சனி, 15 ஜூன், 2019

ராஜராஜ சோழனைப் பற்றியும் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

தமிழ்த் தேசியவாதிகளால் மாமன்னன் என்று கொண்டாடப்படும் ராஜராஜ சோழனைப் பற்றியும் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்து விடுவோம். இல்லை என்றால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் என்ற மன்னனை கண்டுபிடித்தவர் ஹூல்ஸ் என்ற ஆங்கிலேயர் ஆவார். இவர்தான் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் முதன்முதலாக பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் படித்து இந்த எழுத்துக்கள் தமிழ்தான் என்றும், அவனுடைய காலம் கி.பி 985-1113 என்றும் சொன்னவர். அதற்கு முன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது காடுவெட்டி சோழன் என்னும் மன்னன்தான் என்று பெரும்பான்மை தமிழ்மக்கள் நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆக சீண்டுவார் யாருமின்றி அனாதையாக கல்வெட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜராஜனை அதில் இருந்து எழுப்பிவிட்ட பாவத்தைச் செய்தவர் ஓர் ஆங்கிலேயரே ஆவர்.

இந்த ராஜராஜன் சாதாரண அரசன் அல்ல, பத்தாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்த நரேந்திர மோடி ஆவான். அவனது உடல், பொருள், ஆவி என அனைத்தயும் பார்ப்பனியத்தை வளர்ப்பதற்காகவே செலவிட்டவன். இந்த ராசராசன் இரண்டாம் பராந்தகனின் இரண்டாவது மகன் ஆவான். அவனது அண்ணன் ஆதித்த கரிகாலன் என்ற பட்டத்து இளவரசன். அவன் உடையார்குடி பார்ப்பனர்களால் கொல்லப்படுகின்றான். கொலையாளிகள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ராஜராஜ சோழன் அவர்களைத் தண்டிக்காமால் விட்டுவிட்டான் என்ற செய்தி உடையாளூர் கல்வெட்டின் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. அண்ணனின் உயிரை விட பார்ப்பனின் உயிர் ராஜராஜனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. பார்ப்பனனைக் கொன்றால் பிரம்மஹத்தி தோஷம் வந்துவிடும் என்ற பார்ப்பன சிந்தனையே அவனை அவ்வாறு செய்ய வைத்தது.

இன்று தெலுங்கர்களாலும், மலையாளிகளாலும், கன்னடர்களாலும் தமிழ்நாட்டில் வளங்கள் சுரண்டப்படுவதாக கூப்பாடு போடும் தமிழ்த் தேசியவாதிகள் ராஜராஜனின் அரசியல் பிழைப்புவாதத்தை தெரிந்து கொள்ள வேண்டும். “நாடுபிடிக்கும் ஆசையில் இருந்த ராஜராஜ சோழன் தன் மகள் குந்தவையை வேங்கி நாட்டு மன்னன் விமலாத்தித்தனுக்கு மணம் முடித்து வைத்தான். அது போல ராசேந்தர சோழன் தன்னுடைய மகள் அம்மங்கா தேவியை கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் ராஜராஜனுக்கு மணம் முடித்து வைத்தார். பின்னாளில் அரியணை ஏறிய முதலாம் குலோத்துங்கன் அம்மங்காதேவியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தமிழனுக்குப் பிறக்காதவன்.

ராஜராஜன் பார்ப்பனியத்தின் ஊதுகுழலாக இருந்தது மட்டும் அல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் கேவலமாக நடத்தினான். அவனது ஆட்சிக்காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் தனிக்குடியிருப்புகளில் அதாவது ஊருக்கு வெளியே குடிவைக்கப்பட்டனர். பெரியகோவில் கல்வெட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளைக் குறிக்கும் விதமாக பறச்சேரி, தீண்டாச்சேரி என்கிற பெயர்கள் குறிப்பிடுவதில் இருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தஞ்சைப் பெரிய கோவிலில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தேவரடியார்களாக பணியமர்த்தப்பட்டனர் என்ற செய்தியை தஞ்சை பெரியகோவில் வட வெளிச்சுற்றுச் சுவரில் உள்ள தளிச்சேரிக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இந்தப் பெண்களுக்கு மணம் புரியும் உரிமை கிடையாது. இந்தப் பெண்கள் அர்ச்சகர்களின் ஆசைக்குட்பட்ட வைப்பாட்டிகளாகவும் விளங்கினர். இப்படி தமிழ்மன்னர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தத் தேவதாசிமுறை மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் முன்முயற்சியால் தான் ஒழிக்கப்பட்டது என்பதையும் அதற்குத் தமிழ்த் தேசியவாதிகளின் முன்னோர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பதும் வரலாறு.

ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் தான் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம், தேவதானம், சீவிதம் போன்ற பெயர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டன. அப்படி கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு எந்த வரியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை விவசாயிகள் மீது கொடுமையான வரிகள் விதித்து, அவர்களைத் துன்புறுத்திய ராஜராஜன் பார்ப்பனனின் நிலங்களுக்கு வரிவிதிக்காதது மற்றும் அவர்களுக்குச் சலுகைகள் வழங்கியதில் இருந்தே அவனின் பார்ப்பன அடிமைத்தனம் பல் இளிக்கின்றது.

கங்கையைக் கொண்டான், கடாரம் கொண்டான் என்றெல்லாம் புகழ்கின்றார்கள். ஆனால் சாமானிய மக்களுக்கு என்ன செய்தான் என்பதுபற்றி யாரும் வாய் திறப்பதில்லை. சாதிவெறி பிடித்தவனாகவும், பார்ப்பன அடிமையாகவும், போர்வெறி பிடித்தவனாகவும் உள்ள ஒருவன் சாமானிய மக்களுக்கு எதைச் செய்திருக்கப் போகின்றான்? மக்கள் மீது எக்கச்சக்கமாக வரி விதித்து ஊர் ஊருக்கு கோவில்கட்டியதைத் தவிர அவனது சாதனைகள் என்று எதைச் சொல்வது?

நம்முடைய கேள்வி எல்லாம் ஒரு மன்னனை எதற்காக ஆதரிக்க வேண்டும், எதற்காக எதிர்க்க வேண்டும் என்பதுதான். பல நாடுகளை வெற்றி கொண்டான், கோவில் கட்டினான், குளங்களை வெட்டினான், ஏரிகளை உருவாக்கினான் என்பதற்காக ஒரு மன்னனை தமக்கான வழிகாட்டியாக ஒருவனால் ஏற்க இயலுமா? வரலாற்றை இயக்கவியல் பொருள்முதல்வாத வழியில் ஆய்வு செய்யும் யாரும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆட்சி செய்த மன்னர்கள் மீது வெற்றுப் பிரமிப்பை உருவாக்கிக் கொள்வதால் யாருக்கு லாபம்? சமூக மாற்றம் வேண்டுவோர் எப்படி வரலாற்றைப் பார்க்க வேண்டும்? பத்துப்பைசா பிரயோசனம் இல்லாத பழம்பெருமைகள் பேசி ஒருவன் சமூக மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகின்றான் என்றால் நிச்சயம் அவன் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியாகவே இருப்பான். ஜாரை எதிர்த்துதான் ரஷ்ய புரட்சி நடந்தது. சீன நிலப்பிரபுத்துவ அதிகார வர்க்கத்தை எதிர்த்துதான் சீனப்புரட்சி நடந்தது. இங்கே யாரும் தங்களை ஆண்ட மன்னன் என்பதற்காக அவர்களை எதிர்க்காமல் விட்டுவிடவில்லை. தங்களை ஆண்ட, ஆளும் மன்னன் ஒரு கொடுங்கோல்வாதி, பிற்போக்குவாதி, ஏகாதிபத்திய அடிமை என்று தெரிந்தபோது நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று அவர்களை வீழ்த்தினார்கள். அதற்குப் பெயர்தான் புரட்சி. சாதிவெறி பிடித்தவனையும், பார்ப்பனியத்தின் அடிமையாகக் கிடந்தவனையும் மாபெரும் இலட்சியவாதியாக ஒருவன் சித்தரிக்கின்றான் என்றால், அவனும் அதைப் போல சாதிவெறி பிடித்தவானகவும் பார்ப்பனியத்தின் அடிமையாகவும்தான் நிச்சயம் இருக்க முடியும்.

ராஜராஜ சோழன் தமிழ் இனத்தின் அவமானச் சின்னம் என்பதுதான் வரலாறு நமக்கு கற்றுத் தரும் பாடம். அவன் மட்டும் அல்ல சேர, சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்கள் அனைவரும் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள். நாம் வீரபாண்டிய கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும், கோபால நாயக்கரையும் ஆதரிப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் கும்பினி அரசை எதிர்த்து போரிட்டார்கள் என்பதற்குத் தான். அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த பல தமிழ் மன்னர்கள் கும்பினி ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு தந்து, அவர்களது அடிமைகளாய் மாறிவிட்ட சூழ்நிலையில் கட்டபொம்மன், ஊமைத்துரை, கோபால நாயக்கர் போன்றோரின் எதிர்ப்புக்குரல் அன்றைய கும்பினி ஆட்சியை குலை நடுங்கவைத்தது. அவர்களின் தன்னலமற்ற தியாகமும் நெஞ்சுரம்தான் அவர்களை பின்பற்றச் சொல்லி நம்மைத் தூண்டுகின்றது.

ராஜராஜ சோழன் போன்றவர்களைக் கடுமையாக நாம் எதிர்ப்பதற்குக் காரணம் அவன் சாதிவெறியானாகவும், பிற்போக்குவாதியாகவும், பார்ப்பன அடிமையாகவும், பெண்களை தேவதாசிகள் ஆக்கி அழகுபார்த்தவன் என்பதற்காவும் தான். நாம் தமிழ்த் தேசியவாதிகளை கடுமையாக எதிர்ப்பதற்குக் காரணமும் அவர்கள் ராஜராஜ சோழனை தமிழ் இனத்தின் மீட்சிக்காக பாடுபட்டவன் போன்று சித்தரிப்பதுதான். அவர்களும் ராஜராஜ சோழன் போன்றே தாழ்த்தப்பட்ட மக்களிடம் நடந்து கொள்கின்றார்கள். அவர்கள் ராஜராஜ சோழன் போன்றே பார்ப்பனியத்தின் அடிமையாக இருக்கின்றார்கள். அவர்கள் ராஜராஜ சோழன் காந்தளூர்ச் சாலையில் பல மலையாளிகளின் தலையை அறுத்து துள்ளத் துடிக்க கொலை செய்தது போல, இவர்களும் இங்குள்ள தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்களின் தலைகளை அறுப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டு இருக்கின்றார்கள். இப்போது தெரிகின்றதா தமிழ்த் தேசியவாதிகள் ஏன் ராஜராஜ சோழனை ஆதரிக்கின்றார்கள் என்று. ராஜராஜ சோழனை ஆதரிப்பது என்பதன் பொருள் சாதிவெறியனாகவும், பார்ப்பன அடிமையாகவும், இனவெறியனாகவும் நாம் மாற நினைக்கின்றோம் என்பதுதான்.

