சனி, 13 அக்டோபர், 2018

‘சதி’ நடுகல் கண்டெடுப்பு



திருப்பத்தூர் அருகே சுந்தரம்பள்ளி யில் 12ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த சதி நடுகல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

திருப்பத்தூர், தூயநெஞ்சக் கல்லூரி யின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் க.மோகன் காந்தி, வீரராகவன், காணிநிலம் மு.முனிசாமி, ஜானகிராமன் ஆகியோர் மேற்கொண்ட ‘கள’ ஆய்வின்போது, நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது:

திருப்பத்தூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சுந்தரம்பள்ளி கிராமத் தில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வரலாற்று ஆவணமான சதி நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுந்தரம்பள்ளியிலுள்ள கரிவரதராஜப் பெருமாள் கோயில் அருகே 4 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட பெரிய பலகைக் கல்லில், போரில் வீர மரணம் அடைந்த வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய கொண்டை யுடன், காதுகளில் பெரிய காதணிகளுடன், வலது கையில் கத்தி ஏந்திய நிலை வீரன் உள்ளார். இடது கையில் குறு கத்தி ஒன்றை கீழே தொங்கவிட்ட நிலையில் உள்ளது. ஆடை மற்றும் ஆபரணங்கள் செதுக்கப் பட்டுள்ளன.

நடுகல் வீரனின் இருபுறமும் உடன் கட்டை ஏறிய 2 பெண்களின் உருவங்களும் உள்ளன.

வலதுபக்கம் உடன்கட்டை ஏறிய பெண் உருவம் வலது கையைத் தொங்கவிட்டும், காதுகளில் குண்டலங்களுடனும் காணப்படு கிறது. இடது பக்கம், வாரிமுடிக்கப்பட்ட கொண்டையும், இடது கையில் விசிறி போன்ற உடன்கட்டை முத்திரையும் உள்ளது.

வீரனின் இடதுபக்கத்தில் மற்றொரு பெண் உருவம் காணப்படுகிறது. வலது கையை மேலே உயர்த்திய நிலையில், இடதுபக்கம் கொண்டையிட்டு, காதுகளில் பெரிய குண்டலங்களுடன், இடது கையில் கள் குடுவை போன்ற முத்திரையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் வீரன் போரில் வீரமரணம் அடைந்த பிறகு இவரு டைய இரண்டு மனைவிகளும் இவரோடு உடன்கட்டை ஏறி உயிர் நீத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

- விடுதலை ஞாயிறு மலர், 22.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...