வெள்ளி, 20 மார்ச், 2020

கிருஷ்ணகிரி அருகே 4,500 ஆண்டு பழைமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 18-  கிருஷ்ணகிரி அருகே 4500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடன பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி, மேலூர் முனீஸ்வரன் கோயில் அருகே பனி குண்டு பாறை அடியில், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி வர லாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவின் தலைவர் நாரா யணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு அரிய வகை பாறை ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அருங்காட்சியக காப்பாட் சியர் கூறியது: இது ஒரு அரியவகை பாறை ஓவியம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெண்சாந்து ஓவி யங்களே அதிகளவில் காணப்படு கிறது. அங்கொன்றும், இங்கொன் றுமாக செஞ்சாந்து ஓவியங்கள் காணப்படுகிறது. தற்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ள முழு ஓவியமும் வெளிறிய செஞ்சாந்து ஓவியம் ஆகும்.

7 மீட்டர் நீளத்துக்கு குழு நடனம் போன்று வளைந்து, வளைந்து காணப்படுகிறது. பல இடங்களில் பாறை கீழே உதிர்ந்து விட்டதால் தொடர் விட்டுப் போய் உள்ளது. இவை கி.மு 2000ஆம் ஆண்டில் வரையப்பட்டு இருக்கலாம். அதாவது 4 ஆயிரம் முதல் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்களாகும். பையம் பள்ளி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த புதிய கற்கால வீடு போன்றே இந்த பாறை ஓவியத்தில் ஒரு குடிசை காட்டப்பட்டுள்ளது. குதிரையின் உருவமும் உள்ளது. செவ்வக அமைப்பினுள் மனிதன் உள்ளது போல் காட்டப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- விடுதலை நாளேடு, 18.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...