புதன், 29 மே, 2019

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல் கருவிகள் கண்டெடுப்பு



கிருஷ்ணகிரி, மே 24- பர்கூர் அருகே 50 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய கற்கால மனிதன் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வ ரன் மற்றும் அவருடைய ஆய்வு மாணவர்கள் மஞ்சுநாத் மற்றும் கார்த்திக் ஆகியோர் தங்கள் முனைவர் பட்ட ஆய் வின் ஒரு பகுதியாக பர்கூர் ஒன்றியம் பாலேப்பள்ளி அருகே உள்ள ஏர்கெட் என்ற சிறிய மலையின் மேல் பகுதியிலும், மலையைச் சுற் றியுள்ள நிலப்பகுதிகளிலும் மீள் ஆய்வு செய்தனர்.

இது குறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதா வது:- கிருஷ்ணகிரி மாவட்டத் தின் தொல்லியல் வரலாற் றினை முனைவர் பட்ட ஆய்வுக்காக நானும், எனது மாணவர்களும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தொல்லியல் கள ஆய்வு செய்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக பாலேப்பள் ளியின் வடக்கு புறத்தில் உள்ள ஏர்கெட் என்ற மலைப் பகுதியிலும், அதனை சுற்றி யுள்ள நிலப்பகுதியிலும் கள ஆய்வு மேற்கொண்டோம்.

அப்போது அப்பகுதியில் பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப் பட்ட காலத்தை சேர்ந்த மேல்நிலை பழைய கற்காலம் அதாவது 50 ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட கல் ஆயு தங்களை சேகரித்தோம். இங்கு தற்போது கிடைத்துள்ள கைக் கோடாரிகள், வட்டக் கருவிகள், கிழிப்பான்கள், சிறிய கைக்கோடாரிகள், கோடாரிகள், சுரண்டிகள் மற்றும் முற்றுப்பெறாத கல் ஆயுதங்கள் அதிக அளவில் சேகரித்துள்ளோம்.

இதுபோன்ற கல் ஆயுதங் கள் சுமார் 60 முதல் 70 ஏக்கர் நிலப்பரப்பில் ஆங்காங்கே பரவி காணப்படுகிறது. இதனை வைத்து இப்பகுதி மேல்நிலை பழைய கற்கால மனிதனின் கல் ஆயுதம் செய்யும் இட மாக இருந்திருக்கிறது என் பதை திட்டவட்டமாக கூற முடிகிறது. மேலும் இதுபோன்ற கல் ஆயுதங்கள் பர்கூர், குண் டலகுட்டா மற்றும் கப்பல் வாடி போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. இங்கு கிடைத்துள்ள மேல்நிலை பழைய கற்கால கல் ஆயுதங் கள் அனைத்தும் குவாட்ஸ் வகை கற்களை கொண்ட கரடு முரடான உருவ அமைப்பை உடைய தாக காணப்படுகிறது. இவ் வாறு வரலாற்று பேராசிரியர் கூறினார்.

- விடுதலை நாளேடு 24. 5 .2019

ஞாயிறு, 19 மே, 2019

கி.மு.500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்பதுக்கை கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி, மே13, கிருஷ் ணகிரி மாவட்டத்தில் வர லாற்று காலத்திற்கு முந் தைய பெருங்கற்படைக்கால மக்க ளின் நினைவு சின்னங்கள் அதி கம் உள்ளது. முக்கியமாக கல் திட்டைகள், கல் வட் டங்கள், குத்து கற்கள், கற்பதுக் கைகள், வட்டப்புதை குழிகள் என பெருங்கற்கால நாகரிகத் தின் நினைவுச் சின்னங்கள் அனைத் தும் இங்கு உள்ளது. கிருஷ்ண கிரி கே.ஆர்.பி. அணை யில் கடந்த 40 ஆண்டுகளில் இல் லாத அளவிற்கு தண்ணீர் வற்றி யது.
இதையடுத்து, நீர்த்தேக்க பகுதியான பழைய பேயனப் பள்ளி கிராமத்தின் அருகில் உள்ள சிறு குன்றின் மேற்கு பகுதியில், கிருஷ்ணகிரி வர லாற்று ஆய்வு மற்றும் ஆவ ணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பெருங்கற் படைக் கால பண்பாட்டை சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவு சின்னங்கள் காணப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
பொதுவாக 3 பக்கங்களில் செங்குத்தான பலகை கற்களும், மேல் தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கிறது. இதன் கிழக்கு பகுதியில் உள்ள கல்லில் மட்டும் இடுதுளை காணப்படுகிறது. உடைந்த நிலையில் இருந்தாலும் கிழக்கு நோக்கிய கல்லில் துளை இருப்பது உடைந்த கற் பலகைகளில் இருந்து தெரிய வருகிறது. இங்கு 30 ஏக்கர் பரப்பளவில் சின்னங்கள் அமைந்துள்ள மய்யப்பகுதியில் 150 அடி நீளம், 150 அடி அக லத்தில் எல்லை போன்ற கற் களை அடுக்கி வைத்துள்ளனர்.
அத்துடன் இதில் 12 அடி நீளமும், 8 அடி அகலமும், 1.25 அடி உயரமும் உள்ள மிகப் பெரிய மூடுகல்லினை கொண்டு கற்பதுக்கை அமைந்துள்ளது. இது ஒரு தலைவனுக்கான ஈமச்சின்னம் என்பதை காட்டு கிறது. மேல் உள்ள மூடு கல் லின் எடை 2 டன் இருக்கும். அணை கட்டப்பட்ட பின் நீர்சூழ்ந்து அந்த இடம் தண் ணீரால் மேல் மூடு கல் அதிக எடை காரணமாக மற்ற 4 கல்லையும் கீழ் அழுத்தி, நில மட்டத்துக்கு சமமாக கீழ் இறங்கிவிட்டது.


இப்பகுதி மற்ற பகுதி களை விட சற்று மேடாகவும் உள்ளது. அண்மையில் சிதைக் கப்பட்டுள்ள ஒரு கற்பதுக் கையின் மய்யத்தில் கருப்பு சிவப்பு மற்றும் சிவப்பு வண்ண ஈமக் கலயங்களின் ஓடுகளும், இதை சுற்றி வட்ட வடிவில் கல்வட்டங்களும் காணப்படுகின்றன. இவைகள் கி.மு.500 ஆண்டுகளுக்கு முந் தைய காலத்தை சேர்ந்தது. அதாவது 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்வட்டங்களோடு கூடிய கற்பதுக்கை ஈமச் சின் னங்கள் அமைக்கப்பட்டு இருக்கலாம்.
-விடுதலை நாளேடு,13.5.19

சனி, 4 மே, 2019

பெரம்பலூர் அருகே 400 ஆண்டு பழைமையான கல்செக்கு கண்டுபிடிப்பு



பெரம்பலூர், மே 4- பெரம்பலூர் அருகே சுமார் 400ஆண்டு பழமையான கல் செக்கு. வரலாற்று ஆராய்ச்சியாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஆகியோரால் கண்டறியப் பட்டது மிகுந்த ஆச் சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறெங்கும் இவ்வளவு பழமையான செக்கு கண்டறியப் படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள சிவாலயங்களின் திருவிளக்கு பூஜை வழிபாடுகளுக்காக கல்செக்கு தானமாக செய்து கொடுக்க ப்பட்டுள்ளது கல்வெட்டு ஆராய்ச்சிகள் மூலம் தெரியவருகிறது.

இதில் நேற்று பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் செல்வபாண்டியன், அரியலூர் மாவட் டத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் செவ்வேல் ஆகி யோர் இயற்கை வேளாண் சாகுபடியாளரான எளம்பலூர் உப் போடை கார்த்திகேயன் என்பவருடன் பாளையம் கிராமத்திற்கு வந்து, அங்கு ஆர்சி தொடக்கப்பள்ளி, செபஸ்தியார் மேடை ஆகியவற்றின் நடுவே சுமார் 7அடி உயரமுள்ள 2 கல்செக்குகள் இருப்பதை கேள்விப்பட்டு நேரில் வந்து ஆராய்ச்சி மேற் கொண்டனர். அந்த ஆராய்ச்சியில் அவர்களுக்கு சுமார் 400 ஆண்டுப் பழமையான கல்செக்கு என்ற கல்வெட்டுத் தகவல் இருந்தது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

பிறகு ஆராய்ச்சியின் முடிவில் வரலாற்று ஆராய்ச்சியாளர் செல்வபாண்டியன் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் செஞ்சேரி, சத்திரமனை, வேலூர் ஆகிய கிராமங்களில் அப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களுக்கு விளக்கு பூஜைகளுக்கு எண்ணெய் வழங்க உபயமாக வசதி படைத்த நபர்களால் அக்காலத்தில் அந்தந்த ஊர்களின் பயன் பாட்டிற்காக கல்செக்கு செய்து கொடுத்திருப்பது தெரிய வருகிறது. இதில் மற்ற ஊர்களில் 20ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் காணப் பட்டாலும் பாளையத்தில் மட்டும் 393ஆண்டுகள் பழமை வாய்ந்த 17ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி பாளையம் கல்செக்கிலுள்ள கல்வெட்டை ஆராய்ந் தால் அதில், சோம சிறீ சாலிவாகன சகாப்தம், கிபி 1626 தை மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கி ழமை குரும்புலியூர் பஞ்சநதீஸ்வரர் தர்மசம்ரதனி அம்மன் நித்திய அபிசேகத்திற்காக, ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வீரம ரெட்டியார் குமாரர் சுப்பி ரெட்டியார் என்பவரே இந்த கல் செக்கினைச் செய்து கொடுத்திருக்கிறார். இந்தக் கல் செக்கைப் பயன்படுத்தும் பொதுமக்கள், அதிலிருந்து பெறப்படும் எண்ணெயில் அரைப்படி எண்ணெய் வீதம் குரும்பலூர் பஞ்சந்தீஸ்வரர் கோவிலுக்கு கொடையாக வழங்க வேண்டும் என அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இவை சிவன் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஒருஅடி உயர திரிசூலம் கல்வெட்டாக செதுக்கப் பட்டுள்ளது. 7அடி உயரத்திற்கும் 3அடி அகலத்திற்கும் உள்ளதாக வடிவமைக்கப் பட்டுள்ள கல்செக்கு அதிநவீனமானதாகக் காணப்படுகிறது. அது தற்போது பராமரிப்பின்றி கேட்பாரற்றுக் கிடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை இதனைப் பாதுகாத்தால் அடுத்து வரும் சந்ததிகளுக்கு தமிழர்கள் கல்செக்கினைப் பயன்படுத்திய விதம், தெரியவரும். இதுபோன்ற 400ஆண்டு பழமையான கல்வெட்டு வேறு இடங்களில் இதுவரை கண்டறியப் படவில்லை எனத் தெரிவித்தார்.

-  விடுதலை நாளேடு, 4.5.19

திங்கள், 22 ஏப்ரல், 2019

ஆதிச்ச நல்லூர் கூறும் அரிய தகவல்கள்



கடவுள் சாதி நம்பிக்கை தமிழனின் பண்பாட்டிலேயே இல்லை

நம் பண்டைய தமிழர் பண்பாடான மதுரை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியிலும், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியிலும் ஏறத்தாழ 5 கி.மீ. பரப்பளவு அலசி ஆராய்ந்ததில் கிடைத்த பொக்கிஷங்கள்



1. கழிப்பறை

2. நகைகள்

3. பானைகள்

4. கண்ணாடிகள்

5. பொம்மைகள்

6. முத்திரைகள்

7. கிணறுகள்

8. பெயர் கல் வெட்டு குறிப்புகள்

என மனிதர் களுக்கு தேவையான அனைத்தும்

கிடைக்காதவை

1. கோயில் , மசூதி, சர்ச் அல்லது வழிபாட்டு தலங்கள்...

2. சாமி சிலைகள், முப்பாட்டன் முருகன், ஜாதி குறியீடுகள், ஆண்ட பரம்பரை என்ற அலப்பறைகள்..

3. மத நூல்கள், பர்தா, முக்காடு..

4. ஓர் இறை கோட்பாடுகள், நூல்கள், நபிகளின் வரலாறுகள், சிலுவைகள், ...

5. பூஜை ஜாமானங்கள், ஓம் குறியீடு, ஹோமம் கூடம், காவிக் கொடி, பசுமாடு, ஆதியோகி, யோகா...

ஆக நம்மோட முப்பாட்டன்கள் எவரும் கடவுள், ஜாதி, கோத்ரம், மதநூல், நபிகள், பரிசுத்த ஆவி, பூஜை, அய்யர், மார்கம்ன்னா என்னவென்றே தெரியாமல் பல்லாயிர ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்கிறார்கள்.

ஜாதி, மத வெறியை தூக்கி வீசிட்டு தமிழனே போய் உங்க சொந்த பொழப்ப பாருங்க...

-  விடுதலை ஞாயிறு மலர், 13.4.19

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

பார்ப்பனனின் கேவலமான திருமண உறவு

பார்பனின் கேவலமான திருமண உறவு - அர்த்தமுள்ள இந்துமதம்...

