புதன், 23 டிசம்பர், 2020

ஆரியத் தேரேறி வரும் சதிகாரர்கள்

திங்கள், 15 ஜூன், 2020

இராசராச_சோழனின்_பொற்கால_ஆட்சி ?

பரவலாக வரலாற்றை நன்கறிந்தவர்கள் ராசராச சோழனை தெலுங்கன் என்று சொல்லுகிறார்கள். அதாவது கொல்டி என்பதே இதனுடைய ஆழமான அர்த்தமுறை. ராசராச சோழன் எப்படி தெலுங்கன் என்பதனை நாம் இந்த கட்டுரையின் கடைசி வரிகளில் பார்ப்போம். எல்லா மாமன்னர்கள் போலவும் தமிழ் மன்னர் என்று சொல்லப்படும் சத்திரிய குல வம்சத்தை சார்ந்த ராசராச'னும் பல பொண்டாட்டிகள் மற்றும் வைப்பாட்டியுடன் உடன் அந்தபுரத்தின் பிடியில் சிக்கியிருந்தார் என்பது தனிக்கதை . பின்னென்னா ? மன்னர் எனறால் அந்தபுரம் இல்லாமலையா இருக்கும் ? வரலாற்றை நோண்டி பார்க்கும்போது பல மன்னர்களின் வாழ்கை அந்நபுரத்திலே கழிந்துதான் போயிருக்கிறு. இங்கு வைப்பாட்டியை பற்றி பேசினால் பல கூமுட்டை தமிழ்த்தேசியவாதிகள் கலைஞர் ஏன் மூன்று பொண்டாட்டி கட்டினார் என்று கேள்வி எழுப்புவார்கள். குறிப்பாக இந்த கேள்வியை எந்த தமிழ்த்தேசியவாதிகள் கேட்பார்கள் என்றால் ? ஈழத்தில் பிணத்தை வைத்து இங்கு அரசியல் செய்யும் சாமான் என்கிற டோபர் ஆமைக்கறிகாரனும் அவருடைய ஆளுமையின்கீழ் வரும் விசிலடித்தான் குஞ்சிகளான அவனுடைய தம்பிமார்களும்தான் இதுபோல ஒவ்வாத அதாவது பொருந்தாக கேள்வியை கேட்டு பையத்தியகாரன்கள் போல கூவிக்கிட்டு இருப்பானுங்க. இவீங்களுக்கு பொண்டாட்டிக்கும் வைப்பாட்டிக்கும் அர்த்தம் தெரியாத ஒருவகையான அழுகிபோன கூமுட்டைகள்.
சரி நாம , ராசராச சோழன் மேட்டருக்கு வருவோம் !
ஆமாம் ராசராச சோழனை பற்றி பேசினால் வழக்குவேற போடுவானுங்கனு வெளியில அரக்கபறக்க பேசிக்கிறானுங்க ? சரி , அவனுங்க நம்ம மீது வழக்காவது போடட்டும் இல்ல வேற எதாவது கூட போடட்டும் . நாம மறைக்கப்பட்ட ராசராச சோழனின் வரலாற்றுக்கு வருவோம் .
ஆமா ராசராசனை பார்ப்பனீய அடிமைனு வேற இங்கே பேசிக்கிறானுங்களோ ?
அடா ஆமா'பா , நீங்க நினைக்கிற மாதிரி மாமன்னர் ரசாராச சோழன் ஆரிய பாரப்பனீயனி்ன் அடிமைதான் . ராசராசன் மட்டுமா பார்ப்பனீயத்தின் அடிமை ? இல்லையில்லை ! ஏறதாழ இந்தியாவை ஆண்ட குறுநில மன்னர்கள் முதல் சிற்றரசர்கள்வரை ஆரிய பார்ப்பனீயத்தின் ஒருவகையான அடிமைகள்தான் .
ஆமா ரஞ்சித் சொன்ன மாதிரி பறையர்களின் நிலத்தை ராசராச சோழன் புடுங்கி கைபர் , போலான் , கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு பஞ்சம் பிழைக்க பரதேசியாக இந்தியாவில் ஊடுருவிய ஆரிய பார்ப்பனீயத்துக்கு கொடுத்தரா ? ஆமா ! ராசராச சோழன் இந்த மண்ணின் பூர்வகுடிகளான ஆதிக்குடிகளான பறையர்களின் நிலங்களை புடுங்கிதான் பார்ப்பனீயத்துக்கு கொடுத்தார் என்று ராசராச சோழன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் நமக்கு சாட்சியாக இருக்கிறன. மற்றும் இதற்கான ஆராய்ச்சி தரவுகளும் நம்மிடம் உள்ளன.
அப்படி , ராசராச சோழன் பறையர்களின் நிலங்களை பிடிங்கி பார்ப்பனர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் ? யாருடைய நிலத்தை ராசராச சோழன் பார்ப்பனர்களுக்கு கொடுத்தான் ! பொதுவாகவே பார்ப்பனர்கள் பஞ்சம் பிழைக்க இந்தியாவில் ஊடுருவினார்கள் என்று நமக்கு வரலாற்று சான்றுழ்கள் உள்ளன . அப்படி இருக்கையில் பார்ப்பனர்களுக்கு எப்படி இங்கு நிலம் வந்தது ? சிலர் சொல்லுவார்கள் பார்ப்பனர்கள் உழைத்து நிலங்களை வாங்கினார்கள் என்று . பார்ப்பனர்கள் கோயிலில் மணியாட்டித்தான் பழக்கப்பட்டவர்கள் , இவர்கள் எப்படி உழைத்து நிலங்களை வாங்கி இருப்பார்கள் ?
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. வரியும் கிடையாது ! தேவதானம் , இறையிலி , அகரங்கள் , அக்ரகாரங்கள் , சதுர்வேதி மங்கலங்கள் , தனிக் கிராமங்கள் என்று Tatal free Allowance'க 250 ஊர்கள் ராசராச சோழன் பார்ப்பனீயத்துக்கு தானமாகவே கொடுத்துள்ளார். இவ்ஊர்களில் எதாவது குற்றம் நிகழ்ந்தாலும் பார்ப்பனீய காவலன் ராசராச சோழனின் அதிகாரிகள் உள்நுழைய மாட்டார்கள். அது மட்டுமா ? லட்சகணக்கானா ஏக்கர் விவாசய நிலங்களையும் ராசராச சோழன் தானமாக பார்ப்பனர்களுக்கு கொடுத்துள்ளான்.
பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் யாருடைய நிலம் என்று இங்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது , இதற்கான விடயம்தான் பா.ரஞ்சித் சொன்ன விடயம் .
ராசராசன் ஆட்சிக்காலத்தில் 11 வகையான வரிகள் விதிக்கப்பட்டன . இதில் ஆச்சிரியமான ஒரு விஷயம் என்னவெனறால் இதில் 11 வகையான வரிகளில் பார்ப்பனர்கள் ஒருவரியை கூட கட்டவேண்டிய அவசியமில்லை என்பதே நாம் இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் .
ராசராசன் ஆட்சியில் விதிக்கப்பட்ட வரிகள் விபரங்கள் இங்கு பார்ப்போம் .
📎 வட்டி நாழி = கழணிக்குத் தண்ணீர் பாய்ச்சிய நேரத்துக்கு வரி
📎 கண்ணாலக் காணம் = பொதுமக்கள் திருமணம் செய்து கொண்டால் செலுத்தப்பட்ட வரி
📎 வண்ணாரப பாறை = துணி வெளுப்பவர்கள் செலுத்திய வரி
📎 மீன் பாட்டம் = மீனவர் செலுத்திய வரி
📎 குசக காணம் = மண்பாண்டக் குயவர்கள் செலுத்திய வரி
📎 தறி இறை = தறி நெய்யும் நெசவாளர் செலுத்திய வரி
📎 ஆட்டு இறை = ஆடு வளர்ப்பவர்கள் செலுத்திய வரி
📎 நல்லெரு இறை = எருது பசு வளர்ப்போர் செலுத்திய வரி
📎 ஓடக் கூலி = ஓடம் செலுத்துவோர் செலுத்திய வரி
📎 ஈழம் பூட்சி = பனைக் கள் இறக்குவோர் செலுத்திய வரி
ராசராச சோழன் ஆட்சிகாலத்தில் மக்கள் இத்தனை வகையான வரிகளை கட்டி நொந்துபோனார்கள் . ராசராச சோழனின் ஆட்சிக்காலத்தை பொற்கால ஆட்சி என்று சொல்லுவார்கள் . ஆமா அவை உண்மைதான் ராசராச சோழனின் ஆட்சி பொற்கால ஆட்சிதான் . இதில் ஒருசின்ன திருத்தம் இது ஒட்டுமொத்த மக்களுக்கான பொற்கால ஆட்சி கிடையாது . மாறாக பஞ்சம் பிழைக்கவந்த ஆரிய பார்ப்பனர்க்கனா பொற்கால ஆட்சி .
சோழ நாட்டு மக்கள் , வரி கொடா இயக்கம் நடத்தியது கூட உண்டு! அதை ஆடுதுறையில் இருக்கும் கல்வெட்டு பேசுகிறது. பிராமணர் முதலிய சதுர்வேதி மங்கல நிலச் சொந்தக்காரர்கள் , இடங்கை 96 வகைச் சாதியினருக்கு இழைத்த கொடுமைகளைக் கல்வெட்டுகள் கூறுகிறது. வரிச் சுமைகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளும் , ஆவணி ஊரில் நமக்கு ஆதாரமாக கிடைத்துள்ளன . இவ்வளவு கொடுமையான வரிகளை கட்டமுடியாமல் பல மக்கள் கோயிலின் கோபுர உச்சியில் ஏறி தற்கொலை செய்துக் கொண்ட வரலாறும் உண்டு . ஒருவர் ஆட்சியில் மக்கள் வரியை கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளுவதுதான் பொற்கால ஆட்சியா ?
உங்க சொந்த நிலத்தில் பாட்டியும் , தாத்தாவும் , அம்மாவும் , அப்பாவும் கழணியில் வேர்க்க விறுவிறுக்க உழைச்சிக் கொட்ட , நேரே வந்து 11 வகயைான வரியை ராசராச சோழ அரசாங்கம் புடுங்கும் . ஆனா பிராமண மானியமாகத் தரப்பட்ட இலவச அரசு நிலத்தில் , தாங்கள் உழைக்காது , உங்களை வைத்தே உழவு செய்து , காசும் பார்த்த பார்ப்பனீயர்கள் , வரி என்று சல்லி காசு கொடுக்க மாட்டார்கள் . இவர்களும் வரியை கொடுக்க மாட்டார்கள் அவர்களும் இவர்களிடம் வரியை கேட்கமாட்டார்கள். இதற்காகதான் ராசராச சோழனின் ஆட்சியை வரலாற்று ஆசிரியர்கள் பார்ப்பனீய மனுதரும ஆட்சி என்று சொல்லுகிறார்கள் .
ராசரசா சோழன் செய்த கொடுமைகள் என்னென்னா ❓
📎 தமிழக கோயில்களை முழுவதும் பிராமண மயமாய் ஆக்கியது
📎 தேவரடியாள் என்ற இறைப்பாலியல் தொழிலை கட்டாய நிறுவனமாக்கி வரிவு செய்தது
📎 தமிழ் மொழியைச் சிதைத்து அரசு ஆவணங்களைக் கிரந்த மயமாய் ஆக்கிக் குவித்தது
📎 சதுர்வேதி மங்கலம் / தேவதானம்/ அக்ரஹார இலவசங்கள் ! பொதுமக்கள் தலையில் வரி ஏற்றம்
📎 வரி கொடுக்காத ஏழை உழவர்களை "சிவத் துரோகி" என்ற சூழ முத்திரை குத்தி அடிமை ஆக்குதல்
📎 பறைச் சேரி / பறைச் சுடுகாடுகள் உருவாக்கம் செய்தது .
சோழ நாட்டின் வயல்களில் பெரும்பகுதி பெரிய கோவிலுடன் இணைக்கப்பட்டு இருந்தது . மக்களிடம் இருந்து விளைச்சலில் 6இல் 1 பங்கு கோயிலுக்கு வரியாக வசூலிக்கப்பட்டன . கோயில் பண்டாரத்தில் இருந்து கடன் கொடுக்கப்பட்டு 12% வட்டி [கந்து மீட்டர் வட்டி] வசூலிப்பட்டது. வரியும் கட்டி , வட்டியும் கட்டி நொடித்துப்போன மக்கள் வெற்றுக்குடிகள் எனும் கோயில் அடிமைகளாக ஆக்கப்பட்டன. பார்ப்பனர்களும் கடன் வழங்கப்படும் ஆனா அவர்களிடம் வட்டி வசூலிக்கப்பட மாட்டார்கள் .
பாரந்தகச் சோழனின் மகளான அனுபமாவை , கொடும்பாளூர் முத்தரையார் மணந்தார் . அதே கொடும்பாளூர்க் குடும்பத்துப் பெண் பூதி ஆதிச்ச பிடாரியை பராந்தகனின் மகன் அரிகுலகேசரி மணந்தான். ஒரு கட்டத்தில் சோழ குலமே தெலுங்கு ஆனது.
- ஶ்ரீதர் முகநூல் பக்கம், 15.6.20

வெள்ளி, 20 மார்ச், 2020

கிருஷ்ணகிரி அருகே 4,500 ஆண்டு பழைமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 18-  கிருஷ்ணகிரி அருகே 4500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடன பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி, மேலூர் முனீஸ்வரன் கோயில் அருகே பனி குண்டு பாறை அடியில், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி வர லாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவின் தலைவர் நாரா யணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு அரிய வகை பாறை ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அருங்காட்சியக காப்பாட் சியர் கூறியது: இது ஒரு அரியவகை பாறை ஓவியம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெண்சாந்து ஓவி யங்களே அதிகளவில் காணப்படு கிறது. அங்கொன்றும், இங்கொன் றுமாக செஞ்சாந்து ஓவியங்கள் காணப்படுகிறது. தற்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ள முழு ஓவியமும் வெளிறிய செஞ்சாந்து ஓவியம் ஆகும்.

7 மீட்டர் நீளத்துக்கு குழு நடனம் போன்று வளைந்து, வளைந்து காணப்படுகிறது. பல இடங்களில் பாறை கீழே உதிர்ந்து விட்டதால் தொடர் விட்டுப் போய் உள்ளது. இவை கி.மு 2000ஆம் ஆண்டில் வரையப்பட்டு இருக்கலாம். அதாவது 4 ஆயிரம் முதல் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்களாகும். பையம் பள்ளி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த புதிய கற்கால வீடு போன்றே இந்த பாறை ஓவியத்தில் ஒரு குடிசை காட்டப்பட்டுள்ளது. குதிரையின் உருவமும் உள்ளது. செவ்வக அமைப்பினுள் மனிதன் உள்ளது போல் காட்டப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- விடுதலை நாளேடு, 18.3.20

திங்கள், 24 பிப்ரவரி, 2020

ஈரோடு மாவட்டத்தில் 1,200 ஆண்டுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு


ஈரோடு, பிப்.24,  ஈரோடு  மாவட்டம் பவானி அருகே பிரம்மதேசம் கிராமத்தில் கல்லாம்பாறை பகுதியில் உள்ள  ஒரு ஓடைக்கு அருகில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் கி.பி.8ஆம்  நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஏரி  இருந்ததும், கொங்கு மண்டலத்தின் மிகவும்  பழைமையான ஏரி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் புலவர் ராசு கூறியதாவது: கல்வெட்டில் ‘செருக்கலி நாடாளரால் பணிக்கப்பட்டது’ என கூறப் பட்டுள்ளது. ஏரியின் கரை ‘சிறை’ என்றும், ஏரியின் நீர்வெளியேறும் மதகு  ‘வாய்’ என்றும் கூறப்பட்டது. ஏரிபோல கரைகளுக்கு நட்டன் சிறை, மதகுகளுக்கு  நட்டன் வாய் என்று  அழைக்கப்பட்டது.

இந்த ஏரியின் பயனை  நாடாளரின் வழியினராகிய ‘மக்கள் மக்கள், பேரர் பேரர்’  அதாவது நாடாளரின்  வம்சத்தினர் அனுபவித்த தாக  குறிப்பிடப்பட்டு உள்ளது. பிற்காலத்தில் 8 ஆறுகளில் 90  அணைகள் கட்டி நீர்ப்பாசன வசதி பெருக்கிய  மக்களின் தொடக்க முயற்சியை  இது காட்டுகிறது. இவ்வாறு புலவர் ராசு கூறினார்.

 - விடுதலை நாளேடு, 24.2.20

புதன், 19 பிப்ரவரி, 2020

உத்தமதானபுரம் (தஞ்சைமாவட்டம்) பெயர்க் காரணம்

திராவிடக் கட்சிகளால்தான் நாடு குட்டிச்சுவரானது...என்று ஒப்பாரி வைத்து
தமிழ்நாட்டை காப்பாற்றப் புறப்பட்டிருக்கும்
திடீர் ஊழல்ஒழிப்பு போராளிகளின்
மேலான கவனத்திற்கு...

தஞ்சையை ஆண்ட மன்னர் ஒருவர் படைபரிவாரங்களுடன் பயணம் சென்றாராம்.
இடையே ஒரு இடத்தில் உணவருந்திவிட்டு,
தாம்பூலம் தரித்துக்கொண்டு மந்திரி பிரதானிகளிடம் பேசிக்கொண்டிருந்தாராம்.
பேச்சுவாக்கில் இன்று என்ன திதி என்று கேட்டாராம். இன்றிருப்பதை போல் அன்று நாட்காட்டி இல்லாததால் மந்திரிகள் உடனடியாக ஒரு பஞ்சாங்க பார்ப்பனரை மன்னரிடத்தி்ல் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
பஞ்சாங்கத்தை கணித்த பார்ப்பனர்;
மன்னா, இன்று ஏகாதசி திதி என்று சொல்ல
மாவீரர் குலத்திலகமான 
மன்னாதி மன்னரும், மங்குனி மந்திரிகளும்
அதிர்ச்சியடைந்து அலறினார்களாம்! காரணம்.... ஏகாதசியன்று மன்னர் விரதமிருப்பார். உணவருந்தமாட்டார்.
ஆனால், 
இன்று உணவும் உண்டு தாம்பூலமும் தரித்தாகிவிட்டது. 
என்னசெய்வது? 
விரதபங்கமாகிவிட்டதே?
பாவம் வந்து சூழ்ந்து விட்டதே?
நரகத்திற்கு செல்லாமல் தப்புவது எப்படி?
நம்பெருமான் மோட்சத்திற்கு செல்வதெப்படி?
என ஒரே பரபரப்பு...அங்கலாய்ப்பு...

பரிகாரமென்ன பூதேவரே? என்று 
பஞ்சாங்க பார்ப்பனரின் காலைப்பிடித்து
மன்னர் கெஞ்ச...
கவலைவேண்டாம் அரசே, பரிகாரம் உள்ளது.
நீங்கள் தங்கியுள்ள இந்த இடத்தில்
கிழக்கு மேற்காக அய்ம்பத்து நான்கு வீடுகளும்,
வடக்கு தெற்காக அய்ம்பத்து நான்கு வீடுகளும் கட்டி, 
இரண்டு வீட்டிற்கு ஒரு கிணறு வெட்டி,
ஆகமொத்தம் நூற்றி எட்டு அந்தணர்களுக்கு
பொன்னும், பொருளும், நிலமும், பசுவும்
கொடுத்து குடியமர்த்தினால் செய்த பாவம் தீருமென்று சொன்னானாம் பஞ்சாங்கப்புலி!
அப்படியே ஆகட்டுமென்றான் மன்னன்.

அரசகட்டளை பிறந்தது!
அந்தணர்கள் மனம் குளிர தாணங்கள் வாரிவழங்கப்பட்டது...
வந்த பாவம் தொலைந்ததென்று
அகமகிழ்ந்தானம் அறிவுகெட்ட அரசன்.

உத்தமமான தானத்தை செய்ததால்
இன்று முதல் இவ்வூர் உத்தமதானபுரம்
என்று அழைக்கப்படும் என புகழ்ந்து பாடினார்களாம் புத்திகெட்ட புலவர்பெருமக்கள்!
இந்த #உத்தமதானபுரம் தஞ்சைமாவட்டம்
பாபநாசம் அருகில் உள்ளது.
இதுதான் மகாஉபாத்யாயா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்!
தன் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் தனது ஊரின் தோற்றத்தை எழுதியிருக்கிறார் தமிழ்தாத்தா.
 _____________________________________________

ஒருநாள் மன்னர் கிருஷ்ணதேவராயர்
சோகத்துடன் அரசவையில் அமர்ந்திருந்தாராம்.என்னவென்று தெரியாமல் எல்லோரும் கலங்கி நிற்க....
அரண்மனை ராஜகுருவை அழைத்தாராம் மன்னர். 
வந்த ராஜகுருவின் காலில் விழுந்த மன்னரைப் பார்த்து 
மங்கலம் உண்டாகட்டும் என்று ஆசீர்வாதம் செய்தவிட்டு  ஏனிந்த கவலை? என்று கேட்டாராம் ராஜகுரு.

குலகுருவே, எனது் தாயார் மரணப்படுக்கையில் இருந்தபோது மாம்பழம் சாப்பிட வேண்டுமென ஆசைப்பட்டார். ஆனால்....உயர்ரக மாம்பழங்களை கொண்டுவருவதற்குள் உயிர் பிரிந்து விட்டதே... பெற்ற தாயின் கடைசி ஆசையை
நிறைவேற்ற முடியாத பாவியாகிவிட்டேனே,
இதற்கு பரிகாரமென்ன என்று கேட்டாராம்.

அதற்கு ராஜகுரு, 
மன்னா...இதென்ன பிரமாதம்? 
நமது நாட்டிலுள்ள
வேதமறிந்த பிராமணர்களுக்கு
தங்கத்தால் மாம்பழம் செய்து
தானம் கொடுத்தால் பாவம் தீரும், தங்களது
தாயின் ஆசையும் நிறைவேறும் என்றாராம்.

மன்னரின் பாவம் தொலைக்க
மக்கள் பணத்தில் தங்க மாம்பழம் வழங்கப்பட்டது பார்ப்பனர்களுக்கு!

இப்படி மன்னராட்சி காலத்திலும்,
அதன்பிறகு வந்த வெள்ளையர் காலத்திலும்
மக்கள் பணத்தை, பொதுச் சொத்தை
அரச சுகபோகத்தை, வேலை வாய்ப்பை
ஏகபோகமாக கொள்ளையடித்த இவர்கள்தான் இன்று ஊழல் ஒழிப்பு பேசுகிறார்கள்.

ஒரு அறுபது ஆண்டுகளாக.... தேர்தல் முறை வந்த இந்தகாலத்தில் 
அரசை கைபற்றிய சாமானிய மக்களுக்கு
அதை மக்களுக்குரியதாக பயன்படுத்த தெரியவில்லை.

புதிதாக உள்ளே நுழைந்தவன் கிடைத்தவரையில் சுருட்டுகிறான்.
கேள்வி கேட்பாரற்று அன்று பட்டபகல் கொள்ளையடித்த பார்ப்பனர்கள் இன்று
புனிதர் வேடம் போடுகின்றனர்.
ஊழல் ஒழிப்பு என ஆடுகின்றனர்.

சில காவல் துறையினர் சில்லறைத்திருடர்களை கண்டும் காணாமல் இருப்பது போல இருப்பார்கள். கையூட்டு பெற்றுக்கொண்டு வளர்த்தும் விடுவார்கள்.ஆனால்.....
தங்களு்க்கு ஆபத்து வரும் நேரத்தில் ,
மக்களிடத்தில் அம்பலப்படும் நேரத்தில் சில்லரைத்திருடர்களை பிடறியில் அடித்து கைது செய்து வழக்கும் பதிந்து தங்களது நேர்மையை நிலைநாட்டுவார்கள்!
இதைப்போன்றதுதான்
உயர்சாதியினரின் ஊழல் ஒழிப்பு நாடகம்!

