சிவகங்கை, ஆக.30 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வு பணியில் சுடு மண்ணால் செய்யப்பட்ட குழாய் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 13 -ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணியில் பழங்கால மக்கள் பயன்படுத்திய தொட்டி மற்றும் தண்ணீர் செல்வதற்கான வடிகால் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து28.8.2019 அன்று மேற்கொண்ட அகழாய்வின் போது சுடு மண்ணால் செய்யப்பட்ட பழங்கால குழாய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தண்ணீர் தொட்டி , தண்ணீர் செல்வதற்கான வடிகால் கண்டுபிடிப்பை தொடர்ந்து சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் புழக்கத்துக்கு தேவையான நீரினை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துவதற்கு இதுபோன்ற வடிகால் மற்றும் குழாய்களை பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- விடுதலை நாளேடு, 30.8.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக