சனி, 11 நவம்பர், 2017

ஆரியர்களின் பூர்வீக நாடு எது?


- பொறியாளர் பி.கோவிந்தராசன்

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கனியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது. தென்னாடு உடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!  தென்னிந்தியரின் /திராவிடரின் / சிவனடியாரின் பரந்த மனப்போக்கினை தெரிவிக்கின்றது.

இத்தகைய தென்னிந்தியரின் நாகரிகத்திற்கு மாறானது ஆரிய நாகரிகம். ஆரியர் உருவாக்கியது வேதமதம். இந்த  மதத்தின் வேதங்களை ஆரியர் தவிர மற்றவர்கள் படித்ததால் கொடுந்தண்டனை. வேதமதத்தில் ஆரியர்களே முதல் வர்ணத்தினர். ஆரியர்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்ய வேண்டும். ஆரியர்களின் கடவுள்களுக்கு ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். சமஸ்கிருதம் தவிர இதர மொழிகள் மிலேச்ச மொழிகள் என்று கூறப்பட்டது. ஆரியர்கள் அல்லாதார் மிலேச்சர்கள், தஸ்யூக்கள், தாசர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவ்வாறு பல சிறப்புகளை உடைய ஆரியர்களால் இந்தியர்களுக்கு கிடைத்த பயன்கள் என்ன? இந்த ஆரியர்கள் இந்திய நாட்டை முன்னேற்ற எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள்? இது குறித்த பல செய்திகளைக் கீழே காணலம்.

அய்ரோப்பிய வரலாற்று ஆசிரியரின் நூல்:

ஆடம் ஹார்ட் டேவிஸ் என்று வரலாற்றாளர், “History” என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். சமீபத்தில் இவரும் இவரது நண்பர் நாத்திகர் டாக்டர் சூசன்பிளாக்மோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை பெரியார் திடலில் சந்தித்து உரையாடினார். (விடுதலை நாளிதழ் 4.2.2012) இவர்கள் இருவரும் பகுத்தறிவுவாதிகள்.

ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூலில் எவ்வாறு ஆப்பிரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள், இந்தியர்கள், அமெரிக்கர்கள் அடிமைப்படுத்தப் பட்டார்கள் என்பதை விரிவாகக் கூறியுள்ளார். அடிமைப்படுத்தப்பட்டவர்கள் எவ்வாறு விடுதலை பெற்றார்கள் என்பதையும் விவரிக்கிறார். அந்த நூலில் ஆரியர்கள் எவ்வாறு இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்பதை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“The origin of (Hindu) religion can be traced to about 1500 BCE when it is believed that Aryan horseman invaded from central Asia, the indus valley, in Northern India accompanied by creator god Indra and a pantheon of lesser deities. These were the vidic gods who feature in Vedas, the 3000 years old scaret texts, that are central to the development of Hinduism.” The religion evolved to focus on senior deity called Brahma, Vishnu creator and Shiva the destroyer along with their consorts or sakthis From 6th century BCE Brahminism become the dominant form of Hinduism and triggered the composition of Brahminic epic, and puranic literature including the great texts of Mahabharata and Ramayana (கலைஞர் தொலைக்காட்சியில் எனது நேர்காணலில் நாள்: 02.09.2011 சொல்லியவை)

மேலே கண்ட வரிகளில் தெரிவிப்பது கீழ்வருமாறு. ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இந்திரன் என்ற முதன்மைக் கடவுளையும், பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் (சிவன்) போன்ற உபக்கடவுள்களையும், அவர்களின் மனைவிகளையும் உள் அடக்கிய பல்வேறு கடவுள்களையும் இந்தியாவிற்கு கொண்டு வந்தார்கள், இந்த கடவுள்களின் உதவியால், பின்னர் பிராமணீயம் இந்தியாவில் மேலோங்கி இருந்தது...

பாரசீக மொழியில் இருந்து மதக்கடவுள்கள்:

சிரியா நாட்டைக் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள் அதன்பின் இந்தியாவிற்குள் வந்தபின் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். எனவே பாரசீக மொழியில் உள்ள கடவுள் பெயர்களை ஒரு பாரசீக அகராதியில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த பாரசீக அகராதியின் பெயர் “Muslim and Parsi Names” இதை எழுதியவர்கள் திருமதி. மேனகாகாந்தி மற்றும் பேராசிரியர் ஓசைர் ஹுசைன். இந்த நூலில் ஒவ்வொரு சொல்லிற்கும், சொல் பெறப்பட்ட மொழிகள் _ Arabic, Avestan, Hindustani, Hebrew, Persian, Pazand, Phalavi Syria, Turkish, Not available (அரபி, அவெஸ்தன் ஹிந்துஸ்தானி, ஹிப்ரு, பாரசீகம், பாலவி, பசந்த், துருக்கி, சிரிய) விவரங்கள் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்பட்ட மதம், அரசியல், குறித்த பாரசீக சொற்களை தொகுத்து கீழே உள்ளவாறு விவரிக்கப்படுகிறது.

பாரசீக மொழியும் ஆரியரும்:-

வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தார். இவர் அய்ரோப்பிய மொழிகள், ஈராணிய மொழிகள், இந்திய மொழிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அவைகளை வகைப்படுத்தினார். அதன்படி பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் அய்ரோப்பிய மொழி குடும்பத்தை சார்ந்தது எனக் கண்டறிந்தார் மற்றும் அதன் உட்பிரிவான இந்தோஇராணிய மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்றும் கண்டறிந்தார். ஒரே மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழியான பாரசீக மொழி ஆரியரின் நாகரிகத்தினைப் பற்றியும் பூர்வீகத்தைப்பற்றியும் பல சுவையான வரலாற்று செய்திகள் தருகின்றன.

அவைகள் கீழே தரப்பட்டுள்ளன. (பாரசீக சொற்கள் தொகுப்பு பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது)

1. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருமுன் சில காலம் பாரசீகத்தில் தங்கி இருந்துவிட்டு பின்னர்தான் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். இது சுமார் கி.மு.1500இல் நடந்தது. இதன்பின் இஸ்லாமிய மதம் தோன்றி இந்தியாவுக்கு கி.பி.800இல் பரவியது. பாரசீக நாட்டிலிருந்து கஜினி முகம்மது (1012) படையெடுதது வந்தார். இறுதியாக தில்லியில் டில்லியில் சுல்தான்கள் ஆட்சி (கி.பி.1206-_1526) நடைபெற்றது. பின்னர் முகலாயர் ஆட்சி 1857 வரை நடந்தது. முகலாயர் ஆட்சிக் காலத்தில் பாரசீகர்கள் பெருமளவில் இந்தியாவிற்குள் வந்தனர். முகல் என்ற சொல்லே பாரசீக சொல் ஆகும். இது மங்கோலியரை குறிக்கும். பாரசீக மொழியின் தொடர்பு இந்திய வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.

2. பாரசீகரின் மத நம்பிக்கைகளும், ஆரியரின் மத நம்பிக்கைகளும் பெருமளவில் ஒற்றுமை உடையவை. உதாரணம், ஈராணியரின் தொண்மையான மொழியான அவெஸ்தாவிற்கும் ரிக் வேதத்திற்கும் மிகவும் ஒற்றுமை உள்ளது.

3. வேத கால கடவுள்களான இந்திரன், வருணன், வாயு, மித்திரன் போன்றோர்களும், ரிஷிகளான வஷிஷ்டா, அகஸ்தியர், மரூத் போன்றவர்களும் பாரசீக மொழியில் இடம் பெற்றுள்ளனர்.

4. ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.மு.1600அய்ச் சார்ந்த கல்வெட்டுகளிலும் கி.மு.1400 சேர்ந்த மித்தாணி கல்வெட்டுகளிலும் காணப்படும் பெயர்களும், வேதகால கடவுள்கள் பெயரும் ஒத்துப் போகின்றன.