கேரள நம்பூதிரி பார்ப்பன குடும்பத்தில் அண்ணன் திருமணம் முடிப்பான். அவனின் தம்பிகள், அதாவது அவனின் உடன்பிறந்த சகோதரர்கள் அண்ணனின் மனைவியோடு சேர்ந்து குடும்பம் நடத்துவர். தம்பிகள் வேறு திருமணம் செய்து கொண்டாலும் அண்ணன் மனைவியுடன் குடும்பம் நடத்துவது தொடர்ந்து நடக்கலாம்.

தாயின் சகோதரி (பெரியம்மா/சித்தி) மகன்களான ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் இவ்வுரிமை உண்டு. ஆனால், தந்தையின் சகோதரருடைய (பெரியப்பா/சித்தப்பா) மகன்களுக்கு இந்த உரிமை இல்லை.

அவ்வாறான தந்தையின் சகோதரரின் மகன்கள், தன் (பெரியப்பா/சித்தப்பா மகன்களான) சகோதரனின் மனைவியுடன் குடும்பம் நடத்துவது, பாதி விபச்சாரத்திற்கு ஒப்பாகக் கருதப்பட்டிருந்தது.

பார்ப்பன நம்போதிரி மூத்த சகோதரன் மட்டும் சொந்தம் ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் அண்ணன் மனைவியுடனும் மற்ற நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் அதிகமாக இருந்தனர்.

நம்பூதிரி மூத்த சகோதரன் பல மனைவிமார்களை மணம் முடிக்கலாம்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இரு சகோதரர்களுக்கு ஒரு மனைவி என்பது தண்டனைக்குரியக் குற்றமாக சட்டமாகி விட்டாலும் 2ஆம் நூற்றாண்டிலும் கூட, மூத்த சாகோதரரின் திருமணம் போது, 'அண்ணன்-தம்பிகள் இணைந்து ஊர்வலமாக வரும் முறை இன்றளவும் வழக்கத்தில் உள்ளது..

ஆதாரம் - (19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி - பக்கம் 120)(கொச்சி நாடின் வரலாறு, கெ.பி. பத்மநாப மேனோன் - பக்கம் 896) கேரள வரலாற்றில் இருண்ட ஏடுகள், பக்கம் 154.
- டக்ளஸ் முத்துகுமார்,
முகநூல் பதிவு,
10.1.18

பிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய மனித குலப் படிமங்கள் கண்டெடுப்பு



பிலிப்பைன்ஸ், ஏப். 18 பிலிப்பைன்ஸ் குகையொன்றில் பண்டைய மனித குடும்பத்தின் புதிய கிளையொன்று கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல் தெரிய வந்துள்ளது. அவை கிடைத்த இடமான லஸோன் தீவை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய கண்டு பிடிப்புக்கு ஹோமோ லஸோனென்சிஸ் என்று பெயரிடப்பட்டிருக் கிறது. இவர்கள் இன்றைய இன்றைய மனித குலத்தின் நேரடி மூதாதையர்களாக இருக்க வாய்ப்பில்லை எனினும் தூரத்துச் சொந்தங்களாக இருக்க 99 சதவிகித வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இவர்கள் வாழ்ந்திருந்த காலம் இன்றைக்கு 50,000 ஆண்டு களுக்கு முற்பட்டதாக இருக்கலாம். அன்று இந்த மனிதர்களின் உயரம் வெறும் 3 அடிகளே என புதன் அன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பானது மனித பரிணாம வளர்ச்சி குறித்த அறிவியல் கண்டுபிடிப்புக் கதைக்கு மேலும் சர்ச்சையைக் கூட்டியுள்ளது. குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் எனும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை சிதைப்பதாக இருக்கிறது இந்தப் புதிய கண்டுபிடிப்பு. ஏனெனில் மனித குலம் தோன்றிய காலங்களில் இருந்து பல விசித்திரமான வடிவங்களில் எல்லாம் எண்ணற்ற மனித குலங்கள் வாழ்ந்து மடிந்திருக்கக் கூடும் எனும் அய்யப்பாட்டுக்கு இந்தக் கண்டுபிடிப்பு வழிவகுத்திருக்கிறது.

நமது மூதாதையர்களாகக் கருதப்படும் ஹோமோசேபியன்கள் இப்போது ஒப்பீட்டளவில் தனியாக இந்த உலகில் வாழ்கின்றனர்.

தற்போது கிடைத்து வரும் புதிய மனித இனங்களைக் காண்கையில் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நாம் எதிர்பார்த்த மாற்றங்களைக் காட்டிலும் மேலும் அதிகமான மாறுதல்களைத் தருவனவாக உள்ளன என்கிறார் கனடா, லேக்ஹெட் பல்கலைக் கழகத்தின் மானுடவியல் துறை வல்லுனரான மேத்யூ டோச்செரி. இவர் மேற்கண்ட அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர் இல்லையென்ற போதும் ஒரு மானுடவியலாளர் எனும் அடிப்படையில் மேற்கண்ட கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.



