வெள்ளி, 1 ஜூலை, 2022

நாட்றாம்பள்ளி அருகே கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுப்பு

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

தமிழ்நாடு சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லின் வயது சுமார் 3,200 ஆண்டுகள்

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

சிவகங்கை அருகே 16ஆம் நூற்றாண்டு சிலை கண்டெடுப்பு


சிவகங்கை, ஆக.22 சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தலைவர் நா.சுந்தர ராஜன் மற்றும் புத்தகக்கடை முருகன் ஆகியோர் முத்துப்பட்டி பகுதியில் உள்ள தனியார் இடத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிலையைக் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்துப் புலவர் கா.காளிராசா கூறும்போது, ‘’பழங் காலத்தில் தங்களது அரசர் போரில் வெல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டு கொற்றவை தெய்வம் முன்பாக வீரர்கள் தங்களை பலி கொடுக்கும் பழக்கம் இருந்தது. இதில் நவகண்டம் என்பது உடலில் 9 இடங்களில் வெட்டிக் கொண்டு உயிரை விடுவர். அவ்வீரர்களை நினைவுபடுத்தும் வகையில் சிலை வடிவமைக்கப்படும்.

மேலும் இப்பழக்கம் 9ஆம் நூற் றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அதிகமாக இருந்தது. அதன்பிறகு படிப்படி யாகக் குறையத் தொடங்கியது. முத்துப்பட்டியில் கண்டறியப்பட்ட நவகண்டம் சிலை 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இச்சிலை மூன்றடி உயரத்தில், ஒன்றரை அடி அகலத்தில் உள்ளது. தலைமுடிகள் கொண்டையாக கட்டியபடியும், சிதறிய 3 கற்றை களாகவும் உள்ளன. முகத்தில் மீசை காட்டப்பட்டுள்ளது, கழுத்தில் வேலைப்பாடுடன் கூடிய ஆபரண மும், கையில் கழல் போன்ற ஆபரண மும் உள்ளன.

மேலாடை தொங்குவதைப் போல் உள்ளது. இடுப்பில் உறை யுடன் கூடிய குத்துவாள், கால்களில் காலணிகள் உள்ளன. ஒரு கை வில்லுடனும், மற்றொரு கை சிதைந்து உள்ளது. கழுத்தில் வலது புறத்தில் இருந்து இடதுபுறமாகக் கத்தி குத்தியபடி உள்ளது.

மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று நவகண்ட சிலையை சிவகங்கை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க நில உரிமையாளர் ஒப்புக் கொண் டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.

சனி, 1 ஜனவரி, 2022

பெருங்குடி: கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு


மதுரைநவ. 25- மதுரை விமான  நிலையம் அருகே பெருங்குடி  கண்மாயில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச்  சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு  கண்டறியப் பட்டுள்ளது.

மதுரை பெருங்குடி பெரிய கண்மாய்  அருகே கல்வெட்டு இருப்பதாக  முதுகலை வரலாற்றுத் துறை  மாணவர் சூரியபிர காஷ் தகவல்  அளித்தார்அதன்படி மதுரை சரசு வதி  நாராயணன் கல்லூரி வரலாற்றுத்  துறை உத விப் பேராசிரியர்  து.முனீஸ்வரன் மற்றும்  பேராசி ரியர்கள் லட்சுமணமூர்த்தி,  ஆதிபெருமாள்சாமி ஆகியோர் கள  ஆய்வு செய்தனர்ஆலமரத்து  விநாயகர் கோயில் அருகே  குத்துக்கால் பாதி புதைந்த நிலையில்  கல்வெட்டு இருந்ததுஇதனை  ஆய்வு செய்ததில் கி.பி.13ஆம்  நூற் றாண்டை சேர்ந்த கல்வெட்டு  எனக் கண்டறியப்பட்டது.