நம்மாட்கள் கரி திருடியவன்....
பார்ப்பனர்கள் ரயிலையே விழுங்கியவர்கள்!

இன்று, ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. 
ஆனால்....
உத்தமதானபுரங்களும், சதுர்வேதிமங்கலங்களும்,
மடாதிபதிகளின் கணக்கற்ற சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படுமா?
பறிமுதல் செய்ய போராடுவார்களா ஊழல் ஒழிப்பு போராளிகள்?

இந்திய சமூக வரலாற்றை நுட்பமாக
ஆய்ந்து, அறிந்து, தேர்ந்து, தெளியாமல்
இது புரியாது.

நமக்காகவே இந்த சமூகத்தை
அலசி ஆராய்ந்து தங்களது சிந்தனைகளை
பல்லாயிரம் பக்கங்களில் செதுக்கி
வைத்திருப்பவர்கள்
#அம்பேத்கரும்_பெரியாரும்.

இவர்களது எழுத்துக்களை நான்கு பக்கமாவது வாசிக்காமல் இன்றைய இளைஞர்கள் எந்த போராட்டம் செய்தாலும்
அது பயனற்றதாகும்.
பார்ப்பனர்க்கே பயனளிப்பதாகும்.
ஆழ்ந்து சிந்தியுங்கள்!
                                                   #Viduthalaiarasu
- 19.2.17 முகநூல் பதிவு

சனி, 15 பிப்ரவரி, 2020

காளையார்கோவிலில் 13ஆம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தஞ்சையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் வரலாற்று ஆய்வாளர்களான சரஸ்வதி மகால் நூலக தமிழ் பண்டிதர் மணி.மாறன், ஜம்புலிங்கம், கோவிந்தராஜன் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் 2 பாண்டியர்கால கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.

இதுகுறித்து மணி.மாறன் கூறியதாவது: காளையார் கோவிலின் பழைமையான பெயர் கானப்பேரெயில், திருக்கானப்பேர், தலையிலங்கானம் என அழைக்கப் பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்களில் திருக்கானப்பேரும் ஒன்று. அங்குள்ள சோமேஸ்வரர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள ராஜகோபுரம் மருது சகோதரர்களாலும், சுந்தரேஸ்வரர் கேவில், காளீஸ்வரர் கேவில் கோபுரம் வரகுணபாண்டியனாலும் அமைக்கப்பட்டது.

சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் கானப்பே ரெயில் என்ற அரண் அமைத்து சிங்களப்படைகளை வென்று ஆட்சி செய்த மன்னன் வேங்கைமார்பன். இம்மன்னன் காலத்தில் ஆழம் நிறைந்த அகழியும், மதில்களும், அடர்ந்த காவற்காட்டையும் உருவாக்கி பகைவர் எளிதில் கைப்பற்ற முடியாத அளவில் காளையார்கோவிலை அமைத்துள்ளார்.

கடைச்சங்க கால பாண்டிய மன்னன் விக்கிர பெருவழுதி, கானப்பேரெயிலை கைப்பற்றினான். கானப்பேரெயிலை சுற்றி இருக்கும் காடுகளின் அடர்த்தி தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வரையிலும், திண்டுக்கல், அழகர்கோயில் வரையிலும் எல்லையாய் அமைந்துள்ளது.

அங்குள்ள கண்மாயின் உள்பகுதியில் பிற்காலத்தில் மருதுபாண்டியர்களால் கட்டப்பெற்ற நாணயசாலை கட்டடம் பழுதடைந்து புதர் மண்டிக் கிடக்கிறது. அதன் வாயிற்படியில் பாண்டியர் காலத்தை சேர்ந்த உடைந்த நிலையில் உள்ள துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.

இதேபோன்று மற்றொரு பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றின் உடைந்த பகுதி கண்டறியப்பட்டது. அதில் பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்ட திரு விடையாட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரலாற்று ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் புதிய செய்திகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மாமன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் தங்களின் பெரும்படையை இவ்வூரின் வழியே வழிநடத்தி ஈழம் சென்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கி.பி.1325இல் வந்த அரபு நாட்டு பயணி திமிஸ்கி என்பவர் இவ்வூரை காய்ன் என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார். அவர் தம் பயணக்குறிப்பில் தென்னகத்தின் சிறந்த ஊர்களில் ஓர் ஊராக இவ்வூரை பதிவு செய்துள்ளார்.