செ.கார்கி

ராசராச சோழனின் ஆட்சி

#ராசராச_சோழனின்_பொற்கால_ஆட்சி

பரவலாக வரலாற்றை நன்கறிந்தவர்கள்  ராசராச சோழனை தெலுங்கன் என்று சொல்லுகிறார்கள். அதாவது கொல்டி என்பதே இதனுடைய  ஆழமான அர்த்தமுறை. ராசராச சோழன் எப்படி தெலுங்கன் என்பதனை நாம் இந்த கட்டுரையின் கடைசி வரிகளில் பார்ப்போம்.  எல்லா மாமன்னர்கள் போலவும் தமிழ் மன்னர் என்று சொல்லப்படும் சத்திரிய குல வம்சத்தை சார்ந்த ராசராச'னும் பல பொண்டாட்டிகள் மற்றும் வைப்பாட்டியுடன்  உடன் அந்தபுரத்தின் பிடியில் சிக்கியிருந்தார் என்பது தனிக்கதை . பின்னென்னா ? மன்னர் எனறால் அந்தபுரம் இல்லாமலையா இருக்கும் ? வரலாற்றை நோண்டி பார்க்கும்போது பல மன்னர்களின் வாழ்கை அந்நபுரத்திலே கழிந்துதான் போயிருக்கிறு. இங்கு வைப்பாட்டியை பற்றி பேசினால் பல கூமுட்டை தமிழ்த்தேசியவாதிகள் கலைஞர் ஏன் மூன்று பொண்டாட்டி கட்டினார் என்று கேள்வி எழுப்புவார்கள். குறிப்பாக இந்த கேள்வியை எந்த தமிழ்த்தேசியவாதிகள் கேட்பார்கள் என்றால் ? ஈழத்தில் பிணத்தை வைத்து இங்கு அரசியல் செய்யும் சாமான் என்கிற டோபர் ஆமைக்கறிகாரனும் அவருடைய ஆளுமையின்கீழ் வரும் விசிலடித்தான் குஞ்சிகளான அவனுடைய தம்பிமார்களும்தான் இதுபோல ஒவ்வாத அதாவது பொருந்தாக கேள்வியை கேட்டு பையத்தியகாரன்கள் போல கூவிக்கிட்டு  இருப்பானுங்க. இவீங்களுக்கு பொண்டாட்டிக்கும் வைப்பாட்டிக்கும் அர்த்தம் தெரியாத ஒருவகையான அழுகிபோன கூமுட்டைகள்.

சரி நாம , ராசராச சோழன் மேட்டருக்கு வருவோம் !

ஆமாம் ராசராச சோழனை பற்றி பேசினால் வழக்குவேற போடுவானுங்கனு வெளியில  அரக்கபறக்க பேசிக்கிறானுங்க ? சரி , அவனுங்க நம்ம மீது வழக்காவது போடட்டும் இல்ல வேற எதாவது கூட போடட்டும் . நாம மறைக்கப்பட்ட ராசராச சோழனின் வரலாற்றுக்கு வருவோம் .

ஆமா ராசராசனை பார்ப்பனீய அடிமைனு வேற இங்கே பேசிக்கிறானுங்களோ ?

அடா ஆமா'பா , நீங்க நினைக்கிற மாதிரி மாமன்னர் ரசாராச சோழன் ஆரிய பாரப்பனீயனி்ன் அடிமைதான்  . ராசராசன் மட்டுமா பார்ப்பனீயத்தின் அடிமை ? இல்லையில்லை  ! ஏறதாழ இந்தியாவை ஆண்ட குறுநில மன்னர்கள் முதல் சிற்றரசர்கள்வரை ஆரிய பார்ப்பனீயத்தின் ஒருவகையான அடிமைகள்தான் .

ஆமா ரஞ்சித் சொன்ன மாதிரி பறையர்களின் நிலத்தை ராசராச சோழன் புடுங்கி கைபர் , போலான் , கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு பஞ்சம் பிழைக்க பரதேசியாக இந்தியாவில் ஊடுருவிய ஆரிய பார்ப்பனீயத்துக்கு கொடுத்தரா ?  ஆமா ! ராசராச  சோழன் இந்த மண்ணின் பூர்வகுடிகளான ஆதிக்குடிகளான பறையர்களின் நிலங்களை புடுங்கிதான் பார்ப்பனீயத்துக்கு கொடுத்தார் என்று ராசராச சோழன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் நமக்கு சாட்சியாக இருக்கிறன. மற்றும் இதற்கான ஆராய்ச்சி தரவுகளும் நம்மிடம் உள்ளன.
அப்படி , ராசராச சோழன் பறையர்களின் நிலங்களை பிடிங்கி பார்ப்பனர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் ? யாருடைய நிலத்தை ராசராச சோழன் பார்ப்பனர்களுக்கு கொடுத்தான் ! பொதுவாகவே பார்ப்பனர்கள் பஞ்சம் பிழைக்க இந்தியாவில் ஊடுருவினார்கள் என்று நமக்கு வரலாற்று சான்றுழ்கள் உள்ளன . அப்படி  இருக்கையில் பார்ப்பனர்களுக்கு எப்படி இங்கு நிலம் வந்தது ? சிலர் சொல்லுவார்கள் பார்ப்பனர்கள் உழைத்து நிலங்களை வாங்கினார்கள் என்று . பார்ப்பனர்கள் கோயிலில் மணியாட்டித்தான் பழக்கப்பட்டவர்கள் , இவர்கள் எப்படி உழைத்து நிலங்களை வாங்கி இருப்பார்கள் ?
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. வரியும் கிடையாது ! தேவதானம் , இறையிலி , அகரங்கள் ,  அக்ரகாரங்கள் , சதுர்வேதி மங்கலங்கள் , தனிக் கிராமங்கள் என்று Tatal  free Allowance'க  250 ஊர்கள்  ராசராச சோழன் பார்ப்பனீயத்துக்கு தானமாகவே கொடுத்துள்ளார். இவ்ஊர்களில் எதாவது குற்றம் நிகழ்ந்தாலும் பார்ப்பனீய காவலன் ராசராச சோழனின் அதிகாரிகள் உள்நுழைய மாட்டார்கள்.   அது மட்டுமா ? லட்சகணக்கானா ஏக்கர்  விவாசய நிலங்களையும் ராசராச சோழன் தானமாக பார்ப்பனர்களுக்கு கொடுத்துள்ளான்.
பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் யாருடைய நிலம் என்று இங்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது , இதற்கான விடயம்தான் பா.ரஞ்சித் சொன்ன விடயம் .

ராசராசன் ஆட்சிக்காலத்தில் 11 வகையான வரிகள் விதிக்கப்பட்டன . இதில் ஆச்சிரியமான ஒரு விஷயம் என்னவெனறால் இதில்    11 வகையான வரிகளில் பார்ப்பனர்கள் ஒருவரியை கூட கட்டவேண்டிய அவசியமில்லை என்பதே நாம் இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் .
ராசராசன் ஆட்சியில் விதிக்கப்பட்ட வரிகள் விபரங்கள் இங்கு பார்ப்போம் .