இதுகுறித்துப் பேராசிரியர்கள்  முனீஸ் வரன்லட்சுமணமூர்த்தி  ஆகியோர் கூறும்போது,  "வேளாண்மைமண் பாண்டத்  தொழிலில் சிறந்து விளங்கிய  பெருங் குடியில் பெரிய கண்மாய்  ஆலமரத்து விநாயகர் கோயில் எதிரே  கல்தூண் உள்ளதுஅவை மண் ணில்  புதைந்த நிலையில் 5 அடி நீளக் கல்  தூணில் எட்டுக்கோணம், 2 பட்டை  வடிவத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.

மதுரை பெருங்குடி பெரிய  கண்மாயில் உள்ள கி.பி. 13ஆம்  நூற்றாண் டைச் சேர்ந்த நிலக்கொடை  கல்வெட்டு.

தூணின் மேல் பகுதிப் பட்டையில் 3  பக்கம் நில அளவைக் குறியீடுகள்,  மற்றொரு பக்கம்  கோட் டோவியமாக  வரையப் பட்டுள்ளதுநிலத்தை  வைணவக் கோயிலுக்கு  நிலக்கொடையாகக் கொடுத்ததைச்  சுட்டிக் காட்டுகிறதுகல்தூணின்  கீழ்பட்டைப் பகுதியில் 12 வரிகள்  உள்ள எழுத்தமை வின் வடிவத்தை  வைத்து கி.பி.13ஆம் நூற்றாண் டைச்  சேர்ந்தது எனக்  கண்டறியப்பட்டுள்ளது.

பல எழுத்துகள்  தேய் மானமடைந்ததால் முழுப்  பொருள் அறிய முடியவில்லை.  தொல்லிய லாளர்  சொ.சாந்தலிங்கத் தின் உதவியுடன்  கல் வெட்டு படிக்கப்பட்ட தில்,  விக்கிரம பாண்டியன் பேரரையான்  என்ற சிற்றரசன் இப்பகுதியை ஆட்சி  செய்ததாகவும்அப்போது நிலதானம்  வழங்கியவரையும்ஆவ ணமாக  எழுதிக்கொடுத்த குமராஜன்  என்பவரின் பெயரும் கல்வெட்டு  இறுதி வரியில் இருப்பதை அறிய  முடிகிறது’’ என்று தெரிவித்தனர்.

வெள்ளி, 8 அக்டோபர், 2021

புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம் கண்டெடுப்பு

 

புதுக்கோட்டைசெப். 14- புதுக் கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழைமை யான கல்மரம் 12.9.2021 அன்று கண்டெடுக்கப்பட் டுள்ளது.

புதுக்கோட்டை நரி மேட்டின் ஒரு பகுதியில் கூழாங்கல்சுண்ணாம்பு கற்கள் அதிகளவில் காணப்படுகின்றனஇந்தப் பகுதியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தின் தொல்லியல் ஆய்வா ளரான புதுக்கோட்டை யைச் சேர்ந்த எஸ்.பாண் டியன் 12.9.2021 அன்று ஆய்வு செய்தார்அப் போது, 15 செ.மீநீளம், 10.5 செ.மீஅகலத்தில் கல்மரம் ஒன்றை கண் டெடுத்தார்அதைமேலாய்வுக்காக பொற் பனைக் கோட்டையில் அகழாய்வுப் பணியை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் .இனியனி டம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து எஸ்பாண்டியன் கூறியதுஇந்த கல்மரமானதுசுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கிரெட்டே சியஸ் காலத்தைச் சேர்ந் ததுஅதாவதுதற்போ துள்ள பூக்கும் தாவரங் களான ஆஞ்சியோஸ் பெர்முக்கு முந்தைய ஜிம்னோஸ்பெர்ம் வகை யைச் சேர்ந்ததுஇது அரிய தொல்லியல் பொரு ளாக கருதப்படுகிறதுஇப்பகுதியை தமிழ்நாடு அரசு ஆய்வுக்கு உட்படுத் தினால்மேலும் இது போன்ற அரிய தொல்லி யல் பொருட்கள் கிடைக் கும் என்றார்.