5. ஆரியர்கள், யாகங்கள் செய்தனர். தீயை வணங்கினர். பசுவை வணங்கினர். குதிரையை வணங்கினர். காமதேணு போன்ற மனித உருவம் + மிருகம் + இறக்கை உடைய பறவை உருவம் ஒன்றாக அமைந்த உருவங்களைப் பற்றிய சொல் தீயைப்பற்றி பல சொற்கள், யாகங்களைப்பற்றி பல சொற்கள் பாரசீக மொழியில் காணப்படுகின்றன.

6. இராமன், ஆரியன், ராணா, ராணி, இந்திரன், வருணன், இரான், சாமி (கடவுள்), ரங்கா ராகவன், ரகு, பீஹார், (Daeva) தேவா, மணி (கடவுள்), கந்தர்வா, கயா, லஷ்கரி, ஜலம், மன்னன், மந்த்ரம், மாரி(கடவுள்), கௌ போன்ற சொற்கள் பாரசீக மொழியில் இடம்பெற்று, அதற்குரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

7. பஞ்சாங்கம் என்ற ஆண்டுகாட்டியில் உள்ள அங்கம் பாரசீக சொல்லாகும். இதன் பொருள், காலம், பருவம் (Time) (Season) ஆகும். பஞ்ச என்ற சொல், அய்ந்து வகை ஆண்டு கணக்கீட்டு முறையைக் குறிக்கின்றது. பாரசீகத்தின் அன்பளிப்பு பஞ்சாங்கமாகும். இந்த பஞ்சாங்கத்தை வைத்து நாள் குறிப்பது. பூணூல் அணிந்த ஆரியர்களின் வேலை ஆகும்.

8. Gowpathi Sha = (கௌபதி+ஷா) = கௌபதி + ஷா = பசுபதி + மன்னன் (அ) அரசன். இந்த Pathi என்ற சொல் நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் என்ற பெயர் போன்றது.

9. Hom (ஓம்) என்ற சொல்லுக்கு, பாரசீக மொழியில் - யாக சடங்குகளில் பயன்படுத்தும் சாறு என்பதனை குறிக்கின்றது. இது சோமபானம் போன்றது.

10. Jal (ஜலம்) என்ற பாரசீக சொல்லுக்கு தண்ணீர் என்று பொருள். இன்று கூட ஆரியர்கள், தமிழர் திருமணங்களில் ஜலம் விடுங்கள் என்கிறார்கள்.

11. பாரசீக மொழியில் ஈரான் நாட்டினைக் குறிக்கும் சொல் Airan இந்த பாரசீக சொல்லுக்குப் பொருள் ஈரான் ஆகும். இந்த நாட்டை ஆரியர்களின் தாயகமாக இந்த பாரசீக அகராதியில் கூறப்பட்டிருக்கிறது.  இது ஆரியர்கள் பாரசீகம் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.

12. பாரசீக மொழி அகராதியில் ஆரியர்களின் மூதாதையர் பிறந்த நாடாக துர்கிஸ்தான் (Turkistan) அய் குறிப்பிடுகின்றது. ஆரிய இனம் தோன்றிய பகுதியின் பெயர் “Airyana Vaeja” இது துர்கிஸ்தான் நாட்டில் புல்வெளிகள் நிறைந்த பகுதியில், வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குதான் மேய்ச்சல் நாகரிகம் என்று அழைக்கப்படுகின்ற Stepi Culture என்று வரலாறு கூறுகின்ற நாகரிகம் தொடங்கியது. இந்த “Airyana Vaeja” என்ற இடம் பாரசீக மொழியில், Gaya/கயா வழங்கப்படுகின்றது. இந்த கயா என்ற சொல் அவெஸ்தான் மொழியில் முதலில் தோன்றியது.

13. துர்கிஸ்தானில் உள்ள கயா என்ற ஊரைப் போல பீகார் மாநிலத்தில் கங்கைக்கரையில் புத்தகயா உள்ளது. இது தென்னிந்திய ஆரியர்களுக்கு புனிததலமாகும். இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறந்தது என்று ஆரிய சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது ஆரியர்கள் துர்க்கிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.

