திங்கள், 12 நவம்பர், 2018

புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுப்பு



திருப்பத்தூர், நவ.12  திருப் பத்தூர் அருகே புலிக்குத்திப் பட்டான் நடுகல் கண்டெடுக் கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகி யோர் மேற்கொண்ட கள ஆய் வில் புலிக்குத்திப்பட்டான் நடுகல் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியதாவது:  திருப்பத்தூரிலி ருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் சாலையில் குரும் பேரிக்கு அருகில் உள்ளது நாயக் கனூர் எனும் சிற்றூர். இந்த ஊரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், சிவபாலன் மற்றும் ஆய்வு மாணவி சவுமியா ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில், கள ஆய்வினை மேற்கொண்டோம்.

இவ்வூர் மக்கள் வேடியப்பன் என்ற பெயரில் மூன்று நடுகற் களை பாதுகாப்பு வருகின்றனர். இதில், நடுவில் உள்ள நடுகல் வீரன் ஒருவன் புலியுடன் சண்டையிடுவது போல் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல் லின் அமைப்பானது 4 அடி உயரமும், 3.5 அடி அகலமும் கொண்டதாகக் காட்சி தருகிறது. வீரன் வலது பக்க கொண்டையிட்டுள்ளான். காதுகளில் குண் டலமும் காணப்படுகின்றது. வீரனின் இடது கை புலியின் வாயில் உள்ளது. வலது கையிலுள்ள நீண்ட வாளினால் புலியின் வயிற்றைக் குத்து கிறான் வீரன். இடை கச்சில் குறுவாள் உள்ளது. புலியின் மேல் கால்கள் இரண்டும் வீரனின் இடது கையினைப் பிடித்துள்ளன. வாய் கையினைக் கவ்வி (கடித்தல்) இருக்கிறது. பின் கால்கள் மூலம் நின்ற கோலத்தில் புலி காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. தலையின் மேற்பகுதியில் இறந்த வீரனை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சி வடிவமைக்கப் பட்டுள்ளது. தன்னுடைய ஊருக்குள் புகுந்து மக்களையும், கால்நடைகளையும் கொன்ற கொடிய புலியைக் கொன்று தானும் இறந்து போன வீரனுக்கு இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வூரானது ஜவ்வாதுமலை அடிவாரப் பகுதி என்பதால், பழைய காலத்தில் ஏராளமான புலிகள் இருந்திருக்கும் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.  மேலும், ஜவ்வாது மலை, அதன் அடிவாரப் பகுதிகளில் புலியூர், புலிமடு, புலிக்குகை, புலிக்குட்டை போன்ற ஊர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஊரினைக் காத்து உயிர்விட்ட வீரனை இன்றும் இவ்வூர் மக்கள் வணங்குகின்றனர் என்றார் அவர்.

- விடுதலை நாளேடு, 12.11.18

மன்னனின் மூடத்தனம்

தஞ்சாவூர் சமஸ்தானத்தை ஆண்ட அந்த மன்னரு நாள், கிழமை பாக்காம எந்தக் காரியமும் செய்ய மாட்டாராம். ஒருநாள் ஏதோ வெளியூர்ப் பிராயாணம் போனதால அன்னைக்கு ஏகாதசின்னு தெரியாம சாப்பிட்டு முடிச்சதும் வெற்றிலை போட்டுட்டாராம். “அய்யய்யோ ஏகாதசியும் அதுவுமா இப்பிடி பண்ணிட்டேளே”ன்னு வேதம் அறிஞ்ச ஜோஷியக்காரர்  பீதியை ஏற்படுத்த, அதுக்கு என்ன பரிகாரம்னு மன்னர் கேட்டிருக்கார். உடனே, “என்னைய மாதிரி 40, 50 பிராமணாளுக்கு வீடு, வாசல், கிணத்தோட 50 ஏக்கர் நிலத்தையும் குடுத்து, ஒரு கிராமத்தை ஏற்படுத்திக் கொடுத்தேள்னா எல்லாம் சரியாய்ப்புடும்” என்று பக்குவம் சொல்லியிருக்கார். மன்னரும் அப்படிச் செஞ்சு பெரிய பாவ காரியத்துல இருந்து தப்பிட்டார்.
(நீதி: இலவசமாய் வாங்குனாத் தப்பு. இப்பிடி குணமா கேட்டு வாங்கோணும்)
ஆதாரம்: உ.வே.சா எழுதிய என் சரித்திரம் நூலில், தன் ஊரின் வரலாறாகப் பதிவு செய்திருப்பதில் இருந்து.