📎 வட்டி நாழி = கழணிக்குத் தண்ணீர் பாய்ச்சிய நேரத்துக்கு வரி

📎 கண்ணாலக் காணம் =  பொதுமக்கள் திருமணம் செய்து கொண்டால் செலுத்தப்பட்ட வரி

📎 வண்ணாரப பாறை = துணி வெளுப்பவர்கள் செலுத்திய வரி

📎 மீன் பாட்டம் = மீனவர் செலுத்திய வரி

📎 குசக காணம் = மண்பாண்டக் குயவர்கள் செலுத்திய வரி

📎 தறி இறை = தறி நெய்யும் நெசவாளர் செலுத்திய வரி

📎 ஆட்டு இறை = ஆடு வளர்ப்பவர்கள் செலுத்திய வரி

📎 நல்லெரு இறை = எருது பசு வளர்ப்போர் செலுத்திய வரி

📎 ஓடக் கூலி = ஓடம் செலுத்துவோர் செலுத்திய வரி

📎 ஈழம் பூட்சி = பனைக் கள் இறக்குவோர் செலுத்திய வரி

ராசராச சோழன்  ஆட்சிகாலத்தில் மக்கள் இத்தனை வகையான வரிகளை கட்டி நொந்துபோனார்கள் . ராசராச சோழனின் ஆட்சிக்காலத்தை பொற்கால  ஆட்சி என்று சொல்லுவார்கள் . ஆமா  அவை உண்மைதான் ராசராச சோழனின் ஆட்சி பொற்கால ஆட்சிதான் . இதில் ஒருசின்ன திருத்தம் இது ஒட்டுமொத்த மக்களுக்கான பொற்கால ஆட்சி கிடையாது . மாறாக பஞ்சம் பிழைக்கவந்த ஆரிய பார்ப்பனர்க்கனா  பொற்கால ஆட்சி .

சோழ நாட்டு மக்கள் , வரி கொடா இயக்கம் நடத்தியது கூட உண்டு! அதை  ஆடுதுறையில் இருக்கும் கல்வெட்டு பேசுகிறது.  பிராமணர் முதலிய சதுர்வேதி மங்கல நிலச் சொந்தக்காரர்கள் , இடங்கை 96 வகைச் சாதியினருக்கு இழைத்த கொடுமைகளைக் கல்வெட்டுகள் கூறுகிறது. வரிச் சுமைகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளும் , ஆவணி ஊரில் நமக்கு ஆதாரமாக கிடைத்துள்ளன . இவ்வளவு கொடுமையான வரிகளை கட்டமுடியாமல் பல மக்கள் கோயிலின் கோபுர உச்சியில் ஏறி தற்கொலை செய்துக் கொண்ட வரலாறும் உண்டு . ஒருவர் ஆட்சியில் மக்கள் வரியை கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளுவதுதான் பொற்கால ஆட்சியா ?

உங்க சொந்த நிலத்தில் பாட்டியும் , தாத்தாவும் , அம்மாவும் , அப்பாவும் கழணியில் வேர்க்க விறுவிறுக்க உழைச்சிக் கொட்ட  , நேரே வந்து 11 வகயைான வரியை ராசராச சோழ அரசாங்கம் புடுங்கும் . ஆனா பிராமண மானியமாகத் தரப்பட்ட இலவச அரசு நிலத்தில் , தாங்கள் உழைக்காது , உங்களை வைத்தே உழவு செய்து , காசும் பார்த்த பார்ப்பனீயர்கள் , வரி என்று சல்லி காசு கொடுக்க மாட்டார்கள் . இவர்களும் வரியை கொடுக்க மாட்டார்கள் அவர்களும் இவர்களிடம் வரியை கேட்கமாட்டார்கள். இதற்காகதான் ராசராச சோழனின் ஆட்சியை வரலாற்று ஆசிரியர்கள் பார்ப்பனீய மனுதரும ஆட்சி என்று சொல்லுகிறார்கள் . 

ராசரசா சோழன் செய்த கொடுமைகள் என்னென்னா ❓

📎 தமிழக கோயில்களை முழுவதும் பிராமண மயமாய் ஆக்கியது

📎 தேவரடியாள் என்ற இறைப்பாலியல் தொழிலை கட்டாய நிறுவனமாக்கி வரிவு செய்தது

📎 தமிழ் மொழியைச் சிதைத்து அரசு ஆவணங்களைக் கிரந்த மயமாய் ஆக்கிக் குவித்தது

📎 சதுர்வேதி மங்கலம் / தேவதானம்/ அக்ரஹார இலவசங்கள் ! பொதுமக்கள் தலையில் வரி ஏற்றம்

📎 வரி கொடுக்காத  ஏழை உழவர்களை "சிவத் துரோகி" என்ற சூழ முத்திரை குத்தி அடிமை ஆக்குதல்

📎 பறைச் சேரி / பறைச் சுடுகாடுகள் உருவாக்கம் செய்தது .

சோழ நாட்டின் வயல்களில் பெரும்பகுதி பெரிய கோவிலுடன் இணைக்கப்பட்டு இருந்தது . மக்களிடம் இருந்து விளைச்சலில் 6இல் 1 பங்கு கோயிலுக்கு வரியாக வசூலிக்கப்பட்டன . கோயில் பண்டாரத்தில் இருந்து கடன் கொடுக்கப்பட்டு 12% வட்டி [கந்து மீட்டர் வட்டி] வசூலிப்பட்டது. வரியும் கட்டி , வட்டியும் கட்டி நொடித்துப்போன மக்கள் வெற்றுக்குடிகள் எனும் கோயில் அடிமைகளாக ஆக்கப்பட்டன.  பார்ப்பனர்களும் கடன் வழங்கப்படும் ஆனா அவர்களிடம் வட்டி வசூலிக்கப்பட மாட்டார்கள் .

பாரந்தகச் சோழனின் மகளான அனுபமாவை , கொடும்பாளூர் முத்தரையார் மணந்தார் . அதே கொடும்பாளூர்க் குடும்பத்துப் பெண் பூதி ஆதிச்ச பிடாரியை பராந்தகனின் மகன் அரிகுலகேசரி மணந்தான்.  ஒரு கட்டத்தில் சோழ குலமே தெலுங்கு ஆனது.

