புதன், 11 ஆகஸ்ட், 2021

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் வளைந்த நிலையில் சங்ககால பழைமையான இரும்புக் கம்பி!

 

சென்னை, ஆக.5 புதுக் கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டை யில் நேற்று (4.8.2021) மேற்கொள்ளப்பட்ட 6-ஆவது நாள் அகழாய் வின்போது இரும்புக் கம்பி ஒன்று கிடைத்துள்ளது.

சங்ககாலப் பழைமை வாய்ந்த, தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள ஒரே கோட் டையான பொற்பனைக் கோட்டையில் தமிழ் நாடு திறந்தநிலைப் பல் கலைக் கழகத் தொல்லி யல் துறை பேராசிரியர் இ.இனியன் தலைமையிலான குழுவினர் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 6-ஆவது நாளாக நேற்று (4.8.2021) அகழாய் வுப் பணி நடைபெற்றது.

அப்போது, 10 செ.மீ. நீளமுள்ள, துருப்பிடித்த நிலையில் இரும்புக் கம்பி ஒன்று கிடைத்துள்ளது. அதன் ஒரு பகுதி வளைந்த நிலையில் இருந்தது.

அகழாய்வின்போது, ஏராளமான கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும், சிறிய அளவிலும், துகள் களாகவும் இரும்பு உருக் குக் கழிவுகள் கிடைத்து வந்த நிலையில், நேற்று (4.8.2021) இரும்புக் கம்பி கிடைத்திருப்பது ஆய் வுக்கு கூடுதல் வலு சேர்க் கும் விதமாக இருப்பதாகத் தொல்லியல் ஆய்வா ளர்கள் தெரிவித்தனர்.

அகழாய்வு நடை பெற்று வரும் இடத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல் வர் மு.பூவதி, மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன், இருக்கை மருத் துவ அலுவலர் இந்தி ராணி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்

அப்போது, வேப்பங் குடி ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ராஜாங்கம், தொல்லியல் ஆய்வுக் கழகப் பொறுப்பாளர் எம்.ராஜாங்கம் உள்ளிட் டோர் உடனிருந்தனர். அப்போது, பொற்பனைக் கோட்டையின் சங்ககால வரலாறு குறித்துப் பேரா சிரியர் இனியன் விளக் கினார்.

புதன், 28 ஜூலை, 2021

கொற்கை அகழாய்வுப் பணி சங்கு வளையல்கள், மோதிரங்கள் கண்டெடுப்பு

 

தூத்துக்குடி, ஜூலை 28 கொற்கை பகுதிகளில் சங்கு அறுக்கும் தொழிற் கூடம் இருந்திருக்கக் கூடும் என தொல் பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தூத்துக்குடி மாவட் டம் சிறீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்ச நல்லூர் மற்றும் ஏரல் அருகே உள்ள சிவகளை ஆகிய பகுதிகளில் தமிழ் நாடு அரசு சார்பில் அக ழாய்வுப் பணிகள் தொடங் கப்பட்டு நடைபெற்று வருகின்றன. ஏரல் அருகே உள்ள கொற்கையிலும் அகழாய்வுப் பணிகள் நடத்தப்படுகின்றன.

கரோனா பரவல் அதி கரித்ததின் காரணமாக ஆதிச்சநல்லூர், சிவ களை, கொற்கை ஆகிய இடங்களில் கடந்த மே மாதம் முதல் அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கரோனா தொற்று பரவல் படிப்படி யாக குறைந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. அங்கு தொல்லியல் துறை யினர் பல்வேறு இடங் களிலும் பள்ளங்களை தோண்டி, அகழாய்வுப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆதிச்சநல்லூர், சிவ களையில் இரு கட்டங் களாக நடைபெற்ற அக ழாய்வில் ஏராளமான பழங்கால முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. கொற்கையில் பழங்கால செங்கல் கட்டுமான அமைப்புகள், சங்கால் செய்யப்பட்ட வளையல் கள், மோதிரங்கள் உள் ளிட்ட ஏராளமான பழங் காலப் பொருட்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

கொற்கை மற்றும் மாரமங்கலம் பகுதிகளில் 17 குழிகள் அமைக்கப் பட்டு அகழாய்வுப் பணி கள் நடைபெறுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப் பட்ட சங்கு வளையல்கள் மிகவும் அருமையாக வடி வமைக்கப் பட்டுள்ளன. கொற்கையில் சங்காலான 2 மோதிரங்களும், மார மங்கலத்தில் 4 மோதிரங் களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. 