நன்றி: தினகரன் (21.12.2019)

 -  விடுதலை ஞாயிறு மலர், 15.2.20

திங்கள், 2 டிசம்பர், 2019

வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள்-4

ஆய்வுக்கட்டுரை

தொல்லியல் ஆய்வாளர் ச.தீபிகா

 

சோழர் காலக் கல்வெட்டுகள்

உத்திரமேரூர் குடவோலை முறை

சொல்லும் கல்வெட்டு

 

ராஜ ராஜ சோழனின் அண்ணன் கொலை செய்யப்பட்டதை கூறும் கல்வெட்டு

தமிழகத்தில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் சுமார் பத்தாயிரம் கல்வெட்டுகள் சோழர் காலக் கல்வெட்டுகள் ஆகும். சோழர் காலத்தில் 200 முதல் 300 கற்கோயில்கள் கட்டப்பட்டன. கோயில் சுவர்களிலும், தூண்களிலும் பல கல்வெட்டுகள்பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் வேதியர்களுக்கும், போர் வீரர்களுக்கும், கோயில்களுக்கும் மன்னர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்அளித்த கொடைகளைப் பற்றியே குறிப்பிடுவதாக அமைந்துள்ளன. சோழர் காலக் கல்வெட்டுகளில் வரலாற்றுச் செய்திகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பவை மிகக் குறைவே.

முன்பு கூறியதைப் போல சோழர்காலக் கல்வெட்டு ஒவ்வொன்றும் மங்களச் சொற்களைக் கூறிக்கொண்டே துவங்குகின்றது, அடுத்து அம்மனுக்குரிய வம்சாவளி செய்திகள் விளக்கப்படுகின்றன. இச்செய்திகளில் புராணங்களும் இதிகாசங்களும் கலந்து இருப்பதை நாம் காணலாம். தமிழ்க் கல்வெட்டுகளின் மெய்க்கீர்த்திகளில் மன்னர்களின் வெற்றி நிகழ்வுகளை பொறிக்கத் தொடங்கியது ராஜராஜ சோழனின் காலத்தில்தான்!

சோழர் காலக் கல்வெட்டுகள் வேதியர்க்குக் கொடையாக அளிக்கப்பட்ட பிரம்மதேய கிராமங்களைப் பற்றிய செய்திகளை துல்லியமாக விளக்குகின்றன. அக்கிராமங்களில் வசிக்கும் வேதியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றியும், அவர்களுக்கு வரி விலக்குகள் அளிக்கப்பட்ட செய்தியும் கோயில்சுவர் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பேசப்படுகிறது. சோழர் காலத்தில் இருந்த 1300 கிராமங்களில், சுமார் 250 கிராமங்கள் பிரம்மதேய கிராமங்களாக விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

சோழர் காலக் கல்வெட்டுகள் சிலவற்றில் நில அளவை குறித்து மிகத்துல்லியமாக அளவுகோல்களுடன் விளக்கப்பட்டுள்ளன. ஆனால், தஞ்சை பெரியகோயில் எவ்வாறு வடிவமைத்து, உருவாக்கப்பெற்றது என்ற செய்தி கல்வெட்டுகளில் குறிக்கப்படவில்லை.

பெரும்பாலான வெளிநாட்டுச் சான்றுகளே சோழர்களுடைய வெளியுறவு, வரலாற்றுக் குறிப்புகளை எடுத்துரைக்கின்றன. அதற்கு சான்றாக ராஜராஜசோழன், சீன சாங் பேரரசுடன் தன் வெளிநாட்டு உறவை மேன்மைப்படுத்திய செய்தியை சீன நாட்டில் உள்ள சாங் பேரரசின் வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல் தாய்லாந்தின் சைலேந்திரப் பேரரசு மன்னர்களால், நாகப்பட்டினத்தில் அமைக்கப்பெற்ற சூடாமணி பௌத்த விகாரையைசோழ மன்னர்கள் போற்றி வளர்த்தனர் என்ற செய்தியை தென்கிழக்காசிய வரலாற்று ஆவணங்களின் மூலம் நாம் அறிய முடிகிறது. சோழர்களின் சிறப்புமிக்க தென்கிழக்காசிய படையெடுப்பைக் கூறும் கல்வெட்டுகள், அவர்கள் எவ்வாறு கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர், அதற்கான வழிமுறைகளும் விளக்கங்களும் என்ன என்பன போன்ற விவரங்கள் எந்த கல்வெட்டிலும் இல்லை.

பல கல்வெட்டுகளில் சோழ மன்னர்கள் ராஜகேசரி, பரகேசரி போன்ற பட்டங்களைத் தங்கள் பெயருடன் இணைத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான கல்வெட்டுகளில் இப்பட்டங்களே காணப்படுகின்றன; மன்னனின் பெயர்கள் வருவது குறைவே.

முதல் பராந்தகனின் (கி.பி.917) உத்திரமேரூர் கல்வெட்டு ஓர் அரிய வரலாற்றுச் செய்தியை எடுத்துரைக்கிறது.  உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் சபை ஒன்று இயங்கி வந்துள்ளது. அச்சபைக்கான அங்கத்தினர்களைத் தேர்வு செய்ய குடவோலை முறை செயல்பட்டது என்று இரு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உத்திரமேரூர், பல்லவர் காலத்திலேயே (கி.பி.750) 1200 வேத வைஷ்ணவ வேதியர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் ஆகும். எனவே இது உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டது. ஆரம்பம் முதலே இது ஒரு வேதியர் குடியிருப்பாக  திகழ்ந்திருக்கிறது.

