செங்கல்பட்டு,ஆக.29- செங்கல்பட்டு மாவட்டம், வல்லம் கிராமத்தில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை அப்பகுதியில் ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
கற்குவைகள் என்பவை பெருங்கற் கால மக்களின் நினைவுச் சின்னங்கள் ஆகும். அன்றைய காலத்து மக்கள் இறந்த வர்களை அடக்கம் செய்த இடத்தை அடையாளம் காண்பதற்காக, பல குறியீடுகளை அமைத்திருந்தனர்.
அந்த வகையில் செங்கல்பட்டு அருகே வல்லம் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில், ஏராளமான குன்றுகள் உள்ளன. இந்த குன்றுகளில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை சுமார், 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பெருங்கற்கால அடையாளங்களாக உள்ளன. இவ் வூரில், தொல்லியல் துறை முறையாக அகழாய்வு மேற்கொண்டால், இப்பகுதி யின் தொன்மை மற்றும் ஏராளமான புதிய தகவல்கள் வெளி உலகுக்கு தெரியவரும் என வரலாற்று ஆய்வா ளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழர் தொன்மை வரலாற்று ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த வெற்றித்தமிழன் கூறியதாவது: பெருங் கற்கால நினைவுச் சின்னம் என்பது இன்றும் நம் மக்கள் வழக்காடுகளில் காரியம், கல்லெடுப்பு என்று கூறுவ துண்டு.
இறந்தவர்களைப் புதைத்த இடத் திலோ அல்லது அவரது எலும்புகளைத் புதைத்த இடத்திலோ பெரிய கற்களைக் கொண்டு எடுக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை, பெருங்கல் சின்னங்கள் என கூறுகிறார்கள். இவை அமைக்கப் படும் முறையை வைத்து கற்குவை, கற் படை வட்டம், கற்பதுக்கை, கல்திட்டை, குத்துக்கல் என பலவகைகளில் பெயரி டப்படுகின்றன.
இறந்தவர்கள் நினைவாக அல்லது நினைவுச் சடங்குகளுக்கான கற்களைக் கொண்டு எடுக்கப்பட்ட சின்னங்கள் இவற்றுள் அடங்கும். மேலும், தாழியிலிட்டு புதைக்கும் சின்னங்களையும் பெருங்கல் சின்னங்களாக கருதப்படு கின்றன. இறந்தவர்களுக்காக அமைக் கப்பட்ட இவ்வகையான ஈமச்சின் னங்கள் குறித்து சங்க இலக்கியங்களில் தகவல்கள் உள்ளன.
பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் உலகின் பல நாடுகளிலும் காணப்படுகின்றன. மேற்கு அய்ரோப் பிய நாடுகள், பிரிட்டன் நடுநிலை நாடுகள் என இன்னும் பல இடங்களில் இவை காணப்படுகின்றன. அங்கெல் லாம் சின்னங்களை பாதுகாத்து ஆய்வு செய் கின்றனர்.
இப்படியான புராதன சின்னங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவ லாகக் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க வகையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் காணப்படும் பெருங்கற்கால சின் னங்கள், மிகவும் தொன்மையானது.
அப்படியான நினைவுச் சின்னங்கள் தமிழ்நாட்டில் மலைக்குன்று பகுதி களில் பரவிக் கிடக்கின்றன. நம் மண் ணுக்கு பெருமை சேர்க்கும் இப்பகுதிகளை பாதுகாக்க ஆய்வுகள் நடத்த வேண்டும். மேலும் இதுகுறித்த தகவல்களை அனைவரும் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைத்து தெரிவிக்க வேண்டும்.
பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய இந்த இடுக்காட்டினை தொல்லியல் துறை முறையாக ஆய்வு செய்யும்போது, இங்கு மேலும் பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் கிடைக்கக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக