சனி, 13 அக்டோபர், 2018

கஜினி முகமது கொள்ளைக்காரன் என்றால் மராட்டிய சிவாஜி யார்?

ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்கு கேள்வி!


கஜினிமுகமது 18 முறை படையெடுத்து வந்து இந்தியாவின் செல்வங்களையெல் லாம் கொள்ளையடித்து சென்றான் என்ற வரலாற்றைச் சொல்லி இளைஞர்களுக்கு மதவெறி தூண்டும் சங்கிகளே! பதில் சொல்வீர்!

அவுரங்கசீப்பையும், இசுலாமியர்களை யும் வெற்றி கொண்ட சிவாஜி, தான் ஒரு சூத் திரன் என்பதால் மன்னனாக முடிசூட்டிக் கொள்ள முடியவில்லை. பார்ப்பனர்கள் அவனுக்கு பட்டம் சூட்டும் சடங்கை செய்ய மறுத்துவிட்டார்கள். காகபட்டர், சூத்திர னான சிவாஜியை சத்திரியன் ஆக்குவதாகச் சொல்லி பல்லாயிரம் கோடி பணத்தை  செலவழித்து எடைக்கு எடை நவரத்தினங் களை வாரிச்சுருட்டி கொண்டான். அதன்பிறகும் சிவாஜியின் தாயார் இறக்கவே, காகபட்டர் செய்த யாகம் சரியில்லை, நல்ல நேரத்தில் பட்டம் சூட்டப்பட வில்லையென்று கூறி நிச்சல் பூரி என்ற பார்ப்பான் மறுபடியும் அதே மாதிரி யாகம் செய்து, சிவாஜியிடமிருந்து ஏராள மான செல்வங்களை சுருட்டிக் கொண்டான்.

அதனால் மராட்டிய சிவாஜிக்கு பொரு ளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அவர் தென்னாட்டிற்கு படையெடுத்து வந்தார்.

வேலூர், செஞ்சிக் கோட்டைகளை கைப்பற்றிய சிவாஜி அங்கிருந்த செல்வங் களை கொள்ளையடித்தார்.

தஞ்சையை ஆண்ட வெங்கோஜியை சிறைப்படுத்திய சிவாஜி, ஆட்சியில் பங்கு கேட்டார். பின்னர் தமிழகத்தில் நுழைந்த சிவாஜி தெற்கே செல்லும் போது யார், யார் அந்தப் பகுதியில் பணக்காரர்கள் என்பதையும், ஒவ்வொருவரிடமும் எவ்வளவு தண்டப் பணம் வசூலிக்க வேண்டும் என்பதையும் விவரமாக தெரிந்து வைத்திருந்தார். தண்டப் பணத்தை கசக்கி பிழிந்து  வசூலிக்க  அதிகாரிகள் நியமிக்கப்பட் டனர். பணம் வைத்திருந்தார்கள் என்ற குற்றத்திற்காக அந்தப் பகுதி மக்கள் அனுபவித்த துயரம் அதிகம்.பணம் கொடுத்ததோடு அவர்கள் துயரம் நிற்க வில்லை. சிவாஜியின் படையுடன் 20 ஆயிரம் பேர் பேராசைமிக்க பார்ப்ப னர்கள் வந்தார்கள். அவர்களிடம் காணப் பட்ட பேராசை சொல்லில் அடங்காது. சிவாஜியின் படை அதிகாரிகளும், இரக்கம் சிறிதும் இன்றி பயணிகளையும், நகர வாசிகளையும் கொள்ளையடித்தனர். அவர்களிடம் அச்சம், இரக்க உணர்வும்  சிறிதும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட உள்ளூர்க் காரர்களும்  கொள்ளையடிக்க தொடங் கினர். மேலும் சிலர் கொள்ளையில் பங்கு கிடைக்கும்  என்னும்  ஆசையில் மராட்டிய படையில் சேர்ந்து கொண் டார்கள். கொள்ளையர் வெளிப்படை யாவே வெளியே வந்துமக்களை தாக்கி கொள்ளையடித்தார்கள். சிவாஜி எடுத்து கொள்ளாமல் விட்டு சென்றவற்றை மற்றவர்கள் அபகரித்துக் கொண்டார்கள்.