2000 ல் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அர்மண்ட் சால்வடர் மிஜரிஸ் எனும் மாணவர் லஸோன் தீவிலிருக்கும் கல்லாவோ குகைப்பகுதிகளை பிலிப்பைன்ஸில் முதலில் விவசாயம் செய்த மனித இனம் எது எனும் ஆராய்ச்சிக்காக தோண்ட முற்படுகையில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் அவர் மேலும் ஆழமாக அந்தப் பகுதி நிலத்தைத் தோண்டுவது என முடிவெடுத்தார்.

இந்தோனேசியத் தீவுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் வாயிலாக கண்டறியப்பட்ட 60,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரம்மாண்டமான மனித உயிரினங்களுக்கு அன்றைய விஞ்ஞானிகள் ஹோமோ ஃப்ளோரெசியன்சிஸ் என்று பெயர் சூட்டியிருந்தனர். அவை சில அம்சங்களில் இன்றைய மனிதர்களின் இயல்புகளுடன் ஒத்துப் போவதாயிருந்தன. அத்துடன் அவர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் கற்கருவிகளை கையாளத் தெரிந்தவர் களாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இவ்வகை மனித உயிரினங்களில் வயது வந்தவை அனைத்தும் சுமார் 3 அடி மட்டுமே வளர்ச்சி கொண்டவையாகவும் மிகச்சிறிய மூளை கொண்டவையாகவும் இருந்தவை சந்தேகத்திற் கிடமானவையாக இருந்தன. அதன் காரணமாகவே இவர்களின் நிஜமான மூதாதையர்கள் யார் எனும் ஆராய்ச்சி இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை இவர்களின் மூதாதையர்கள் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஹோமினைன்களாக இருக்கலாம். அவர்கள் தான் உயரம் குறைந்த வர்களாகவும் சிறிய மூளை கொண்டவர்களாகவும் இருந்தனர்.

ஆனால் தற்போது பிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கும் படிமங்களில் பற்களும், கால் சிற்றெலும்புகளும் கிட்டத்தட்ட இன்றைய மனித குலத்தை ஒத்தவையாகவே இருக் கின்றன. அளவு தான் இடிக்கிறது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட எந்த ஒரு மனித குலத்தையும் விட இவை மிகச்சிறியவையாக இருக்கின்றன

- விடுதலை நாளேடு, 18.4.19

ஏலகிரிமலையில் கல்வெட்டு, கற்கோடரிகள் கண்டெடுப்பு



ஏலகிரிமலை, ஏப்.18 ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதியில் கல்வெட்டு மற்றும் கற்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி மற்றும் வரலாற்று ஆர்வலர் இரா.நீலமேகம் ஆகியோர் மேற் கொண்ட களஆய்வில் இவற்றை கண் டெடுத்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியது: ஏலகிரிமலையில் ஏராளமான பழங்காலத் தடயங்கள், நடுகல் மற்றும் கல்வெட்டுகள் தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அத்தனாவூரில் உள்ள பெருமாள் கோயிலில் திறந்த வெளியில் உள்ள இந்தக் கல்வெட்டும், கோயிலுக்குள் இருக்கும் கற்கோடரி களும் இம்மலையின் பழைமையான மரபைத் எடுத்துரைக்கும் வகையில் உள்ளன. 3.5 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட இந்தப் பலகைக் கல்லின் இரு பக்கமும் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.

இதில் உள்ள வடிவமைப்பைப் பார்க்கும்போது இவை கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால எழுத்துகள் எனக் கருதப்படுகிறது. கோயிலின் உட் புறத்தில் பெரிய கல் உரல் உள்ளது. இதைச் சுற்றிலும் ஏராளமான கற்கோ டரிகள் காணப்படுகின்றன. இவை மனிதன் இரும்பைப் பயன்படுத்துவ தற்கு முன் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்.

எனவே, இக்காலத்தை புதிய கற் காலம் என வரலாற்று அறிஞர்கள் அழைப்பர். இதன் காலம் கி.மு.1000 என்று கருதப்படுகிறது. இம்மலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்தனர் என்பது இதன் மூலம் உறுதிப்படுகிறது என்றார் அவர்.
- விடுதலை நாளேடு, 18.4.19

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...