*கே.கே.மகேஷ்*
- கட்செவி பதிவு

வியாழன், 1 நவம்பர், 2018

கீழடி: முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கையை அமர்நாத்தே தாக்கல் செய்ய உத்தரவு கிடைத்த பொருட்கள் 2,500 ஆண்டுகள் பழைமையானவை

அமெரிக்க ஆய்வகத்தில் உறுதி!




மதுரை, நவ.1 கீழடியில் கிடைத்த பொருள் கள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கும் பழை மையானவை என, கலிபோர்னியா ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் இரு ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை, முந்தைய கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனே தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்குரைஞர் பிரபாகரபாண்டியன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:

இந்திய தொல்லியல் துறை இயக் குநர் ஜெனரல் கடந்த அக். 3 இல் ஓர்உத்தரவைபிறப்பித்துள்ளார்.அதில், கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் வசம் உள்ள சீலிடப்பட்ட பொருள்கள் மற்றும் ஆய்வு தொடர்பான ஆவணங்களை, புதிதாக நியமிக்கப்பட்டவரிடம் ஒப்படைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. முதலில் ஆய்வுப்பணிகளை மேற்கொண் டவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். அவர் சம்பந்தப்பட்ட ஆய்வு தொடர்பான விசயங்களை நன்கு அறிந்தவர். புதிதாக வந்துள்ளவருக்கு ஏற்கெனவே நடந்த ஆய்வுகள் குறித்து தெரியாது.

ஆய்வின்போது இருந்தவரே அறிக்கை தயாரித்தால் தான் உண்மை யான தகவல்கள் வெளிவரும். இங்கு பல்லாயிரம் ஆண்டுக்கு முந்தைய எழுத் துக்கள் கிடைத்துள்ளன. இவை அசோகர் காலத்திற்கும் முந்தையது.

எனவே, தமிழர் நாகரீகமே முதன்மையானது என்பதால் அதை சிதைக்கும் நோக்கில் இதுபோன்று மத்திய அரசு நடக்கிறது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து அமர்நாத் ராமகிருஷ்ணனே ஆய்வை தொடர்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்த ரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வழக்குரை ஞர் ஆஜராகி, கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் அமெரிக்காவின் கலிபோர்னி யாவிலுள்ள பீட்டா ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. முதல்கட்ட ஆய் வறிக்கை கிடைத்துள்ளது. அதில், சுமார் 2,300 முதல் 2,500 ஆண்டுக்கும் முந்தைய பொருள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வணிக தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாழிகளில் மீன் உள்ளிட்ட பல வண்ண ஓவியங்களை வரைந்துள்ளனர். இலங்கை நாகரீகத்துடன் கூடியவர்களும் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆதன், திஷ்ரன், உதிரன், சாந்தன், இறவன், குலிறன், மாயூரான் போன்ற பல தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வு பணிகளில் அமர் நாத் ராமகிருஷ்ணனும் தொடர அனு மதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

இதையடுத்து, கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வா ராய்ச்சியில் ஈடுபட்ட அமர்நாத் ராம கிருஷ்ணன், இரண்டு கட்ட ஆய்வுகளின் அறிக்கையை தயாரிக்க வேண்டும். அவரது அறிக்கையை 7 மாதத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

- விடுதலை நாளேடு, 1.11.18

திங்கள், 29 அக்டோபர், 2018

பழனி அருகே பழங்கால சின்னங்கள் புதைந்து கிடக்கின்றன அகழாய்வு நடத்த தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை



பழனி, அக்.27 பழனி அருகே இரவிமங்கலம் கிராமம் அமைந் துள்ளது. இப்பகுதியில் முது மக்கள் தாழிகள், எலும்புகள், மண் கலயங்கள், பானைகள், ஓடுகள் போன்றவை உடைந்த நிலையில் கிடக்கின்றன. சுமார் 200 ஏக்கர் பரப்பில் இந்த பழங் கால சின்னங்கள் புதைந்து கிடக்கின்றன.

இந்த இடத்தை தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் மேலும் பல அரிய பொருட்கள் கிடைக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் ஆய்வாளர்கள் கூறிய தாவது:-

இரவிமங்கலம் பகுதியில் பாலாறு-பொருந்தலாறு அணையின் கிளை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டிய போதும், அப்பகுதி யில் விவசாய பணிக்காக நிலத்தை சீரமைத்த போதும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மண்ணுக்குள் புதைந்திருந்த பழங்கால பொருட்கள் சிதைந்து விட்டன.

மீதமுள்ள 100 ஏக்கரில் சுமார் 180-க்கும் மேற்பட்ட பழங்கால சின்னங்கள் கிடைத்துள்ளன.

இரவிமங்கலம் பகுதியில் உள்ள புதைகுழி பகுதிகளில் சங்க காலத்தில் 3 இரும்பு உருக் காலைகள் இருந்தது கண்டறியப் பட்டுள்ளது. இரும்பு அச்சு உலைகள், இரும்பை உருக்க தேவையான சுண்ணாம்பு கட்டிகள் இன்றும் அப்பகுதியில் உள்ளன. சங்க கால புதைகுழிகள் பொதுவாக வட்ட வடிவிலேயே காணப்படும். அதுபோல இங் குள்ள 2 புதைகுழிகளும் வட்ட வடிவில் உள்ளன. சங்க காலத் தின் இறுதியில் இந்த வடி விலான புதைகுழிகள் பயன் படுத்தப்பட்டிருக்கலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இரவிமங்கலம் பகுதியில் இருக்கும் சின்னங்கள், புதை குழிகளை தொல்லியல் துறை யினர் அகழாய்வு செய்தால் ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல் பகுதியில் கிடைத்த தைவிட அதிக சின்னங்கள், பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறினர்.

- விடுதலை நாளேடு, 27.10.18

சனி, 13 அக்டோபர், 2018

‘சதி’ நடுகல் கண்டெடுப்பு



திருப்பத்தூர் அருகே சுந்தரம்பள்ளி யில் 12ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த சதி நடுகல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

திருப்பத்தூர், தூயநெஞ்சக் கல்லூரி யின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் க.மோகன் காந்தி, வீரராகவன், காணிநிலம் மு.முனிசாமி, ஜானகிராமன் ஆகியோர் மேற்கொண்ட ‘கள’ ஆய்வின்போது, நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது:

திருப்பத்தூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சுந்தரம்பள்ளி கிராமத் தில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வரலாற்று ஆவணமான சதி நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுந்தரம்பள்ளியிலுள்ள கரிவரதராஜப் பெருமாள் கோயில் அருகே 4 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட பெரிய பலகைக் கல்லில், போரில் வீர மரணம் அடைந்த வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய கொண்டை யுடன், காதுகளில் பெரிய காதணிகளுடன், வலது கையில் கத்தி ஏந்திய நிலை வீரன் உள்ளார். இடது கையில் குறு கத்தி ஒன்றை கீழே தொங்கவிட்ட நிலையில் உள்ளது. ஆடை மற்றும் ஆபரணங்கள் செதுக்கப் பட்டுள்ளன.

நடுகல் வீரனின் இருபுறமும் உடன் கட்டை ஏறிய 2 பெண்களின் உருவங்களும் உள்ளன.

