திங்கள், 29 ஆகஸ்ட், 2022

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

2,500 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி, மண்குவளை கண்டெடுப்பு


கமுதி, ஆக. 3-- ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே 2,500 ஆண்டுகள் பழைமை யான முதுமக்கள் தாழி, மண்குவளை கண்டெடுக் கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட் டம் கமுதியை அடுத் துள்ள செய்யாமங்கலம் கிராமத்தில் சில மாதங் களுக்கு முன்பு கண்மாய் வரத்து கால்வாய் சீர மைப்பு பணி நடைபெற்றது. 

அப்போது அங்கு ஒரு பகுதியில் 10 முதல் 20 வரையிலான முதுமக்கள் தாழிகள் பூமிக்கு அடியில் இருப்பது தெரிய வந்தது. இந்தநிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகானந்தம் என்பவர் சிதைந்து கிடந்த பொதுமக்கள் தாழி மற்றும் அருகில் புதைந்து கிடந்த முது மக்கள் தாழி களை தோண்டி பார்த் துள்ளார். அதில் வித்தி யாசமான நிறத்தில் மண், அதனுள் சிறிய வகை கருப்பு,சிவப்பு நிறத்தில் மண்குவளைகள், எலும் புக்கூடுகள், பட்டையான இரும்பு கம்பிகள் ஆகி யவை இருந்தது தெரிய வந்தது. அதன் அருகே கீழடியில் கிடைத்ததை போன்று 2,500 ஆண்டு கள் பழைமையான 3 அடுக்கு உறைகிணறு புதைந்து இருப்பது கண் டறியப்பட்டது. 

இதுகுறித்து முருகானந்தம் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த அதிகாரி யும் பார்வையிட வர வில்லை என புகார் தெரிவித்தார். 

இதுதொடர்பாக தொல்லியல் அலுவலர் களுக்கு தகவல் தெரிவித்து விசாரித்தபோது வைகை ஆற்றின் கிளை ஆறுகளான கிருதுமால் நதி குண்டாறு படுக்கை யில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்ததாக அடையா ளங்கள் கிடைத்துள்ளன. முதுமக்கள்தாழி, மண் குவளை, உறைகிணறு ஆகிய 2,500 முதல் 3000 ஆண்டுகள் பழைமையா னது என தெரிவித்து உள்ளனர். எனவே செய் யாமங்கலம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் அகழாய்வு செய்தால் தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகள் தெரியவரும். தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளி, 1 ஜூலை, 2022

நாட்றாம்பள்ளி அருகே கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுப்பு

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

தமிழ்நாடு சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லின் வயது சுமார் 3,200 ஆண்டுகள்

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

சிவகங்கை அருகே 16ஆம் நூற்றாண்டு சிலை கண்டெடுப்பு


சிவகங்கை, ஆக.22 சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தலைவர் நா.சுந்தர ராஜன் மற்றும் புத்தகக்கடை முருகன் ஆகியோர் முத்துப்பட்டி பகுதியில் உள்ள தனியார் இடத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிலையைக் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்துப் புலவர் கா.காளிராசா கூறும்போது, ‘’பழங் காலத்தில் தங்களது அரசர் போரில் வெல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டு கொற்றவை தெய்வம் முன்பாக வீரர்கள் தங்களை பலி கொடுக்கும் பழக்கம் இருந்தது. இதில் நவகண்டம் என்பது உடலில் 9 இடங்களில் வெட்டிக் கொண்டு உயிரை விடுவர். அவ்வீரர்களை நினைவுபடுத்தும் வகையில் சிலை வடிவமைக்கப்படும்.

மேலும் இப்பழக்கம் 9ஆம் நூற் றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அதிகமாக இருந்தது. அதன்பிறகு படிப்படி யாகக் குறையத் தொடங்கியது. முத்துப்பட்டியில் கண்டறியப்பட்ட நவகண்டம் சிலை 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இச்சிலை மூன்றடி உயரத்தில், ஒன்றரை அடி அகலத்தில் உள்ளது. தலைமுடிகள் கொண்டையாக கட்டியபடியும், சிதறிய 3 கற்றை களாகவும் உள்ளன. முகத்தில் மீசை காட்டப்பட்டுள்ளது, கழுத்தில் வேலைப்பாடுடன் கூடிய ஆபரண மும், கையில் கழல் போன்ற ஆபரண மும் உள்ளன.

மேலாடை தொங்குவதைப் போல் உள்ளது. இடுப்பில் உறை யுடன் கூடிய குத்துவாள், கால்களில் காலணிகள் உள்ளன. ஒரு கை வில்லுடனும், மற்றொரு கை சிதைந்து உள்ளது. கழுத்தில் வலது புறத்தில் இருந்து இடதுபுறமாகக் கத்தி குத்தியபடி உள்ளது.

மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று நவகண்ட சிலையை சிவகங்கை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க நில உரிமையாளர் ஒப்புக் கொண் டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.

சனி, 1 ஜனவரி, 2022

பெருங்குடி: கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு


மதுரை, நவ. 25- மதுரை விமான  நிலையம் அருகே பெருங்குடி  கண்மாயில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச்  சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு  கண்டறியப் பட்டுள்ளது.

மதுரை பெருங்குடி பெரிய கண்மாய்  அருகே கல்வெட்டு இருப்பதாக  முதுகலை வரலாற்றுத் துறை  மாணவர் சூரியபிர காஷ் தகவல்  அளித்தார். அதன்படி மதுரை சரசு வதி  நாராயணன் கல்லூரி வரலாற்றுத்  துறை உத விப் பேராசிரியர்  து.முனீஸ்வரன் மற்றும்  பேராசி ரியர்கள் லட்சுமணமூர்த்தி,  ஆதிபெருமாள்சாமி ஆகியோர் கள  ஆய்வு செய்தனர். ஆலமரத்து  விநாயகர் கோயில் அருகே  குத்துக்கால் பாதி புதைந்த நிலையில்  கல்வெட்டு இருந்தது. இதனை  ஆய்வு செய்ததில் கி.பி.13ஆம்  நூற் றாண்டை சேர்ந்த கல்வெட்டு  எனக் கண்டறியப்பட்டது.

இதுகுறித்துப் பேராசிரியர்கள்  முனீஸ் வரன், லட்சுமணமூர்த்தி  ஆகியோர் கூறும்போது,  "வேளாண்மை, மண் பாண்டத்  தொழிலில் சிறந்து விளங்கிய  பெருங் குடியில் பெரிய கண்மாய்  ஆலமரத்து விநாயகர் கோயில் எதிரே  கல்தூண் உள்ளது. அவை மண் ணில்  புதைந்த நிலையில் 5 அடி நீளக் கல்  தூணில் எட்டுக்கோணம், 2 பட்டை  வடிவத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.

மதுரை பெருங்குடி பெரிய  கண்மாயில் உள்ள கி.பி. 13ஆம்  நூற்றாண் டைச் சேர்ந்த நிலக்கொடை  கல்வெட்டு.

தூணின் மேல் பகுதிப் பட்டையில் 3  பக்கம் நில அளவைக் குறியீடுகள்,  மற்றொரு பக்கம்  கோட் டோவியமாக  வரையப் பட்டுள்ளது. நிலத்தை  வைணவக் கோயிலுக்கு  நிலக்கொடையாகக் கொடுத்ததைச்  சுட்டிக் காட்டுகிறது. கல்தூணின்  கீழ்பட்டைப் பகுதியில் 12 வரிகள்  உள்ள எழுத்தமை வின் வடிவத்தை  வைத்து கி.பி.13ஆம் நூற்றாண் டைச்  சேர்ந்தது எனக்  கண்டறியப்பட்டுள்ளது.

பல எழுத்துகள்  தேய் மானமடைந்ததால் முழுப்  பொருள் அறிய முடியவில்லை.  தொல்லிய லாளர்  சொ.சாந்தலிங்கத் தின் உதவியுடன்  கல் வெட்டு படிக்கப்பட்ட தில்,  விக்கிரம பாண்டியன் பேரரையான்  என்ற சிற்றரசன் இப்பகுதியை ஆட்சி  செய்ததாகவும், அப்போது நிலதானம்  வழங்கியவரையும், ஆவ ணமாக  எழுதிக்கொடுத்த குமராஜன்  என்பவரின் பெயரும் கல்வெட்டு  இறுதி வரியில் இருப்பதை அறிய  முடிகிறது’’ என்று தெரிவித்தனர்.

வெள்ளி, 8 அக்டோபர், 2021

புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம் கண்டெடுப்பு

 

புதுக்கோட்டை, செப். 14- புதுக் கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழைமை யான கல்மரம் 12.9.2021 அன்று கண்டெடுக்கப்பட் டுள்ளது.

புதுக்கோட்டை நரி மேட்டின் ஒரு பகுதியில் கூழாங்கல், சுண்ணாம்பு கற்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தின் தொல்லியல் ஆய்வா ளரான புதுக்கோட்டை யைச் சேர்ந்த எஸ்.பாண் டியன் 12.9.2021 அன்று ஆய்வு செய்தார். அப் போது, 15 செ.மீ. நீளம், 10.5 செ.மீ. அகலத்தில் கல்மரம் ஒன்றை கண் டெடுத்தார். அதை, மேலாய்வுக்காக பொற் பனைக் கோட்டையில் அகழாய்வுப் பணியை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இ.இனியனி டம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து எஸ். பாண்டியன் கூறியது: இந்த கல்மரமானது, சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கிரெட்டே சியஸ் காலத்தைச் சேர்ந் தது. அதாவது, தற்போ துள்ள பூக்கும் தாவரங் களான ஆஞ்சியோஸ் பெர்முக்கு முந்தைய ஜிம்னோஸ்பெர்ம் வகை யைச் சேர்ந்தது. இது அரிய தொல்லியல் பொரு ளாக கருதப்படுகிறது. இப்பகுதியை தமிழ்நாடு அரசு ஆய்வுக்கு உட்படுத் தினால், மேலும் இது போன்ற அரிய தொல்லி யல் பொருட்கள் கிடைக் கும் என்றார்.

ஏற்கெனவே, கடந்த 2016இல் இதே பகுதியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழக ஆய்வு மாண வர்களால் கண்டெடுக்கப் பட்ட கல்மரம் ஒன்று புதுக்கோட்டை அருங் காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...