சிவாஜியின் படைகள் எந்தளவுக்கு மோசமாக நடந்து கொண்டார்கள் என்பதற்கு  உதாரணமாக ஒரு நிகழ்வை  குறிப்பிடலாம். தென்னாட்டின் மீது படை யெடுத்து செல்ல படைகளை அனுப்பி விட்டு பின்னால் சென்ற சிவாஜி வழியில் இருக்கும் கிராமங்கள் பாழடைந்து கிடப் பதையும், சில வீடுகள் பூட்டிக் கிடப்ப தையும்,சில வீடுகள் திறந்து கிடந்ததையும் , கிராமங்களில் ஆள் நடமாட்டம் இல்லாததையும் கவனித்தான். இந்நிலை யில் அவனுடைய குதிரை கட்டுக்கடங் காமல் காட்டுக்குள் ஓடிவிட்டது. அதனை அடக்கி கட்டுப்படுத்திக் கொண்டு திரும் பினார். களைத்து போன அவருக்கு பசியாய் இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். எதிரே குடிசை ஒன்று தென் பட்டது. அங்கு சென்று கதவைத் தட்டிய போது வயதான மூதாட்டி ஒருவர் வெளியே வந்தார். அவரிடம் சிவாஜி தாயே எனக்குப் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு அந்த கிழவி மராட்டியக் கொள்ளைக் காரர்கள் ஏதாவது விட்டு வைத்திருக் கிறார்களா என்று  பார்க்கிறேன். மீதம் ஏதாவது இருந்தால் சமைத்துத் தருகிறேன் என்று சொன்னார். வீட்டில் கொஞ்சம் அரிசி இருந்தது. அதை எடுத்துச் சமைத்து விருந்தாளிக்கு அவள் உணவு படைத்தார். திருப்தியாக சாப்பிட்ட சிவாஜி சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு முகாமிற்கு திரும்பினார்.

மறுநாள் இரண்டு வீரர்களை அனுப்பி அந்த மூதாட்டிக்கு வளையல் பரிசாக அனுப்பினார். அந்த வீரர்களைப் பார்த்தும், திடுக்கிட்ட அந்த  கிழவி மீண்டும் கொள் ளையடிக்க வந்துவிட்டீர்களா? என்று ஆத்திரத்துடன் கேட்டாள். அதற்கு அந்த வீரர்கள் தாயே நீங்கள் பயப்பட வேண்டாம். நேற்றிரவு நீங்கள் சிவாஜி மகாராஜாவிற்கு உணவு அளித்திருக் கிறீர்கள். அதற்காக அவர் உங்களுக்கு இரண்டு தங்க வளையல்களைப் பரிசாக அனுப்பியிருக்கிறார் என்று கூறி அந்த வளையல்களைக் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக உங்களிடமிருந்து ஏதாவது ஒரு நினைவு பரிசை வாங்கி வரச்சொல்லி சிவாஜி தெரிவித்துள்ளார் என்றார்கள். இருந்தால் பார்க்கிறேன் என்று உள்ளே சென்ற பாட்டி நேற்று மராட்டிய வீரர்கள் கொள்ளையடித்துவிட்டு போனதில் இந்த துடைப்பம்தான் மீதம் இருக்கிறது என்று துடைப்பத்தை கொடுத்திருக்கிறாள்.

இப்படி சிவாஜியின் படைவீரர்கள் துடைப்பத்தை தவிர மற்ற அனைத்தையும் கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள்.

சிவாஜி எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், இந்து சுயராஜ்யம் என்ற பெயரில் நடந்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்றும், சூரத்தையும், தமிழ் நாட்டையும் கொள்ளையடித்தது அவ் வளவு நியாயமாகத் தெரியவில்லை என்றும் வரலாற்று அறிஞர்கள்  தெரிவிக்கின்றனர்.

கஜினி முகமது படையெடுத்து சோமநாத புரத்தைக் கொள்ளையடித்துச் சென்றான் அதனால் அவன் இந்துமதத்திற்கும், இந்தியா விற்கும் விரோதி என்றும், இதனால் அவன் சார்ந்த முஸ்லீம்கள் அனைவரும் இந்துக் களுக்கு விரோதி என்றும் இளைஞர் களுக்கு கற்பித்து மதவெறியை தூண்டி வருகிறார்களே!

அப்படியானால் தமிழகத்தை கொள்ளை யடித்த சிவாஜியும் அவருடன் வந்த மராட்டியர்களும், தமிழர்களுக்கு எதிரிகள். அந்த சிவாஜிக்கு சிலை வைக்கும் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பா.ஜ.க. இந்து முன்னணியினர் தமிழர்களுக்கு எதிரிகள் என்று நாங்கள் சொல்லலாமா? இந்து ராஜ்யம் என்றால் இப்படி கொள்ளைய டிப்பதுதான். எனவே இந்துராஜ்யம் தமிழர்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று நாங்கள் சொன்னால் அதனை ஏற்று கொள்வீர்களா?

பெல்.ம.ஆறுமுகம்

- விடுதலை ஞாயிறு மலர், 29.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...