காலச்சுவடு

வியாழன், 9 மார்ச், 2023

மனித உருவத்துடன் பழங்கால செப்பு நாணயம் கண்டுபிடிப்பு

 

     October 09, 2022 • Viduthalai

சேலம்,அக்.9- மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி காலத்தில் வெளியிடப்பட்ட மனித உருவம் பொறிக்கப்பட்ட பழங் கால செப்பு நாணயம் கிடைத்திருப்பதாக சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க வர லாற்று ஆய்வாளர்கள், நாடு முழுவதும் இருந்து பழங்கால நாணயங்களை சேகரித்து வருகின்றனர்.

சமீபத்தில் கருநாடகா மாநிலத்தில் நடந்த நாணயவியல் கண்காட்சியில் மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்களை குஜராத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் காட்சிப்படுத்தியிருந் தனர். அந்த நாணயங்களை சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க வர லாற்று ஆய்வாளர் சுல்தான் வாங்கி வந்துள்ளார். வழக்கமாக அக்கால மன் னர்கள் வெளியிட்ட செப்பு நாணயங் களில் காளை, பசு, தேர், கப்பல் போன்ற உருவங்கள் இருந்தன.

ஆனால், இந்த செப்பு நாணயத்தில், மனித உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த செப்பு நாணயம் குறித்து வரலாற்று ஆய்வாளர் சுல்தான் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக பழங்கால நாணயங்களை சேகரித்து வருகிறோம். இதுவரையில் எங்களுக்கு கிடைக்கப்பெற்ற நாண யங்களில் மனித உருவம் தவிர பிற உருவங்களே இருந்துள்ளன.

அதிலும் தமிழ் மொழி பொறிக்கப்பட்ட செப்பு நாணயங்களில், மனித உருவம் கிடைக்கப்பெற்றதில்லை. முதன்முறை யாக இந்த நாணயம் கிடைத்திருக்கிறது. மதுரையை ஆண்ட விஜயரங்க சொக்க நாத நாயக்கர் 1731இல் காலமானார். அவருக்கு பிறகு அவரது மனைவி மீனாட்சி 1732முதல் 1756வரை ஆட்சி செய்தார். இந்தவகையில்  மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி இந்த நாணயத்தை வெளியிட்டுள்ளார்.

‘‘தமிழனின் விஞ்ஞான ஊன்று வேக விசை பயண வண்டி’’ நாணயத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த பயண வண்டியில் மனித உருவம், ஊன்றை பிடித்தபடி இருக்கிறது. இந்த செப்பு நாணயம் மிகவும் அரிதாகும். காரணம், இதுவரையில் வட இந்தியாவிலும், தென் னிந்தியாவிலும் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான செப்பு நாணயங்களில் மனித உருவம் இல்லை.

ஆனால், மதுரையை ஆட்சி புரிந்த மீனாட்சி, மனித உருவத்தில் நாண யத்தை வெளியிட்டிருக்கிறார். கோயில் சிற்பங்களில் இத்தகைய உருவங்கள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற உருவத்தில் நாணயத் தையும் அக்காலத்தில் வெளியிட்டுள் ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு இடங் களில் நடக்கும் நாணயவியல் கண் காட்சிகளில் இந்த செப்பு நாணயத்தை காட்சிப்படுத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நேரம் மார்ச் 09, 2023 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

சென்னிமலை அருகே கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள்

 

    January 01, 2023 • Viduthalai

ஈரோடு, ஜன.1 கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள் குறித்து வருங்கால சந்ததி யினர் தெரிந்து கொள்ளும் வகையில் கொடுமணலில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொடுமணலில் கிடைத்த பழங்கால வரலாற்று சின்னங்கள் குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் கொடுமணலில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் உள்ளது கொடுமணல் கிராமம். இங்கு சுமார் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததுடன் பெரிய அளவில் தொழில்துறைகளும், வியாபாரங்களும் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்ததால் 1981-ஆம் ஆண்டு முதல் கொடுமணல் பகுதியில் இதுகுறித்து பல்வேறு ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தது. பழங்கால பொருட்கள் இதில் முக்கியமாக தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் அதன் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையில் 2020-ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கப்பட்ட 8-ஆவது அகழாய்வின் போது தான் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கிடைத்தது. இந்த அகழாய்வில் தொழிற்கூடங்கள் மற்றும் கொல்லுப்பட்டறைகள் இருந்த பகுதி, பழங்கால ஈமச்சின்னங்கள் எனப்படும் கல்லறைகள் இருந்த பகுதி, கிணற்று படிக்கட்டுகள் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டது. 

மேலும் ஏராளமான முதுமக்கள் தாழிகள், கத்திகள், ஈட்டிகள், ஆணிகள் போன்ற இரும்பு பொருட்கள், நூற்றுக்கணக்கான கல்மணிகள், வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்கள், நாணயங்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என ஏராளமான பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது.


நேரம் பிப்ரவரி 28, 2023 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சென்னிமலை, தமிழ் எழுத்து, பொருட்கள்

செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் 9ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு

 

      November 06, 2022 • Viduthalai

செய்யாறு, நவ.6 திருவண்ணா மலை மாவட்டம், செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வக்குமார் ஆய்வு நடத்தியதில், வயல்வெளி நடுவில் செல்லியம்மன் கோயில் அருகே புதைந்து கிடந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக் கல், சந்து தெருவில் கோமாரிக்கல் ஆகியவற்றை கண்டெடுத்தார். 

இதுகுறித்து செல்வகுமார் கூறியதாவது: அய்யனார் சிற்பம் 34 சென்டிமீட்டர் உயரமும், 22 சென் டிமீட்டர் அகலமும் உடையது. அய்யனாரின் தலையை அடர்ந்த ஜடா பாரம் அலங்கரிக்கிறது. காதில் பத்திர குண்டலமும், கழுத்தி லும் கால்களிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன.  

அதேபோல் கல் தூணில் கருடாழ்வார் சிற்பம் 58 சென்டி மீட்டர் உயரமும், 28 சென்டிமீட்டர் அகலமும் உள்ளது. ஸ்தூபக்கல் கலை நயத்துடன் உள்ளது. ஊரின் மய்யப்பகுதி யான சந்து தெருவில் கோமாரிக்கல் அல் லது மந்தை வெளிகல் என்று அழைக்கப் படும் பழைமையான கல் கண்டெடுக்கப் பட்டது. இக்கல்லின் உயரம் 60 சென்டி மீட்டர், அகலம் 30 சென்டி மீட்டர். தற்போது பொன் னியம்மன் கோயில் கட்டப்பட்டி ருக்கும் இடத்தில் ஏற்கெனவே லட்சுமி நாராயணன் கோயில் இருந்த தாகவும் கூறப்படுகிறது. கோயில் முழுவதும் காணாமல் போன நிலையில் அதனுடைய எச் சங்கள் காணப்படுவதால் பொது மக்கள் கூறும் தகவல் உறுதி யாகிறது.

இவ்வூர் முன்னோர் களால் விஜய பூபதி நகரம் என்று அழைக்கப்பட்டதாக பெரியவர்கள் தெரிவிக் கின் றனர். இவ்வூரில் ஏற்கெனவே கண்டெடுத்த மூத்த தேவி சிற்பம், சாமுண்டி சிற்பம் உள்ளிட்ட அனைத்தும் கி.பி. 9ஆம் நூற்றாண் டிற்கும் 10ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்க லாம். சிற்பங்களின் கலை நுணுக்கங்களை பார்க்கும் போது பல்லவர்கள் அல் லது சோழர் காலத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. தொல்லியல் ரீதியாக ஆய்வு மேற்கொண்டால் பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப் புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நேரம் பிப்ரவரி 28, 2023 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அய்யனார் சிலை, செய்யாறு

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

அரூர் அருகே 1400 ஆண்டுகள் பழைய பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு



  February 18, 2023 • Viduthalai

தர்மபுரி, பிப். 18- தருமபுரி மாவட்டம் அருர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜா, தண்டராம்பட்டு சிறீதர் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோரைக் கொண்ட குழு கள ஆய்வு செய்தது. இதில் 2 பல்லவர்கள் கால நடுகல் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

ஆலம்பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள வேடியப்பன் கோயிலில் புதைந்த நிலையில் இரண்டு நடுகற்களையும் வெளியே எடுத்து ஆய்வு செய்ததில் இரண்டு நடுகற்களிலும் வட்டெழுத்துக் கல்வெட்டு இருப்பது கண்டறியப் பட்டது.இந்த நடுகல் கல்வெட்டை படித்து விளக்கமளித்த தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் கூறியதாவது, "ஒரு நடுகல் வீரர் உருவம் ஒன்றும், அதில் இடது கையில் கேடயமும் வலது கையில் வாளும் அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கச்சையும் அணிந்து சண்டைக்கு ஆயத்தமாகும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இட புறத்தில் வட்டெழுத்தில் உள்ள கல்வெட்டு, பல்லவ மன்னன் மகேந்திர வர்மனின் நான்காவது ஆட்சியாண்டில் இது வெட்டப்பட்டதென்றும், இதில் காட்டி சாமி என்பவர் கீழ் வாளப்பாடி மாத விண்ணனோடு கால்நடைகள் அதிகம் இருக்கும்  புஞ்சி என்ற ஊரை ஆளும் ராமசாத்தன் என்பவர் இறந்துபோனதை குறிப்பிடுகிறது. என்றும் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்த நடுகற்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது " எனத் தெரிவித்தார்.

தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த வேடியப்பன் கோயிலில் மண்ணில் புதைந்திருந்த நடுகற்களை மீட்டு, ஆய்வு நடுவத்தினரும் ஊர்மக்களும் இணைந்து அதே இடத்தில் அடிபீடம் அமைத்து நிலையாக நிற்கவைக்கப்பட்டது.தென்பெண்ணையாற்றின் கரையில் ஏற்கெனவே திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல நடுகல் கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதுபோல மண்ணில் புதைந்த நிலையில் இன்னும் நடுகற்கள் கிடைப்பதினால் தென்பெண்ணை யாற்றின் இருகரைகளிலும் உள்ள ஊர்களில் ஆய்வுகள் மேற்கொண்டால் இன்னும் பல அரிய வரலாற்றுத் தடங்கள் வெளிவர வாய்ப்புள்ளது என்றும் இந்த நான்கு மாவட்டங்களையும் உள்ளடக்கிய இந்த பகுதியை நடுகல் மண்டலமாக அறிவித்து நடுகற்களையும் கல்வெட்டு களையும் ஆவணப்படுத்தி பாதுகாக்க தமிழ்நாடு தொல்லியல் துறை முன்வரவேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நேரம் பிப்ரவரி 19, 2023 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நடுக்கல், பல்லவர் காலம்

திங்கள், 23 ஜனவரி, 2023

15,000 ஆண்டுகள் பழைமையான பூம்புகார்: ஆய்வுத்தகவல்


  January 23, 2023 • Viduthalai

திருச்சி,ஜன.23- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியரும், பூம்புகார் ஆய்வுத் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சோம.ராமசாமி கூறியிருப்பதாவது: 

ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ரூ.10 கோடி நிதியுதவியுடன்,

கடலில் மூழ்கிய பூம்புகார் நகரத்தை ஆய்வு நடத்தும் பணி கடந்த 2019-2020 ஆண்டில் தொடங்கப்பட்டு நடை பெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டிய இந்த ஆய்வு, கரோனா பரவல் காரணமாக இடையில் தடைபட்டதால், 2024 மார்ச்சுக்குள் முடிக்கும் வகையில், மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வில், கடலுக்கு கீழே 3 மிகப்பெரிய டெல்டாக் களை காவிரி நதி உருவாக்கி உள்ளதும், இதன் மூலம் அப்போதைய கடற்கரை தற்போதைய கடற்கரையில் இருந்து 40-50 கி.மீ கிழக்காக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், தற்போதைய கடற்கரையில் இருந்து 30-40 கி.மீ தூரத்தில் கடலுக்கு கீழே 50-100 மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய துறைமுக நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இது 15 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நகரம் என்று தெரிகிறது. இங்கு ஒரே நேரத்தில் 70-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நிற்கும் அளவுக்கு மிகப்பெரிய கப்பல் துறைகள், அதைச் சுற்றிலும் பல விதமான கட்டடங்களைக் கொண்ட மணலால் மூடப்பட்ட சுற்றுச்சுவருடன் கூடிய குடியிருப்புகள், அழிந்த நிலையில் அடித்தூண்களுடன் கலங்கரை விளக்கம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், மேற்கே காவிரியின் வண்டல் பகுதிக்கும், கிழக்கே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூம்புகார் 1-க்கும் இடையே உள்ள பகுதியில் கடலுக்கு கீழே காவிரியும், அதன் கிளை நதிகளும் உருவாக்கி உள்ள ஆழமான பள்ளத்தாக்கு களும், பெரிய நீர் வீழ்ச்சியும் கண்டறியப் பட்டுள்ளன.

இவை சுனாமி, கடல் மட்ட உயர்வு, வெள்ளம் போன்ற வற்றால் இடம் மாறி வந்த இந்த 3 பூம்புகார்களையும் அழித்து இருக்கக்கூடும். பருவநிலை மாற்றம் குறித்த அட்டவணைப்படி நடத்திய ஆய்வில், சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை கடற்கரை நகரமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

பின்னர், சீர்காழியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பும், நாங்கூரில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பும், காவிரிப் பூம்பட்டினத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பும் கடற்கரை நிலை கொண்டிருந்தது. தற்போது இந்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது என்றார். அப்போது, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.செல்வம், பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் சீனிவாசன் ராகவன், தொலை உணர்வுத் துறை பேராசிரியர்கள் 

க.பழனிவேல், ஜெ.சரவணவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

நேரம் ஜனவரி 23, 2023 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பழைமை, பூம்புகார்

உலகின் மிகப் பழைமையான நாடுகள் பட்டியலில் இந்தியா


  January 23, 2023 • Viduthalai

   அய்தராபாத், ஜன. 23- உலக மக்கள்தொகை ஆய்வு மய்யம் வெளியிட்ட உலகின் பழைமையான நாடுகள் பட்டியலில் ஈரான் முதல் இடத்தையும், இந்தியா 7ஆம் இடத்தை பிடித்துள்ளது

      கி.மு. 3 ஆயிரத்து 200இல் ஈரானில் முதல் அரசு உருவானதற்கான சான்றுகள் உள்ளன. இரண்டாம் இடத்தில் உள்ள எகிப்தில் கி.மு. 3 ஆயிரத்து 100லும், ஆறாம் இடத்தில் உள்ள சீனாவில் கி.மு. 2 ஆயி ரத்து 70இலும் அரசுகள் உருவாகின.

    இந்தியாவில் கி.மு. 2 ஆயிரத்தில் முதன் முதலாக ஒரு அரசு உருவானதாக கூறப்படுகிறது.

நேரம் ஜனவரி 23, 2023 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இந்தியா, பழமை

திங்கள், 9 ஜனவரி, 2023

மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மகாவீரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு


  November 08, 2022 • Viduthalai

மானாமதுரை,நவ.8- மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மகாவீரர் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிள்ளுக்குடி கிராமத்தில் பழைமையான சிற்பங்கள் இருப்பதாக முத்துராஜா என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மய்யத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், தாமரைக் கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சில சிற்பங்கள் கண்டடெடுக் கப்பட்டன. அவை ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய சமண மத தீர்த் தங்கரரான மகாவீரர் சிற்பங்கள் என்று தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘இங்கு இரண்டு மகாவீரர் சிற்பங்கள் இருக்கின்றன. ஒரு சிற்பம் இரண்டரை அடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இது சமணர்களின் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பமாகும். சிற்பத்தின் அடிப்பகுதியில் மகாவீரருக்கே உரிய சிம்மம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்தில் மூன்று சிம்மங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சிற்பத்தின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகும். அக்காலத்தில் இந்த பகுதி முற்கால பாண்டியரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதியாகும். இந்த பகுதியில் சமண சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது அக்கால மன்னர்கள் மத நல்லிணக்கத்தை பேணியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