- ஶ்ரீதர் கீழ்வசலை  முகநூல் பக்கம், 15.6.19

வெள்ளி, 31 மே, 2019

சோழர் காலத்து நடுகல் கண்டெடுப்பு



சென்னை, மே 31  வாணியம்பாடி அருகே சோழர் காலத்து நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் போராசிரியர் க.மோகன்காந்தி, ஆங்கிலப் பேராசிரியர் வ.மதன், காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் வாணியம்பாடி அருகே மேற்கொண்ட கள ஆய்வில் சோழர் காலத்தைச் சேர்ந்த நடுகல்லைக் கண்டெடுத் தனர். இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியது:

வாணியம்பாடியில் இருந்து நாட்டறம் பள்ளிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நெக்குந்தி கிராமம் உள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் கி.பி. 10-11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் உள்ளது. இதன் காலத்தை வைத்து கணக்கிடுகையில் இது, சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருத முடிகிறது.

1.5 அடி உயரம் மண்ணில் புதைந்த நிலையில், 2 அடி உயரம் மேலே தெரிந்த நிலையில் உள்ளது. 3 அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் இந்த நடுகல் செதுக்கப்பட்டுள்ளது.

உருவம் தேயாமல் நேர்த்தியான வடிவில் உள்ளது. இக்கல்லில் உள்ள வீரன் வலது புறம் கொண்டையிட்டு, கையில் வில், அம்புடன் உள்ளார்.

காதுகளில் காதணிகள், முதுகுப்புறம் அம்புக் கூடு காணப்படுகின்றன. கைகளில் வீரக் கடகங்களும் உள்ளன.

இந்த நடுகல்லை இப்பகுதி மக்கள் வேடியப் பன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்  என்றார் அவர்.

- விடுதலை நாளேடு 31. 5 .2019

வியாழன், 30 மே, 2019

கோட்சே தீவிரவாதியே!

தீவிரவாதி! தீவிரவாதி!! தீவிரவாதியே!!!



கலி.பூங்குன்றன்


(1) மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியது என்ன?

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து - அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார். (பள்ளப்பட்டியில், 12.5.2019)

(2) அவர் கூறியதில் என்ன குற்றம்?

நாதுராம் கோட்சே என்ற மராட்டிய பார்ப்பனர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது உண்மையே! அவன் இந்து என்பதும் உண்மை. அவன் இந்துத் தீவிரவாதியாக இருந்ததால்தான் காந்தியாரை சுட்டுக் கொன்றான் என்பது அதைவிடப் பெரிய உண்மையே! இதில் குற்றம் கூற என்ன இருக்கிறது?

(3) கமல்ஹாசன்தான் இப்படி முதன் முதலாகக் கூறியிருக்கிறாரா?

இல்லை. இல்லவே இல்லை. காந்தியார் கொலை செய்யப்பட்டபோது ‘தி-கார்டியன்’ (The Guardian) என்ற லண்டன் ஏடு கொடுத்த தலைப்பு என்ன தெரியுமா?

Delhi January 30 - Mahatma Gandhi was shot and killed this evening by a Hindu Fanatic இதுதான் அந்தச் செய்தி.

இதன் பொருள் என்ன?

மகாத்மா காந்தி இந்து தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது தானே இதன் பொருள்! அதைத்தானே கமல்ஹாச னும் கூறியிருக்கிறார். அவர் சொன்னது ஒன்றும் புதியதல்லவே!

(4) காந்தியாரைக் கொலை செய்ய கோட்சேவைத் தூண்டியது யார்? - எது?

காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சே, நீதிமன்றத்தில் கூறிய வாசகங்களே - அவனைக் கொலை செய்யத் தூண்டியது எது என்பதற்கான ஆழமான - விடையாகும்.

காந்தியார் பேசி வரும் இந்த அகிம்சை வாதம். இந்து சமுகத்தினரை நிராயுதபாணி ஆக்கக் கூடியதே! முஸ்லிம் சமுகத்தின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தும் சக்தி இந்துக்களுக்கு இல்லாமல் போய்விடும் என்று கூறி இருக்கிறானே கோட்சே. இதன் பொருள் என்ன?

தன்னை சனாதன இந்து என்று கூறிக் கொள்வதில் பெருமை கொள்ளும் காந்தி யாரை - இந்துக்களைக் காப்பாற்றுவதற்காக அவரைக் கொன்றதாகக் கூறுவது இந்து வெறி அல்லாமல் வேறு என்னவாம்? அவரைக் கொன்றதற்குப் பின்புலத்தில் இருக்கும் தத்துவம் ‘இந்து’ மத வெறி தானே!

பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்வா அவர்களால் 1963ஆம் ஆண்டில் எழுதப்பட்ட“The Murder of Mahatma”  என்ற நூல் (பக்கம் 274) என்ன கூறுகிறது?

“கோட்சே பகவத் கீதையைப் படித் திருந்தார். அதன் பெரும்பாலான சுலோ கங்களை மனப்பாடமாக அறிந்திருந்தார். நல்ல குறிக்கோளை அடைவதற்காகச் செய்யப்படுகின்ற வன்செயல்களை நியா யப்படுத்துவதற்கு அவற்றை மேற் கோளாகக் காட்டுவதில் அவர் விருப்பம் கொண்டிருந்தார்” என்று கூறப்பட்டுள்ளதே!

கீதை இந்து மத நூல் இல்லை என்று சொல்லப் போகிறார்களா? கோட்சேவைத் தூண்டியது இந்து மத நூல் என்பது - கோட்சேயின் வாக்கு மூலமே வலுவாகச் சொன்னபின் அவன் இந்து வெறியன் - கொலைகாரன் என்று கூறுவதில் என்ன பிழை?

அதே நூலில் இன்னொரு இடத்தில கூறுவதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

His Main Theme However was the nature of a righteous man’s duty, his dharma as laid down in the Hindu scriptures. He made moving references to historical events and delivered an impassioned appeal to Hindus to hold and preserve their motherland and fight for it with their very lives. He ended his peroration on a high note of emotion, reciting verses from Bhagawadgita.”

“இந்த மதச் சாத்திரங்களில் சொல்லப் பட்டபடி நடந்து கொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவனுடைய கடமை - தர்மம் ஆகும் என்பதே (கோட்சே அளித்த வாககு மூலத்தின்) அடிப்படையாக இருந்தது. உள் ளத்தைத் தொடும் வகையில் வரலாற்றுச் சான்றுகளை அவர் மேற்கோளாக எடுத்துக் காட்டினார். தாய்நாட்டைக் காக்க வேண் டும், தாயகத்தைக் காப்பதற்காக உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும் என்று இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பகவத் கீதையிலிருந்து போர்க்களத்தில் நான் போரிட்டு உயிர்களைக் கொல்ல வேண்டுமா என்று கிருஷ்ணனிடம் அர்ச் சுனன் கேட்க, அந்தக் கேள்விக்கு கிருஷ் ணன் அளித்த பதில்களில் சிலவற்றைக் கூறி உணர்ச்சிகரமாகத் தனது உரையை முடித்தார்.”

நீதிமன்றத்தில் கோட்சேயின் வாக்கு மூலம் -  இந்து மதத்தில் அவன் கொண்ட வெறிதான் அவனைத் தூண்டுகிறது என்பது வெளிப்படை.

“மனித குலத்தின் நன்மையைக்கருதியே அந்தச் செயலை நான் செய்ய நேர்ந்தது. இலட்சக்கணக்கான இந்துக்களுக்கு அழி வைத் தருகின்ற கொள்கையைக் கொண்டி ருந்த ஒருவரைத்தான் (காந்தியை) துப்பாக் கியால் நான் சுட்டேன்” என்கிறானே.

இந்து மதம்தான் அவனைத் தூண்டியது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா? அப்படி இருக்கும்போது கோட்சேயை இந்து தீவிரவாதி என்பதில் என்ன தவறு?

(5) இந்து மதமே அடிப்படையில் வன்முறையைத் தூண்டக் கூடியதா?

ஆம், அதிலென்ன அய்யப்பாடு? இந்து மதக் கடவுள்களே சண்டைப் போட்டிருக் கின்றனவே - கொலை செய்திருக்கின் றனவே - கற்பழித்து இருக்கின்றனவே -

மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமன், சூத்திரன் சம்புகன் தவமிருந்தான்; அதனால் வருண தருமம் கெட்டுவிட்டது என்று கூறி, வாளால் அவனை வெட்டிக் கொல்லவில் லையா?

கிருஷ்ண அவதாரம் என்ன சொல்லு கிறது? தன் சொந்த பந்தங்களைக் கூடத் தாட்சண்யமின்றி கொல்லு, அதுதான் யுத்த தர்மம் என்று அர்ச்சுனனுக்கு அறிவுரை கூறவில்லையா?

நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனைக் கொலை செய்யவில்லையா?

நல்லாட்சி புரிந்து வந்த மாவலி சக்ரவர்த் தியை மூன்றடி மண் கேட்டு சூழ்ச்சியால் தலையில் கால் வைத்து வாமன அவதாரத் தால் கொன்றவன் தானே மகாவிஷ்ணு.

பரசுராமன் அவதாரம் என்பதே கொலை செய்வதற்குத்தானே!

இந்த நிலையில் உள்ள ஒரு கொலைகார மதமாக இந்து மதம் இருக்கும்போது அந்த மதத்தைச் சேர்ந்த ஒரு கோட்சேயை மட்டும் தீவிரவாதி என்று சொன்னால் போதுமா? அடிப்படையாகவே  பயங்கரவாதம், தீவிர வாதம் எல்லாம் பொருந்தக் கூடியது தான் இந்து மதம்.

வருண தருமப்படி நடக்கவில்லையானால், ஆயுதம் எடுத்துப் பிராமணன் போ£ரிட வேண்டும் என்கிறதே மனுதர்மம்  (அத்தியாம் 8, சுலோகம் 348)

பெண்களையும், பிராமணர் அல்லாதாரை யும் கொல்லுதல் பாதகமாகாது (மனுதர்மம் அத்தியாம் 11, சுலோகம் 65)

பிராமணர்களுக்காகவே - உருவாக்கப் பட்ட மதம் தான் இந்து மதம் என்பது இன்னும் புரியவில்லையா?

தெய்வாதீனம் ஜகத் சர்வம்,


மந்த்ரா தீனம் து தெய்வதம்


தன் மந்த்ரம் பிரம்மணா தீனம்


தஸ்மதத் பிரம்மணம் பிரபு ஜெய


இது ரிக் வேதம்.


(62ஆம் பிரிவு 10ஆம் சுலோகம்)


உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட் டது, கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது, மந்திரங்கள் பிராம ணர்களுக்குக் கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள் என் பதுதான் இந்த ரிக் வேத சுலோகத் தின் பொருள்.

இது அடிப்படைவாதம் அல்லவா?

நீதிமன்ற வாக்குமூலத்தில் நான் பிராமணன் என்று நாதுராம் கோட்சே குரலை உயர்த்திக் கூறியதன் பொருள் இப்பொழுது விளங்குகிறதா?

இந்த நிலையில் கோட்சே இந்துத் தீவிரவாதி என்று சொன்னது மிக மிக சாதாரணமானதே - அதற்கு ஊற்றுக்கண் அவன் நம்புகிற, மதிக்கிற, துதிக்கிற இந்து மதமே! இந்து மதமேதான்!

(6) கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று கதைக்கிறார்களே?

இது உண்மையல்ல என்பதற்கு ஆதா ரத்தை வேறு எங்கும் சென்று தேட வேண்டாம். காந்தியார் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே கொடுத்த பேட்டியே போது மானது.



இவர்கள் பாசிஸ்டுகள் இல்லையா?

குருஜி கோல்வால்கர் ‘வரையறுக்கப்பட்ட நமது தேசியம்’ (We or Our Nationhood Defined) என்ற ஒரு நூலையும் எழுதியுள்ளார்.

“இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக்கூடாது; அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழவேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல், குடிமக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்” என்கிறார் குருஜி.

இந்துக்கள் அல்லாதவர்கள் குடிமக்கள் உரிமையும் இன்றி வாழவேண்டுமாம்.