மேலும் சுடுமண் மணிகள், பச்சை, ஊதா, மஞ்சள் நிற கண்ணாடி மணிகள், கருப்பு நிற கண்ணாடி வளையல்கள் ஆகியவை கண்டறியப் பட்டுள்ளன. 

இதன் அடிப்படை யில் இந்த பகுதிகளில் சங்கு அறுக்கும் தொழிற் கூடம் இருந்திருக்கக் கூடும் என தொல் பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஞாயிறு, 25 ஜூலை, 2021

1400 ஆண்டுகளுக்கு முந்தைய சிலை கண்டெடுப்பு

 

உத்திரமேரூர், ஜூலை 24- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசரின் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள கோழியாளம் கிராமத்தில் பல்லவர் காலத்தை சார்ந்த 1400 ஆண்டு களுக்கு முற்பட்ட சைவ சமயத்தின் ஒரு பிரிவான லகுலீச பாசுபதத்தை நிறுவிய லகுலீசரின் சிலை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மய் யத்தினரால் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் கொற்றவை ஆதன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து  கோழியாளம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது இச்சிலையை கண்டறிந்தனர்.

இதுகுறித்து கொற்றவை ஆதன் கூறிய தாவது:  தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 20 க்கும் மேற்பட்ட லகுலீசர்  உருவங்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட் டுள்ளன. இம்மாவட்டத்திலும் இதுதான் முதல் சிலை எனவே இதை அரிதாகவே நினைக்க வேண்டியுள்ளது. நாங்கள் கண்டறிந்த இந்த சிலையானது 95 சென்டிமீட்டர் உயரமும் 65 சென்டிமீட்டர் அகலமும் கொண்டு ஆடையின்றி சம்மணமிட்டு  அமர்ந்த நிலையில் காணப் படுகிறது. இதன் தலையில் ஜடா பாரமும் இரு காதுகளில் அழகிய குண்டலங்கள் கழுத்தில் ஒட்டிய  அணிகலனாக சவடியும் வலக்கையில் தண்டும், இடக்கையை தொடை மீது வைத்த நிலையில் தொப்புளின் கீழ் ஆண்குறி அருகே மலர் வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. இடது தோள்பட்டை  மேலே படம் எடுத்த நிலையில் நாகத்தின் சிற்பம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வியாழன், 22 ஜூலை, 2021

கீழடியில் மேலும் ஓர் உறை கிணறு கண்டுபிடிப்பு

 

திருப்புவனம், ஜூலை 17- தமிழ் ஆட்சிமொழி, தமிழ் கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையின் கீழ் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை முதன் மைச்செயலாளர் பி.சந்திர மோகன் வழிகாட்டுதலில், மாநில தொல்லியல் துறை ஆராய்ச்சி ஆலோசகர் பேரா சிரியர் கே.ராஜன் மற்றும் கீழடி அகழாய்வு இயக்குநர் ஆர்.சிவா னந்தம் ஆகியோர் மேற்பார்வை யில் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூர், சிவகளை, கொற்கை, ஈரோடு மாவட்டம் கொடுமலை, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலா டும்பாறை ஆகிய 7 இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி நடந்து வரு கிறது.

சிவங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே உள்ள கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வரு கிறது. இதில் பண்டைய மக்கள் விளையாடுவதற்காக பயன்படுத் தப்பட்ட உபகரணங்கள், ஓடுக ளால் செய்யப்பட்ட அணி கலன்கள், மண் பாத்திரங்கள், நெசவாளர் கருவிகள், கையால் தயாரிக்கப்பட்ட ஓடுகள் உள் ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் பண்டைய தமிழர்களின் நாகரி கத்தை தொல்லியல் துறை வெளிக்கொணர்ந்து வருகிறது.

கீழடி 7ஆம் கட்ட அகழாய் வில் சில தினங்களுக்கு முன்பு 3 அடுக்குகளை கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. உறை கிணற்றின் வெளிப்புறத்தில் கயிறு வடிவில் 2 டிசைன்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் மேலும் ஒரு உறை கிணறு கீழடியில்  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த உறை கிணற்றிலும் அலங்காரம் செய் யப்பட்டிருந்தது. கிழக்கில் இருந்து மேற்காக 58 செ.மீ. நீளமும், அதன் பெரும்பான்மை யான பகுதி தெற்கு பகுதியின் உள்ளே செல்லும் வகையிலும் இருக்கிறது.

தெற்கு பகுதியில் செங்குத்தாக இது 18 செ.மீ. நீளமும் உள்ளது. அலங்காரம் செய்யப்பட்ட விளிம்பின் தடிமன் 3 செ.மீ. ஆகும். அகழாய்வுக்காக தோண் டப்பட்ட குழியின் தென்கிழக்கு மூலையில் இந்த உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த குழியின் பிற பகுதிகளில் மண்ணில் செய்யப்பட்ட பொருட்களோ, கலைப்பொருட் களோ எதுவும் கண்டுபிடிக்கப் படாத நிலையில், நதியின் வண் டல் மண் படிவுகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வில் மயிலாடும்பாறை பகுதியில் பழங்கால இரும்பு வாள், மண் பானைகள் கண்டுபிடிப்பு

 

கிருஷ்ணகிரி,ஜூலை 20- மயிலாடும் பாறை பகுதியில் தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இரும்பு வாள் மற்றும் மண் பானைகளைக் கண் டறிந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழ புரம், கொற்கை, மயிலாடும்பாறை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடு மணல், மணலூர் ஆகிய 10 இடங் களில் தற்போது அகழாய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட் டம், தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் அகழாய்வு தொடங்கப் பட்டது. தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமை யில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந் தாமன், வெங்கடகுரு பிரசன்னா மற்றும் தொல்லியல் ஆய்வு மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றுள் ளனர்.

இந்த அகழாய்வில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்திட்டையில் 70 செ.மீ. நீளம் உள்ள இரும்பு வாள் ஒன்றைக் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக, அகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறியதாவது:

"பர்கூர் வட்டம் மயிலாடும்பாறை யில், சானரப்பன் மலையில் மனி தர்கள் வாழ்ந்ததற்கான அடையா ளங்கள் உள்ளன. மலையின் கீழ், 30-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இங்கு முன்னோர்கள் எந்த மாதிரி யான வாழ்வியல் முறைகளை மேற் கொண்டனர். உலக அளவில் உள்ள பல்வேறு இனக்குழுக்களில் இவர்கள் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை இங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட உள்ளது.

கடந்த 1980 மற்றும் 2003இல் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளில், இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்த இடம் என்று வரலாற்று ஆய்வா ளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு கடந்த 3 மாதங்களில் ஆய்வு மேற்கொண்டதில், மனித எலும்புகள் எதுவும் நேரடியாக நமக்குக் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது 40 செ.மீ. வாளின் முனைப்பகுதி மட்டும் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. வாளின் கைப் பிடி பகுதி இன்னும் எடுக்கப்பட வில்லை. இந்த வாளை ஒரு மண் திட்டை அமைத்து அதன்மேல் வைத்துள்ளனர்.

ஆனால், நாளடைவில் மண் ணின் அழுத்தம் காரணமாக, படிப் படியாக வாள் மேடும் பள்ளமுமாக மாறியுள்ளது. இந்த வாள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த வாள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முடிவுகள் வந்தபிறகுதான் இந்த வாளின் சரியான காலத்தைக் கணிக்க முடியும்".

இவ்வாறு சக்திவேல் கூறினார்.

இந்நிலையில், இந்த அகழாய்வில் தற்போது 4 மண் பானைகளைக் கண்டறிந்துள்ளனர். இது தொடர் பாக, ஆய்வு செய்து வருவதாகத் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

தமிழ்நாடு பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சுட்டுரை மற்றும் முகநூல் பக்கத்தில் வாள் படத்தைப் பதிவிட்டு 'ஒடிந்த வாளா னாலும் ஒரு வாள் கொடுங்கள்' என, 1948ஆம் ஆண்டு வெளிவந்த அபி மன்யு திரைப்படத்தில் மறைந்த முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலை ஞரின் கைவண்ணத்தில் உருவான வைர வரி எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது வலைதளப் பக்கத்தில் மண் பானை (தாழி) படத் துடன், 'கலம் செய் கோவே! கலம் செய் கோவே! நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!' - புறநானூறு எனப் பதிவிட்டுள்ளார்.

திங்கள், 17 மே, 2021

இத்தாலியில் 40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த நியாண்டர்தால் மனிதர்களின் உடல்கள்


இத்தாலியின் ரோம் நகரின் தென் கிழக்கு பகுதியில் கழுதை புலிகளால் வேட்டையாடப்பட்ட ஒன்பது நியாண்டர்தால் மனிதர்களின் உடல் எச்சங்களை வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய குகை ஒன்றில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

மண்டை ஓடுகள், உடைந்த தாடைகள் கொண்ட அந்த எச்சங்கள் கடற்கரை நகரமான சான் ஃபெலிஸ் சிர்சியோவில் உள்ள குட்டாரி குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மனித இனத்தின் ஆதி உறவினர்களாக கருதப்படும் இந்த நியாண்டர்தால் மக்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இன்றைய மனிதர்களிடத்தில் அவர்களது டிஎன்ஏவின் சிறு சுவடுகள் காணப்படுகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட எட்டு உடல்கள் 50 ஆயிரத்திலிருந்து 68 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.

அதில் பழமையானதாக கருதப்படும் எச்சம், 90 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என இத்தாலியின் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரோம் நகரிலிருந்து 90 கி.மீ தூரத்தில் இருக்கும் குட்டாரி குகையில் இந்த உடல்களை கண்டெடுத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இந்த உடல்கள் ஏழு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவனுடையது என தெரிவித்துள்ளனர்.

“மொத்த உலகமும் பேசக் கூடிய அளவுக்கு இது ஓர் அற்புதமான கண்டுபிடிப்பு” என இத்தாலியின் கலாச்சார அமைச்சர் டாரியோ ஃபிரான்செஸ்சினினி தெரிவித்துள்ளார்.

“இம்மாதிரியான கண்டுபிடிப்புகள் நியாண்டர்தால் மனிதர்கள் குறித்த ஆய்வுகளை மேலும் அதிகரிக்கும்“ என அவர் தெரிவித்துள்ளார்.

“இதற்கு முன்பு இதே குட்டாரி குகையில் 1939ஆம் ஆண்டு நியாண்டர்தால்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அது நியாண்டர்தால்களின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கான முக்கியமான ஓர் இடமாக இதை மாற்றியது” என இத்தாலியின் கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த குகை பழங்காலத்தில் நடைபெற்ற ஒரு நிலநடுக்கத்தாலோ, நிலச்சரிவாலோ மூடப்பட்டுவிட்டது. அதுவே அதனுள் இருந்த உடல்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான காரணமாகவும் அமைந்தது.

செவ்வாய், 11 மே, 2021

மூடியுடன் பானை கண்டெடுப்பு


 

May 05, 2021 • Viduthalai


திருப்புவனம், மே 5 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கணேசன் என்பவரது ஒரு ஏக்கர் நிலத்தில் நடந்த அகழாய்வில் 3ஆவது குழியில் மூடியுடன் கூடிய பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை அடி உயரத்தில் 5  லிட்டர் கொள்ளளவு கொண்ட இப்பானையை கலைநயம் மிக்க மூடியை கொண்டு மூடி வைத்துள்ளனர். 


இதுவரை கிடைத்த பானைகள் அனைத்தும் சேதமடைந்த நிலை யிலும் உள்ளே எந்த பொருட் களும் இல்லாமல் இருந்தன. ஆனால் இப்பானை கச்சிதமாக மூடப்பட்டுள்ளதால் உள்ளே பொருட்கள் அப்படியே இருக்க வாய்ப்புள்ளது. பானையின்  உள்ளே இருக்கும் பொருட்கள் தொல்லியல் துறை உயர் வல்லு னர்கள் வந்த பின் எடுக்கப்படும் என தெரிகிறது. மணலூரில் ஜானகி அம்மாள் என்பவரது நிலத்தில் 2  குழிகள் தோண்டப் பட்டு வருகின்றன. அகரத்தில் 2 குழிகள் மட்டும்  தோண்டப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு குழி தோண்டப்பட்டுள்ளது.

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...