• Viduthalai
உத்திரமேரூர், ஜூலை 24- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசரின் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள கோழியாளம் கிராமத்தில் பல்லவர் காலத்தை சார்ந்த 1400 ஆண்டு களுக்கு முற்பட்ட சைவ சமயத்தின் ஒரு பிரிவான லகுலீச பாசுபதத்தை நிறுவிய லகுலீசரின் சிலை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மய் யத்தினரால் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் கொற்றவை ஆதன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து கோழியாளம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது இச்சிலையை கண்டறிந்தனர்.
இதுகுறித்து கொற்றவை ஆதன் கூறிய தாவது: தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 20 க்கும் மேற்பட்ட லகுலீசர் உருவங்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட் டுள்ளன. இம்மாவட்டத்திலும் இதுதான் முதல் சிலை எனவே இதை அரிதாகவே நினைக்க வேண்டியுள்ளது. நாங்கள் கண்டறிந்த இந்த சிலையானது 95 சென்டிமீட்டர் உயரமும் 65 சென்டிமீட்டர் அகலமும் கொண்டு ஆடையின்றி சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் காணப் படுகிறது. இதன் தலையில் ஜடா பாரமும் இரு காதுகளில் அழகிய குண்டலங்கள் கழுத்தில் ஒட்டிய அணிகலனாக சவடியும் வலக்கையில் தண்டும், இடக்கையை தொடை மீது வைத்த நிலையில் தொப்புளின் கீழ் ஆண்குறி அருகே மலர் வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. இடது தோள்பட்டை மேலே படம் எடுத்த நிலையில் நாகத்தின் சிற்பம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக