திங்கள், 30 அக்டோபர், 2017

சமஸ்கிருதம் பற்றி-ஒரு சாட்டையடி கட்டுரை


- பேராசிரியர் ராஜேந்திர பிரசாத் சிங் -



பீகார் மாநிலம் கயாவில் நடந்த கலாச் சார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய விவ சாயத்துறை  பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் ராஜேந்திரப் பிரசாத் கூறியதாவது, இன்று பல தளங்களில் சமஸ் கிருதம் இந்தியாவில் மிகவும் பழைமை யான மொழி என்று கூறப்பட்டு வருகிறது, இது உண்மையல்ல, சமஸ்கிருதம் பழைமை யான மொழி என்றால் இந்தியா முழுவதும் பொதுப்பழக்கத்தில் இருந்த பிரகிருத மொழியில் எந்த ஒரு இடத்திலும் சமஸ் கிருதம் பற்றிய ஒரு சிறிய குறிப்புகள் கூட இல்லை. ஒரு மொழி என்பது அன்றைய வாழ்வியல் நடைமுறையில் ஏற்பட்ட தாக் கத்தை பதிவு செய்யும் ஒன்றாக இருக்கும். இன்றைய இந்திமொழியில் நிறைய சமஸ் கிருத வார்த்தைகள் உள்ளது, ஆனால் அது பொதுவில் பேசுவதற்கேற்ப வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கூட நேரடி சமஸ்கிருதம் பேச்சு மொழியாக வரவில்லை, வரமுடியாத நிலையில் உள்ளது.

இதிகாசங்கள் எனப்படும் வேதம், ராமா யணம், மகாபாரதம் இதர சமஸ்கிருத கதை கள் உயர்குடியினரிடம் மட்டுமே புழக்கத் தில் இருந்தன. ஆகையால் முந்தைய காலங்களில் சமஸ்கிருத தாக்கம் அதிக மான மக்களிடையே எந்த ஒரு தாக்கத்தை யும் ஏற்படுத்தவில்லை, பொதுமக்களி டையே அதிகம் பிரபலமாக இருந்த நாத்திக கவிஞரான கபீர்தாஸ், நாதபந்தாஸ் (லிங்காயத்), ராமனந்தா போன்றோர்களின் பாடல்களில் சமஸ்கிருதம் எந்த இடத்திலும் காணப்படவில்லை. இவர்களைத் தொடர்ந்து பின்வந்த பிரபல கவிஞர்களின் பாடல்களிலும் சமஸ்கிருத வார்த்தைகள் இல்லை. இதிலிருந்து ஆயிரம் ஆண்டுக ளுக்கு முன்பு கூட சமஸ்கிருதம் வழக்கத் தில் இல்லாத மொழியாகவே இருந்தது, அன்றும் இன்றும் சமஸ்கிருதம் ஒரு நிழல் மொழியாகவே இருந்து வருகிறது.

கிறிஸ்துவிற்கு முன்பான எந்த ஒரு பழைமையான பொதுவில் புழக்கத்தில் இருந்த மொழிகளிலும் சமஸ்கிருதம் காணப் படவில்லை, சமஸ்கிருத எழுத்துக்கள் கிறிஸ்துவிற்கு பிறகுதான் முழு வடிவம் பெற ஆரம்பிக்கிறது, அசோகரின் காலத் திலும், சந்திரகுப்த மவுரியாவின் காலத் திலும் சமஸ்கிருதம் பொதுமொழியாக இருந்ததில்லை, பிராகிருதம் மற்றும் பாலி மொழியே வெகுஜனமக்களின் மொழியாக இருந்தது,

மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிய தொல்பொருள் ஆய்வுகள் மிகவும் முக்கிய மான ஒரு சான்றாக உள்ளது, ஆனால் இந்தியாவில் தொல்பொருள்சான்றுகள் அனைத்தும் குறிப்பிட்ட நபர்களின் ஆதரவு தளமாக மாற்றப்பட்டுவிட்டது, இப்படி மாற்றப்பட்டதால் சமஸ்கிருதம் பற்றிய ஒரு தெளிவான நிலையை அவர்களால் கூட நிலை நிறுத்த முடிய வில்லை. உண்மையில் இந்திய தொல் பொருள் ஆய்வாளர்கள் இன்றுவரை இல்லாத ஒன்றை நிலைநிறுத்த பாடு கின்றனர். ஆய்வுகளைப் பொறுத்த வரை, இல்லாத ஒன்றை என்றுமே நிலை நிறுத்தமுடியாது. உண்மையை மறைக்க முயலும் போது முழுமை பெறாத ஒரு ஆய்வாகவே இருக்கும். ஆகவே தான் இந்தியாவில் இன்று வரை சமஸ்கிருதம் குறித்த உறுதியான சான்றுகளை யாராலும் தரமுடிய வில்லை என்று கூறினார்.

- தகவல்: சரவணா ராஜேந்திரன்

-விடுதலை ஞாயிறு மலர்,28.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...