14. உருது என்ற பாரசீக சொல்லுக்கு படை,  முகாம் (Camp) படைவீடு, சந்தை (மார்க்கெட்) என்று பொருள். இதன் அடிப்படையில் ஹுமாயுன் / முகலாயர் காலத்தல் படைவீரர்கள் சந்தையில் பேசிய மொழியே பிற்காலத்தில் இந்தி என்றும் உருது என்றும் அழைக்கப்பட்டன. இந்த மொழிகள் ஆரம்பத்தில் Campu Language என்று அழைக்கப்பட்டன. (Camp = உருது) (Camp=  பாசறை).

15. பாரசீகமொழியில், இந்தியாவில் வாசிக்கப்படும, தம்புரா, வீண்(ணா), வாத்ய (வாத்யம்) என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. வாத்யம் என்ற சொல் அவஸ்தன் நூலில் உள்ளது.

16. வீர் (Vir) என்ற சொல் பாரசீக மொழியில் உள்ளது. இந்த சொல்லே வடமொழியில் வீர்பூமி, பரம் வீர் சக்ரா போன்ற சொற்களில் உருப்பெற்றுள்ளது.

முடிவுரை:

1. துருக்கிஸ்தான் என்று அறியப்பட்ட பகுதியில் (துர்க்மேனிஸ்தான் அருகில்) இருந்து முதல் ஆரியர் தோன்றியதை இந்த அகராதி தெரிவிக்கின்றது. இந்த நூல் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த NDA அரசில் அமைச்சராக இருந்த திருமதி. மேனகா காந்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளதால், இந்த நூலில் ஆரியர் பற்றி சொல்லப்படும் செய்திகள் மற்றும் விளக்கங்கள் சிறப்புப் பெறுகின்றன.

2. பாரசீகத்திலிருந்து வந்த வேதகால கடவுள்கள், இந்திரன், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்கள் இந்தியாவில் பிராமணீயத்தை வளர்க்க உதவியதாக வரலாற்று ஆசிரியர் ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூல் “History” இல் தெரிவிக்கின்றார்.

3. கனிஷ்கர் காலத்தில் கல்வெட்டுகள் 1993இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டன. இதில் இராணிய மொழியை ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.

4. Helena Petroun Blavatsky தனது “Secret Doctrine” (1888) இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். யூதர்கள் ஆரியன் அல்லாதவர்கள் ஆபிரஹாம்_அய் சார்ந்தவர்கள். Abraham x-brham (பிரம்மன்=பிராமணர்) Abrham பிராமணனின் எதிர்பதம்.

5. பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கையை நாசி (NAZI) கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கை Aryanization ஆரியமயமாக்குதல் என்று பெயர். இதனால் இரண்டாம் உலகப்போர் ஹிட்லரால் நடத்தப்பட்டது. இந்த ஆரியமயமாக்கும் கொள்கைகயை (NAZI) அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா போன்ற நாடுகள் போரிட்டு தோற்கடித்தன.

6. ஆரியமயமாக்கும் கொள்கையை ஜெர்மனி கடைபிடித்ததால் “The American Hertage Dictionary of English Language” என்ற அகராதியில் ஆரியர் என்பவருக்கு கீழ்கண்ட விளக்கம் தந்துள்ளது. “It is one of the ironies of History that Aryan, a word nowadays referred to the blond haired, blue eyed, physical, ideal of NAZI Germany. Originally it referred to people looked different. Its history starts with Ancient Indo Iranian People, who inhabited parts of Iran, Pakistan, Afghanistan, India, Bangladesh.”

7. ஆரியர்கள் துர்கிஸ்தான் (துர்க்மேனிஸ்தான்) இருந்து வந்தார்கள் என்று அகராதி உருவாக்கிய மேனகா காந்தியும், ஆரியர்கள் நாசிகள் (NAZI) நாசகாரர்கள் என்று அகராதி எழுதிய அமெரிக்கப் பண்பாட்டு கழகமும் போற்றுதலுக்குரியவர்கள்.

-உண்மை இதழ், 1-15.5.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...