மற்றொரு சிற்பம் தலைப்பகுதி சிதைந்தும் அதற்கு மேல் உள்ள பகுதிகள் முற்றிலுமாக சிதைந்து காணப்படுகிறது. இந்த சிற்பத்திற்கு இடது வலது புறமாக இரண்டு சாமரதாரிகள் தலை இன்றி காணப்படுகிறார்கள். இந்த சிற்பத்தின் காலம் 9ஆம் நூற்றாண்டு ஆகும். பாண்டிய நாட்டில் சமண சமயம் மிக செழிப்பாக இருந்ததற்கு தொடர்ந்து கிடைத்துவரும் தீர்த்தங்கரர்களின் சிற்பங்களே சாட்சியாகும். தற்போது இப்பகுதி மக்கள் புத்தர் சுவாமி என்று விநாயகர் கோவிலில் வைத்து வழிபட்டு வருகின்றனர்’’ என்றனர்.


நேரம் ஜனவரி 09, 2023 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மகாவீரர், மானாமதுரை
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...

  • பார்ப்பனர்கள் மட்டுமே நீராட படித்துறையாம்! கல்வெட்டுக் கண்டுபிடிப்பு!
      Published October 21, 2024 விடுதலை நாளேடு நெல்லை, அக். 21- தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழைமையான படித்துறைக் கல்வெட்டு க...
  • தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வில் மயிலாடும்பாறை பகுதியில் பழங்கால இரும்பு வாள், மண் பானைகள் கண்டுபிடிப்பு
      July 20, 2021  • Viduthalai கிருஷ்ணகிரி , ஜூலை  20-  மயிலாடும்   பாறை   பகுதியில்   தொல்லியல்   துறை   சார்பில்   மேற்கொள்ளப்பட்டு   வரும்...
  • ஆய்வுக் கட்டுரையை மேற்கோள்காட்டிதானே வைரமுத்துப் பேசி இருக்கிறார் - இதில் என்ன குற்றம்?
    ஆய்வுக் கட்டுரையை மேற்கோள்காட்டிதானே வைரமுத்துப் பேசி இருக்கிறார் - இதில் என்ன குற்றம்? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  கேள்வி விசாரணைக்கு இ...
Powered By Blogger

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

  • முகப்பு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • ஆகஸ்ட் 2025 (1)
  • மார்ச் 2025 (1)
  • அக்டோபர் 2024 (2)
  • பிப்ரவரி 2024 (1)
  • மே 2023 (2)
  • மார்ச் 2023 (2)
  • பிப்ரவரி 2023 (3)
  • ஜனவரி 2023 (3)
  • ஆகஸ்ட் 2022 (2)
  • ஜூலை 2022 (1)
  • பிப்ரவரி 2022 (1)
  • ஜனவரி 2022 (2)
  • அக்டோபர் 2021 (1)
  • செப்டம்பர் 2021 (2)
  • ஆகஸ்ட் 2021 (8)
  • ஜூலை 2021 (4)
  • மே 2021 (2)
  • ஏப்ரல் 2021 (1)
  • ஜனவரி 2021 (1)
  • டிசம்பர் 2020 (1)
  • ஜூன் 2020 (1)
  • மார்ச் 2020 (1)
  • பிப்ரவரி 2020 (3)
  • டிசம்பர் 2019 (2)
  • நவம்பர் 2019 (3)
  • அக்டோபர் 2019 (6)
  • செப்டம்பர் 2019 (13)
  • ஆகஸ்ட் 2019 (3)
  • ஜூலை 2019 (2)
  • ஜூன் 2019 (5)
  • மே 2019 (5)
  • ஏப்ரல் 2019 (6)
  • பிப்ரவரி 2019 (1)
  • ஜனவரி 2019 (1)
  • டிசம்பர் 2018 (3)
  • நவம்பர் 2018 (4)
  • அக்டோபர் 2018 (4)
  • செப்டம்பர் 2018 (2)
  • ஆகஸ்ட் 2018 (2)
  • ஜூலை 2018 (5)
  • ஜூன் 2018 (7)
  • மே 2018 (3)
  • மார்ச் 2018 (8)
  • பிப்ரவரி 2018 (9)
  • ஜனவரி 2018 (4)
  • டிசம்பர் 2017 (18)
  • நவம்பர் 2017 (4)
  • அக்டோபர் 2017 (5)

