திங்கள், 23 ஆகஸ்ட், 2021

900 ஆண்டு பழைமையான கல்செக்கு கண்டெடுப்பு


பெரம்பலூர், ஆக. 22-  பெரம்பலூர் அருகே வெங்கலம் கிராமத்தில் சுமார் 900 ஆண்டு பழை மையான கல்லால் ஆன எண்ணெய் பிழியும் செக்கு கண்டறியப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர் முனைவர் ம.செல்வபாண் டியன், சூழலியல் செயல் பாட்டாளர் ரமேஷ் கருப் பையா, சமூக ஆர்வலர் பா.வசந்தன் ஆகியோர் வெங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோயி லில் பகுதியில் நேற்று (21.8.2021) ஆய்வு மேற் கொண்டனர். அப்போது செல்லியம்மன் கோயி லின் முன்புறம் தரையில் பதிக்கப்பட்ட ஒரு கல் செக்கை கண்டறிந்தனர்.

இதன் உயரம் 33 செ.மீ. வெளிவிட்டம் 71செ.மீ. உள் விட்டம் 64 செ.மீ. செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீ, விட்டம் 20 செ.மீ ஆகும். செக்கின் பக்கவாட்டுப் பகுதியில் இரண்டு வரிக ளில்,  “மல்ல(டி) நாட்டான் னிடுவித்த(ச்) செக்குப் பந்தல் லம்பலம்“ எனும் எழுத்து பொறிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் ம.செல்வ பாண்டியன் தெரிவித்த தாவது: கல்செக்கில் காணப்படும் எழுத்தின் வடிவத்தைக் கொண்டு இது 11ஆம் நூற்றாண் டைச் சேர்ந்ததாக கருத லாம். பழங்காலத்தில் உணவுப் பொருள்களை அரைக்கவும், கோயில், வீடுகள், தெருக்கள் ஆகிய வற்றில் விளக்கு எரிக்க எண்ணெய் வித்துக்களிலி ருந்து எண்ணெயைப் பிழிந்தெடுக்கவும் செக்கு கள் பயன்பட்டன.

இதற்கென அரசர்கள், படைத்தலைவர்கள், செல்வந்தர்கள் ஆகியோர் கோயில் வழிபாட்டுக்கும், பொதுப் பயன்பாட்டுக் கும் கல்செக்குகளைச் செய்து தானமாக வழங்கி னர். பெரம்பலூர் மாவட் டத்தில் செஞ்சேரி, சத்திர மனை வேலூர் ஆகிய கிராமங்களில் இத்தகைய கல்செக்குகள் ஏற்கெ னவே கண்டறியப்பட்டுள்ளன. இதில் வெங்கலம் கிராமத் தில் உள்ள இந்த கல் செக்கு 11ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த மிகவும் பழைமையானதாகும்.

மல்லடி நாட்டான் என் பவர் இந்த கல்செக்கை செய்து கொடுத்திருக்கி றார். இவர் யாரென அறிய முடியவில்லை. பந்தல் அம்பலம் என்பது பந்தலுடன் கூடிய பொது இடமாகும். இது தற் போதைய செல்லியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியாக இருக்கலாம். வருங்கால தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றைப் பறைசாற் றும் இந்த அரிய வரலாற்று சின்னத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...