இப்படிப் பேசுகின்ற கும்பலுக்குத் தான் வரலாற்றில் பாசிஸ்டுகள் என்று பெயர்.

“சகோதரர்கள் அனைவரும் ஆர். எஸ்.எஸில் இருந்தோம். நாதுராம், தத்தத்ரேயா, நான், கோவிந்த் அனைவரும் வளர்ந்தது எங்கள் வீட்டில் அல்ல. ஆர்.எஸ்.எஸில்தான். எங்கள் குடும்பமே ஆர்.எஸ்.எஸ். தான். ஆர்.எஸ்.எஸில் அறிவார்ந்த ஆர்வலராக நாதுராம் இருந்தார்.

ஆர்.எஸ்.எஸை விட்டு வெளி யேறுவதாக தனது அறிக்கையில் நாதுராம் கோட்சே கூறியிருந்தார். ஏனெனில் காந்தியின் படுகொலைக் குப் பிறகு கோல்வால்கர் மற்றும் ஆர்.எஸ்.எசுக்கு சிக்கல்கள் ஏற்பட் டதால் அவர்களைக் காப்பாற்றுவதற் காக நாதுராம் இப்படி அறிவித்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் அவரை வெளியேற்றவில்லை.” (ஆதா ரம்: 1994 ஜனவரி 28 நாளிட்ட ‘ஃப்ரண்ட் லைன்’ இதழ்)

நாதுராம் கோட்சேயுடனான தொடர்பை எல்.கே.அத்வானி மறுத்தது பற்றி அதே பேட்டியில் கோபால் கோட்சே சொன்னது என்ன?

“அத்வானி கோழைத்தனமாகப் பேசுகிறார். சென்று காந்தியைக் கொன்று விட்டுவா என்று நாதுராமுக்கு ஆர்.எஸ். எஸ். உத்தரவிடவில்லை என்று அவர் கூறுகிறாரா?” என்று பதிலடி கொடுத்தார்.

இதுவும் போதாது என்றால் ஆர்.எஸ். எஸின் அதிகாரப்பூர்வமற்ற நாளேடான ‘தினமலரை’ சாட்சிக் கூண்டில் ஏற்றினால் ஏற்றுக் கொள்வார்களா?

“நாதுராம் கோட்சேயின் அருமைத் தம்பி ஆர்.எஸ்எஸின் தாய்மை இயக்கமான இந்து மகா சபையின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் பேட்டியளித்த போது ஆர்.எஸ்.எஸ். தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டன் என்றால் தன் வாழ்நாள் முழுதும் - அதில் முழு மூச்சாக இருக்க வேண்டும். இதற்கு எனது அண் ணன் நாதுராம் கோட்சேவை உதாரணமா கக் கூறலாம் என்று கூறியுள்ளார்” (‘தின மலர்’, 14.2.1988 திருச்சி பதிப்பு). இதற்கு என்ன பதில்?

மொரார்ஜி தேசாய் என்ன சொல்லு கிறார்?

காந்தியாரின் படுகொலையைப் பற்றி அன்றைய பம்பாய் பிரதமர் மொரார்ஜி தேசாய் தனது சுய சரிதையில் எழுதுகிறார்:

“ஜனவரி 30ஆம் நாள் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்த போது பாபுஜி (காந்திஜி) சுடப்பட்டார். ஒரு கை துப்பாக்கியிலிருந்து வெளியேறிய மூன்று தோட்டாக்களை தன் மார்பில் தாங்கிய அவர் நிலத்தில் சாய்ந்தார். ஒரு சில நிமிடங்களுக்குள் அவரது உயிர் பிரிந்து விட்டது. நாதுராம் கோட்சே என்கிறவன் தான் கொலையாளி. இவன் புனேயைச் சேர்ந்த ஓர் ஆர்.எஸ்.எஸ். ஊழியனும், ஒரு பத்திரிகையின் ஆசிரியனும் ஆவான்” (Story of my life - by Morarji Desai, page 248)

காந்தியாரின் செயலாளர் என்ன எழுதுகிறார்?

காந்தியாரின் செயலாளரான ப்யாரிலால் நையார் எழுதிய “மகாத்மா காந்தி கடைசிக் கட்டம்” (பக்கம் 70) எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“வெள்ளிக்கிழமையன்று நல்ல செய்தி வரும். எனவே ரேடியோவைத் தொடர்ந்து கேட்கலாம் என்று ஆர்.எஸ்.எஸ். உறுப்பி னர்கள் சில இடங்களில் ஏற்கெனவே கூறியிருந்தார்கள்; அது மட்டுமல்ல; காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பல இடங் களிலும் இனிப்புகளை வழங்கிக் கொண்டா டினார்கள்” என்று காந்தியாரின் செயலாளர் எழுதியுள்ளாரே!

கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எழுதியது அவமதிப்பு குற்றமல்ல: உயர்நீதிமன்றத் தீர்ப்பு

காந்தியார் கொலை செய்யப்பட்டது பற்றிய செய்திக் கட்டுரையை வெளி யிட்டு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் கொலைகாரரான நாதுராம் விநாயக கோட்சே என்றும் வெளி யிட்டமைக்காக "இந்தியா டுடே'' ஏட்டின் அருண்பூரி, பிரபு சாவ்லா, மோகினி புல்லர் ஆகி யோர்மீது தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்து பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

"இந்தியா டுடே'' ஏட்டின் முதன்மை ஆசிரியர், ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது அவமதிப்பு வழக்கு ஒன்றினை முகேஷ் கார்க் என்பவர் 2004 இல் தொடர்ந்திருந்தார். இதனை ஏற்று மேற்கண்ட மூன்று பேர்களுக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பத்திரிகையாளர் மூவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பத்திரிகையாளர்களுக்காக மூத்த வழக்குரைஞர் ஆர்.எஸ். சீமா வாதாடி னார். செய்திக் கட்டுரை அவமதிப் பானது எனக் கருத முடியாது. ஆர்.எஸ். எஸ். இயக்கத்தைக் குறைகூறி எதுவும் எழுதப்படவில்லை என வழக்குரைஞர் கூறியதை நீதிபதி மகேஷ் குரோவர் ஏற்றுக் கொண்டார்.