தமிழகக் கல்வெட்டுகளில் வரலாற்று நிகழ்வை வெளிப்படுத்தும் முக்கியமான ஒன்று கல்வெட்டு உடையார்குடி கல்வெட்டாகும். சுந்தர சோழனின் தலைமகனும், முதலாம் ராஜராஜ சோழனின் அண்ணனுமாகிய ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டது குறித்து இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டு ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆதித்த கரிகாலன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் என்றும், வீரநாராயணசதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த சிலர் இக்கொலைக்குக் காரணமாக இருந்தார்கள் என்றும், மன்னனின் ஆணையின் பெயரில் அவர்களிடமிருந்தும், அவர்களின் குடும்பத்தினரிடமிருந்தும் நிலங்களும், அரசு உரிமங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் இக்கல்வெட்டில் இருந்து அறிகிறோம்.

அகழாய்வுகளில் கிடைக்கும் செய்திகளை மெய்ப்பிக்க சில சமயங்களில் கல்வெட்டுகள் மிகவும் உதவுகின்றன. சான்றாக உறையூரில்அகழ்வாராய்ச்சியில் கி.பி. 9-10 நூற்றாண்டில் ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். இதை மெய்ப்பிக்கும்விதமாக உறையூருக்கு அருகில் உள்ள அல்லூர் கோயிலில் உள்ள முதலாம் பராந்தக சோழனுடைய கல்வெட்டில் காவிரி வெள்ளத்தால் அல்லூர் கோயில்நிலங்கள் அழிந்தன என்று கூறப்பட்டுள்ளது.

முதலாம் ராஜராஜன் தஞ்சை பெரிய கோயிலுக்கு 400 தளிச்சேரிப் பெண்களை பணிக்காக நியமித்தான் என்ற பெரிய கோயில் கல்வெட்டு  குறிப்பிடத்தக்க மற்றொரு கல்வெட்டாகும். அக்கல்வெட்டில் 400 பெண்களின் பெயர்களும், அவர்களுடைய ஊர் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.  அது மட்டுமில்லாமல்,  கோயிலின் அருகே ஒவ்வொருவருக்கும் தனி வீடு ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 கலம் நெல் விளையும் நிலம் வழங்கப் பெற்றுள்ளது என்பன போன்ற செய்திகள் இக் கல்வெட்டுகளில்  மிக விளக்கமாகவும் தெளிவாகவும் பொறிக்கப்பட்டுள்ளன.

சோழ மன்னர்கள் தாங்கள் கட்டிய கோயில்களைத் தவிர, அவர்களுக்கு முன்னர் ஆட்சி புரிந்த  பல்லவர்களின் கோயில்களையும் பேணி போற்றினர்  என்பதற்குச் சான்றாக பல சோழர் மன்னர்களின் கல்வெட்டுகள்  மகாபலிபுரத்தில்  உள்ள பல்லவர் கால  கடற்கரைக் கோயிலிலும், ஆதிவராக குடைவரை கோயிலிலும் கிடைக்கின்றன.  இக்கல்வெட்டுகளின் மூலம் பல்லவர்கள் சூட்டிய கோயில் பெயர்கள்  சோழர் காலத்திலும் அவ்வாறு வழக்கத்திலிருந்ததை  நாம் அறிய முடிகிறது. 

காலங்கள் செல்லச் செல்ல சோழர்களை அடுத்து பாண்டியர்களும், விஜயநகரப் பேரரசும், நாயக்கர்களும் தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற கல்வெட்டுகளின் மூலம் செய்திகளைக் கொடுத்துச் சென்றுள்ளனர். இவற்றை ஆவணப்படுத்தும் பணிகளை இன்னும் பல அறிஞர்களும் மாணவர்களும் மேற்கொண்டுவருகின்றனர். சங்ககாலம் முதல் சோழர் காலம் (சுமார் 1300 ஆண்டுகள்) வரையிலான தமிழகத்தின் கல்வெட்டுகளின் வரலாற்றை இதுவரை நாம் கண்டோம். அதற்குப் பிந்தைய காலக் கல்வெட்டுகள் நிறைய கிடைக்கின்றன. மிகப் பெரும்பாலான கல்வெட்டுகள் முறையாகப் படியெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் பழங்காலக் கோயில்கள், மடங்கள், பயணியர் இளைப்பாறும் இடங்கள், குன்றுகள், மலைகள், பாறைகளில் நம் வரலாற்றுச் செய்திகள் பதிந்திருக்கின்றன. புதுப்பித்தல் என்ற பெயரில் அவற்றை அழித்துவிடாமல், மறைத்துவிடாமல் படியெடுத்துப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்குண்டு.

(நிறைவு)

 - உண்மை இதழ் 16-31. 3. 19

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...