வலதுபக்கம் உடன்கட்டை ஏறிய பெண் உருவம் வலது கையைத் தொங்கவிட்டும், காதுகளில் குண்டலங்களுடனும் காணப்படு கிறது. இடது பக்கம், வாரிமுடிக்கப்பட்ட கொண்டையும், இடது கையில் விசிறி போன்ற உடன்கட்டை முத்திரையும் உள்ளது.

வீரனின் இடதுபக்கத்தில் மற்றொரு பெண் உருவம் காணப்படுகிறது. வலது கையை மேலே உயர்த்திய நிலையில், இடதுபக்கம் கொண்டையிட்டு, காதுகளில் பெரிய குண்டலங்களுடன், இடது கையில் கள் குடுவை போன்ற முத்திரையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் வீரன் போரில் வீரமரணம் அடைந்த பிறகு இவரு டைய இரண்டு மனைவிகளும் இவரோடு உடன்கட்டை ஏறி உயிர் நீத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

- விடுதலை ஞாயிறு மலர், 22.9.18

கஜினி முகமது கொள்ளைக்காரன் என்றால் மராட்டிய சிவாஜி யார்?

ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்கு கேள்வி!


கஜினிமுகமது 18 முறை படையெடுத்து வந்து இந்தியாவின் செல்வங்களையெல் லாம் கொள்ளையடித்து சென்றான் என்ற வரலாற்றைச் சொல்லி இளைஞர்களுக்கு மதவெறி தூண்டும் சங்கிகளே! பதில் சொல்வீர்!

அவுரங்கசீப்பையும், இசுலாமியர்களை யும் வெற்றி கொண்ட சிவாஜி, தான் ஒரு சூத் திரன் என்பதால் மன்னனாக முடிசூட்டிக் கொள்ள முடியவில்லை. பார்ப்பனர்கள் அவனுக்கு பட்டம் சூட்டும் சடங்கை செய்ய மறுத்துவிட்டார்கள். காகபட்டர், சூத்திர னான சிவாஜியை சத்திரியன் ஆக்குவதாகச் சொல்லி பல்லாயிரம் கோடி பணத்தை  செலவழித்து எடைக்கு எடை நவரத்தினங் களை வாரிச்சுருட்டி கொண்டான். அதன்பிறகும் சிவாஜியின் தாயார் இறக்கவே, காகபட்டர் செய்த யாகம் சரியில்லை, நல்ல நேரத்தில் பட்டம் சூட்டப்பட வில்லையென்று கூறி நிச்சல் பூரி என்ற பார்ப்பான் மறுபடியும் அதே மாதிரி யாகம் செய்து, சிவாஜியிடமிருந்து ஏராள மான செல்வங்களை சுருட்டிக் கொண்டான்.

அதனால் மராட்டிய சிவாஜிக்கு பொரு ளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அவர் தென்னாட்டிற்கு படையெடுத்து வந்தார்.

வேலூர், செஞ்சிக் கோட்டைகளை கைப்பற்றிய சிவாஜி அங்கிருந்த செல்வங் களை கொள்ளையடித்தார்.