“கட்டுரையைப் படித்துப் பார்த்தால், நாதுராம் கோட்சேயை ஆர்.எஸ்.எஸ். காரர் என எழுதியிருக்கிறார்கள்; ஆர். எஸ்.எஸ். இயக்கம் இந்து தேசிய இயக்கம் எனவும் எழுதியிருக்கிறார்கள். வரலாறும் வரலாற்றில் இடம் பெற்ற வர்களும் உயர்ந்து நின்றாலும் பிற் காலத்தவர்களால் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பர். அந்த வகையில் கேட்சேயைப்பற்றிய பின்புல ஆய்வு செய்து எதனால் நாட்டின் தந்தையான காந்தியாரைக் கொலை செய்தார் என்பதையும் ஆய்வது வழக்க மானதே. அப்படி ஆராயும்போது, அவ ரும் அவர் சார்ந்திருந்த இயக்கத்தி னைப் பற்றியும் குறிப்புரைகள் எழுதப் பட்டுள்ளன'' என நீதிபதி குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ்.சின் உறுப்பினர் என்னும் முறையில் கோட்சே பற்றி எழுதப்பட்டதை அவமரியாதையானது என்றோ, அவமதிப்பானது என்றோ கருத முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி வழக்கையும் பத்திரிகையாளர் களுக்கு வழங்கப்பட்ட அழைப்பாணை யையும் ரத்து செய்து ஆணையிட்டார்.

"ஒரு கட்டுரையை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். இந்தக் கட்டுரை சாதாரண வாசகரின் மனதில் எம்மாதிரி எண்ணங்களைத் தோற்று விக்கும் என்பதை ஆயும் கடமை நீதி மன்றத்துக்கு உண்டு. போலித்தனமான ஆள்கள் தம் குருட்டுக் கண்களால் பார்த்தால் மட்டுமே இக்கட்டுரை அவதூறானது எனக் கூறுவார்கள்” என்று மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே வார்த்தைகளில் கூற வேண்டுமானால் காந்தியா¬க் கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லுபவர்கள் கோழைகளே!

(7) ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது தன் நிலைப்பாட்டில் மாற்றம் கண்டுள்ளதா?

மாற்றமாவது மண்ணாங்கட்டியாவது.

‘தினமணி’ ஏட்டில் (16.10.2000) ஒரு செய்தி வெளி வந்துள்ளது.

ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத் வானி, உ.பி.முதல்வர் ராம்பிரகாஷ் குப்தா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

நிறைவு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் ஆற்றிய உரை விவரம்:

“பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தையும், பிற மதங்களின் கருத்தையும் பிற மதங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் முஸ்லீம்களும், கிறித்தவர் களும் ஏற்று, தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். சிறீராமபிரான், சிறீகிருஷ்ண பகவான் ஆகியோருடைய ரத்தம் தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக் கிறது என்பதை முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று கூறவில்லையா?

வேறு ஏடல்ல ‘தினமணி’யே இந்தச் செய்தியை வெளி யிட்ட பின்னர் பொழிப்புரைகளைத் தேடி ஓடி ஒளிய முடியாது.

இன்றைக்கு ராமராஜ்யம் அமைப்போம் என்றும், இந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்றும் கூறி வருபவர்கள் தானே இவர்கள். இவர்கள் கூறும் ராமராஜ்ஜியம் என்பது சூத்திரன் என்று கூறி சம்புகனை ராமன் வெட்டிக் கொன்றது தானே!

இவர்களின் இந்து ராஜ்ஜியம் என்பது பிராமணன் சூத்திரன் என்ற வருண தருமத்தை அடிப்படையாகக் கொண்டதுதானே!

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நாதுராம் கோட்சே பற்றி சொன்ன கருத்து, நூற்றுக்கு நூறு உண்மை - வரலாற்றில் கல்வெட்டாகப் பதிக்கப்பட்ட பேருண்மையாகும்.

பாலத்திற்குக் கோட்சே பெயர்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வர் நகரத்தின் புதிய பாலத்திற்கு கோட்சே பெயர் சூட்டினார்கள்.   ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் புதிதாக கட்டப்பட்ட பாலத்திற்கு வசுந்தரா ராஜே தலை மையில் இருந்த பாஜக அரசு நாதுராம் கோட்சேவின் பெயரை சூட்டியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வர் நகரின் தேசியநெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது, இந்த மேம்பாலம் மாவீரன் பகத் சிங் நினைவு பூங்காவின் மேலே செல்வதால் இந்த பாலத்திற்கும் பகத்சிங் பாலம் என்று பெயர் சூட்ட சமுக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்திருந்தனர். இந்த நிலையில் இந்தப்பாலம் 4.2.2015 அன்று திறக்கப்பட இருந்த நிலையில் அதிகாலை அப்பாலத்திற்கு ராஷ்டிரவாதி நாதுராம் கோட்சே (தேசியவாதி நாதுராம்கேட்சே பாலம்) என்று பெயர் சூட்டப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கேட்ட போது இது தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கீழ் வருவதால் எங்களுக்கும் அப் பெயர் சூட்டிய நிகழ்விற்கும் தொடர்பில்லை என்று கூறிவிட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக மாநில அரசு தரப்பிலிருந்தும் அல்வர் பாஜகசட்டமன்ற உறுப்பினர் தரப்பிலிருந்தும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் அல்வார் மகாராஜாவின் வம்சத்தவர்கள் இந்த பாலம் கட்ட பெரும் தொகை கொடுத்ததாகவும் ஒருவேளை, அவர் களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த பெயர் சூட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இன்றைக்கும் இந்த நிலையில்தான் ‘இந்து’ மதத்தினர் இருக்கின்றனர்.

மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையி லிருந்து பிணையில் வந்த பிரக்யா சிங் என்ற சாமியாரிணி - கோட்சே மகா புருஷன் என்று கூறியுள்ளாரே - கடும் எதிர்ப்பின் காரணமாக மன்னிப்புக் கேட்டுள்ளார் என்றாலும், இவர்களின் உண்மையான மனநிலை எத்தகையது என்பதைச் சிந்திப்பீர்களா!

-  விடுதலை ஞாயிறு மலர், 18.5.19

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...