லேபிள்கள்

  • அகழ்வாய்வு
  • அகழாய்வு
  • அம்பேத்கர்
  • அய்யனார் சிலை
  • அய்ராவதம் மகாதேவன்
  • ஆணைகள்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆந்திரா
  • ஆய்வு
  • ஆஷ் துரை
  • இந்தியா
  • இராசராசன்
  • இராஜராஜ சோழன்
  • இரும்பு
  • இளையான்குடி
  • உறைகிணறு
  • எழுத்தாணிகள்
  • ஏரி
  • கண்டுபிடிப்பு
  • கல் கருவி
  • கல் செக்கு
  • கல் திட்டை
  • கல்செக்கு
  • கல்யாண ரத்து
  • கல்வி
  • கல்வி உரிமை
  • கல்வெட்டு
  • கலகம்
  • கற்பதுக்கை
  • கற்றூண்
  • காசு
  • காண்டாமிருகம்
  • கால்வாய்
  • கிணறு
  • கிருஷ்ணகிரி
  • கீழடி
  • குகை
  • குத்துக்கல்
  • குமிழி மடைத் தூண்
  • கேரளா
  • கொந்தகை
  • கொற்கை
  • கோட்சே
  • கோயில் அனுமதி
  • கோயில் நுழைவு
  • சங்க கால நகரம்
  • சமணம்
  • சாத்தூர்
  • சாதனை
  • சிங்கம்புணரி
  • சிலை
  • சிவகங்கை
  • சிவகளை
  • சிவாஜி
  • சுவர்
  • செங்கல்பட்டு
  • செப்பேடு
  • செய்யாறு
  • சென்னிமலை
  • சோழர்
  • சோழன்
  • தடயம்
  • தடுப்பணை
  • தமிழ் எழுத்து
  • தமிழ்நாடு மாவட்டங்கள்
  • தானம்
  • திப்புசுல்தான்
  • திராவிடர் இயக்கம்
  • திருமணம்
  • திலகர்
  • தீவிரவாதிகள்
  • துலாபாரம்
  • தென்காசி
  • நடுக்கல்
  • நடுகல்
  • நம்பூதிரி
  • நாணயம்
  • நியாண்டர்தல்
  • நினைவகம்
  • நினைவுச் சின்னம்
  • நீதிக்கட்சி
  • நீராட படித்துறை
  • நெல்
  • படுக்கை
  • பரோடா
  • பல்லவர் காலம்
  • பல்லவர்கால சிலை
  • பழமை
  • பழனி
  • பழைமை
  • பாண்டியர் காலம்
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பனத்தி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர்கள் மட்டும்
  • பார்ப்பனர்களுக்கு
  • பாறை ஓவியம்
  • பாறை கீரல்
  • பானை
  • புத்தம்
  • புதை படிமம்
  • புதைவிடம்
  • புரட்டு
  • பூம்புகார்
  • பெண்கள் சட்டய
  • பொருட்கள்
  • பொற்பனைக் கோட்டை
  • மகாபாரதம்
  • மகாவீரர்
  • மண் பானை
  • மறைவு
  • மன்னன்
  • மானாமதுரை
  • முதுமக்கள்
  • முதுமக்கள் தாழி
  • முன்னோடி
  • மூடத்தனம்
  • மேலாடை
  • ராமநாதபுரம்
  • வரலாறு
  • வாணியர்
  • வாள்
  • விருது
  • விலங்கு மனிதன்
  • வைரமுத்து
நீர்வரி தீம். Blogger இயக்குவது.