், 28 சென்டிமீட்டர் அகலமும் உள்ளது. ஸ்தூபக்கல் கலை நயத்துடன் உள்ளது. ஊரின் மய்யப்பகுதி யான சந்து தெருவில் கோமாரிக்கல் அல் லது மந்தை வெளிகல் என்று அழைக்கப் படும் பழைமையான கல் கண்டெடுக்கப் பட்டது. இக்கல்லின் உயரம் 60 சென்டி மீட்டர், அகலம் 30 சென்டி மீட்டர். தற்போது பொன் னியம்மன் கோயில் கட்டப்பட்டி ருக்கும் இடத்தில் ஏற்கெனவே லட்சுமி நாராயணன் கோயில் இருந்த தாகவும் கூறப்படுகிறது. கோயில் முழுவதும் காணாமல் போன நிலையில் அதனுடைய எச் சங்கள் காணப்படுவதால் பொது மக்கள் கூறும் தகவல் உறுதி யாகிறது.

இவ்வூர் முன்னோர் களால் விஜய பூபதி நகரம் என்று அழைக்கப்பட்டதாக பெரியவர்கள் தெரிவிக் கின் றனர். இவ்வூரில் ஏற்கெனவே கண்டெடுத்த மூத்த தேவி சிற்பம், சாமுண்டி சிற்பம் உள்ளிட்ட அனைத்தும் கி.பி. 9ஆம் நூற்றாண் டிற்கும் 10ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்க லாம். சிற்பங்களின் கலை நுணுக்கங்களை பார்க்கும் போது பல்லவர்கள் அல் லது சோழர் காலத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. தொல்லியல் ரீதியாக ஆய்வு மேற்கொண்டால் பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப் புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பார்ப்பனர்கள் மட்டுமே நீராட படித்துறையாம்! கல்வெட்டுக் கண்டுபிடிப்பு!

  Published October 21, 2024 விடுதலை நாளேடு நெல்லை, அக். 21- தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழைமையான படித்துறைக் கல்வெட்டு க...