தஞ்சையை ஆண்ட வெங்கோஜியை சிறைப்படுத்திய சிவாஜி, ஆட்சியில் பங்கு கேட்டார். பின்னர் தமிழகத்தில் நுழைந்த சிவாஜி தெற்கே செல்லும் போது யார், யார் அந்தப் பகுதியில் பணக்காரர்கள் என்பதையும், ஒவ்வொருவரிடமும் எவ்வளவு தண்டப் பணம் வசூலிக்க வேண்டும் என்பதையும் விவரமாக தெரிந்து வைத்திருந்தார். தண்டப் பணத்தை கசக்கி பிழிந்து  வசூலிக்க  அதிகாரிகள் நியமிக்கப்பட் டனர். பணம் வைத்திருந்தார்கள் என்ற குற்றத்திற்காக அந்தப் பகுதி மக்கள் அனுபவித்த துயரம் அதிகம்.பணம் கொடுத்ததோடு அவர்கள் துயரம் நிற்க வில்லை. சிவாஜியின் படையுடன் 20 ஆயிரம் பேர் பேராசைமிக்க பார்ப்ப னர்கள் வந்தார்கள். அவர்களிடம் காணப் பட்ட பேராசை சொல்லில் அடங்காது. சிவாஜியின் படை அதிகாரிகளும், இரக்கம் சிறிதும் இன்றி பயணிகளையும், நகர வாசிகளையும் கொள்ளையடித்தனர். அவர்களிடம் அச்சம், இரக்க உணர்வும்  சிறிதும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட உள்ளூர்க் காரர்களும்  கொள்ளையடிக்க தொடங் கினர். மேலும் சிலர் கொள்ளையில் பங்கு கிடைக்கும்  என்னும்  ஆசையில் மராட்டிய படையில் சேர்ந்து கொண் டார்கள். கொள்ளையர் வெளிப்படை யாவே வெளியே வந்துமக்களை தாக்கி கொள்ளையடித்தார்கள். சிவாஜி எடுத்து கொள்ளாமல் விட்டு சென்றவற்றை மற்றவர்கள் அபகரித்துக் கொண்டார்கள்.

சிவாஜியின் படைகள் எந்தளவுக்கு மோசமாக நடந்து கொண்டார்கள் என்பதற்கு  உதாரணமாக ஒரு நிகழ்வை  குறிப்பிடலாம். தென்னாட்டின் மீது படை யெடுத்து செல்ல படைகளை அனுப்பி விட்டு பின்னால் சென்ற சிவாஜி வழியில் இருக்கும் கிராமங்கள் பாழடைந்து கிடப் பதையும், சில வீடுகள் பூட்டிக் கிடப்ப தையும்,சில வீடுகள் திறந்து கிடந்ததையும் , கிராமங்களில் ஆள் நடமாட்டம் இல்லாததையும் கவனித்தான். இந்நிலை யில் அவனுடைய குதிரை கட்டுக்கடங் காமல் காட்டுக்குள் ஓடிவிட்டது. அதனை அடக்கி கட்டுப்படுத்திக் கொண்டு திரும் பினார். களைத்து போன அவருக்கு பசியாய் இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். எதிரே குடிசை ஒன்று தென் பட்டது. அங்கு சென்று கதவைத் தட்டிய போது வயதான மூதாட்டி ஒருவர் வெளியே வந்தார். அவரிடம் சிவாஜி தாயே எனக்குப் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு அந்த கிழவி மராட்டியக் கொள்ளைக் காரர்கள் ஏதாவது விட்டு வைத்திருக் கிறார்களா என்று  பார்க்கிறேன். மீதம் ஏதாவது இருந்தால் சமைத்துத் தருகிறேன் என்று சொன்னார். வீட்டில் கொஞ்சம் அரிசி இருந்தது. அதை எடுத்துச் சமைத்து விருந்தாளிக்கு அவள் உணவு படைத்தார். திருப்தியாக சாப்பிட்ட சிவாஜி சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு முகாமிற்கு திரும்பினார்.

மறுநாள் இரண்டு வீரர்களை அனுப்பி அந்த மூதாட்டிக்கு வளையல் பரிசாக அனுப்பினார். அந்த வீரர்களைப் பார்த்தும், திடுக்கிட்ட அந்த  கிழவி மீண்டும் கொள் ளையடிக்க வந்துவிட்டீர்களா? என்று ஆத்திரத்துடன் கேட்டாள். அதற்கு அந்த வீரர்கள் தாயே நீங்கள் பயப்பட வேண்டாம். நேற்றிரவு நீங்கள் சிவாஜி மகாராஜாவிற்கு உணவு அளித்திருக் கிறீர்கள். அதற்காக அவர் உங்களுக்கு இரண்டு தங்க வளையல்களைப் பரிசாக அனுப்பியிருக்கிறார் என்று கூறி அந்த வளையல்களைக் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக உங்களிடமிருந்து ஏதாவது ஒரு நினைவு பரிசை வாங்கி வரச்சொல்லி சிவாஜி தெரிவித்துள்ளார் என்றார்கள். இருந்தால் பார்க்கிறேன் என்று உள்ளே சென்ற பாட்டி நேற்று மராட்டிய வீரர்கள் கொள்ளையடித்துவிட்டு போனதில் இந்த துடைப்பம்தான் மீதம் இருக்கிறது என்று துடைப்பத்தை கொடுத்திருக்கிறாள்.

இப்படி சிவாஜியின் படைவீரர்கள் துடைப்பத்தை தவிர மற்ற அனைத்தையும் கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள்.

சிவாஜி எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், இந்து சுயராஜ்யம் என்ற பெயரில் நடந்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்றும், சூரத்தையும், தமிழ் நாட்டையும் கொள்ளையடித்தது அவ் வளவு நியாயமாகத் தெரியவில்லை என்றும் வரலாற்று அறிஞர்கள்  தெரிவிக்கின்றனர்.

கஜினி முகமது படையெடுத்து சோமநாத புரத்தைக் கொள்ளையடித்துச் சென்றான் அதனால் அவன் இந்துமதத்திற்கும், இந்தியா விற்கும் விரோதி என்றும், இதனால் அவன் சார்ந்த முஸ்லீம்கள் அனைவரும் இந்துக் களுக்கு விரோதி என்றும் இளைஞர் களுக்கு கற்பித்து மதவெறியை தூண்டி வருகிறார்களே!

அப்படியானால் தமிழகத்தை கொள்ளை யடித்த சிவாஜியும் அவருடன் வந்த மராட்டியர்களும், தமிழர்களுக்கு எதிரிகள். அந்த சிவாஜிக்கு சிலை வைக்கும் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பா.ஜ.க. இந்து முன்னணியினர் தமிழர்களுக்கு எதிரிகள் என்று நாங்கள் சொல்லலாமா? இந்து ராஜ்யம் என்றால் இப்படி கொள்ளைய டிப்பதுதான். எனவே இந்துராஜ்யம் தமிழர்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று நாங்கள் சொன்னால் அதனை ஏற்று கொள்வீர்களா?

பெல்.ம.ஆறுமுகம்

- விடுதலை ஞாயிறு மலர், 29.9.18

செவ்வாய், 9 அக்டோபர், 2018

கீழடி கண்மாயில் பழைமையான உறை கிணறு கண்டுபிடிப்பு

கீழடி, அக்.8 கீழடி கண்மாயில் பழைமையான உறை கிணறு சனிக்கிழமை கண்டுபிடிக்கப் பட்டது.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பசியாபுரம்-கீழடி சந்திப்பு பகுதியில் உள்ள நான்கு வழிச் சாலை அருகே கீழடி கண்மாய் உள்ளது.

இக்கண்மாயில் அப்பகுதி பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த போது, பழைமையான கிணறு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து கீழடி பள்ளிச் சந்தை புதூரில் அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழக தொல் லியல் துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அங்கு வந்த தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள் உறை கிணற்றை ஆய்வு செய்தனர். கீழடி அக ழாய்வில் ஏற்கெனவே கிடைத்த உறை கிணற்றின் சம காலத்தை ஒட்டிய சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான உறை கிணறு என்பது ஆய்வில் தெரிய வந்தது.

மேலும், அதனை முழுமை யாக தோண்டி ஆய்வு செய்த போது, ஏற்கெனவே கீழடி அக ழாய்வில்  கண்டு பிடிக்கப்பட்ட உறை கிணற்றை விட இந்த கிணறு பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் அந்த கிணற்றுக்குள் சில மண்பாண்ட பொருள்களும் இருந்தன.

இதனால், இந்த பகுதி முழுவதும் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் மேடு பகுதியாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

- விடுதலை நாளேடு, 8.10.18

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...