ஏற்கெனவேகடந்த 2016இல் இதே பகுதியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழக ஆய்வு மாண வர்களால் கண்டெடுக்கப் பட்ட கல்மரம் ஒன்று புதுக்கோட்டை அருங் காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் குதிர் கண்டுபிடிப்பு

 

தூத்துக்குடிசெப். 19- தூத்துக் குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கையில் நடைபெற்று வரும் அக ழாய்வுப் பணியில் சுமார் 5 அடி உயரம் கொண்ட பழங்காலக் குதிர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கொற்கையில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு வாய்ந்த துறைமுகம் இருந்துள் ளதுபாண்டிய மன்னர் களின் ஆளுகைக்கு உட் பட்ட பகுதியான இங்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி யும்இங்கிருந்து ஏற்று மதியும் நடந்துள்ளது.

1966-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் நாகசாமி குழுவினர் இங்கு அகழாய் வுப் பணிகளை மேற் கொண்டனர்.

இந்நிலையில்சுமார் 52 ஆண்டுகளுக்கு பின் னர் தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை சார் பில் கொற்கையில் அக ழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றனஇதில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் குழாய் அமைப்புசெங்கல் கட்டுமான அமைப்பு உள்ளிட்ட

100-க்கும் மேற்பட்ட பழங் கால கட்டுமானங்கள் மற் றும் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது சுமார் 5 அடி உயரமுள்ள குதிர் கண்டுபிடிக்கப் பட்டுள் ளதுஇதை அலுவலர்கள் கயிறு கட்டி மேலே எடுத் தனர்நெல் உள்ளிட்ட தானியங்களை சேமித்து வைக்க இக்குதிர் பயன் படுத்தப்பட்டதா என தொல்லியல் அலுவலர் கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து எழுத்தா ளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, ‘‘ஆதிச்சநல்லூர்சிவகளைகொற்கை ஆகியவை உலக நாகரீகத்தின் தொட்டில் என்பதற்கு சான்றாக தொடர்ந்து பழங்காலப் பொருட்கள் கிடைத்து வரு கின்றனகொற்கையில் துறைமுகம் தொடர்பான பெரிய ஆலை இயங்கி வந்திருக் கலாம்’’ என்றார்.

இளையான்குடி அருகே 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய தாழி, கீறல் குறியீடுகள் கண்டெடுப்பு

 

இளையான்குடிசெப். 21- சிவகங்கை மாவட்டம்இளையான் குடி அருகே முனைவென்றியில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய மூடியு டன் கூடிய முதுமக்கள் தாழி கள்கீறல் குறியீடுகள் கண்டெடுக்கப் பட்டனஇப்பகுதியை கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல் லூரி தமிழ் உதவிப் பேராசிரியரும்தொல்லியல்ஆர்வலருமான முனைவர் .ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

முனைவென்றி என்பது கொடு மணலுக்கு இணையான ஊர்இங்குள்ள வயல்வெளிகொழஞ்சித் திடல்ஆவடியாத்தாள் கண் மாய் பகுதிகளில் 100 ஏக்கரில் பெருங்கற்கால தொல்சான்றுகள் பரவிக் கிடக்கின்றன.

இங்கு மூடியுடன் கூடிய முது மக்கள் தாழிகள்கருப்புசிவப்பு நிறப் பானை ஓடுகள்கீறல் குறி யீடுகள்செங்கல் வட்டு சில்கள்,

சிறிய கலயங்கள்கற் கருவிகள்மனித எலும்புகள் காணப்படுகின் றனஇந்த தொல்பொருட்களை ஆய்வு செய்ததில்அவை 3,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளதுஆதிச்சநல்லூர்அழகன் குளம்கொடுமணல்பொருந்தல்கீழடிசிவகளை அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் பல இங்கும் காணப்படுகின்றன.

இப்பகுதியை தொல்லியல்துறையினர் முழுமையாக ஆய்வுசெய்தால் ஏராளமான தொல்பொருட்கள் கிடைக்கும்இதன் மூலம் தமிழ னின் பெருமையை உலகறியச் செய் யலாம்இவ்வாறு அவர் கூறினார்.

விருதுநகர் மாவட்டம்திருச் சுழி அருகே உள்ள புரசலூரில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது சுமார் 400 ஆண்டுகள் பழைமையான சதிக் கல் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவ்வூரைச் சேர்ந்த வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் செ.ரமேஷ்ராமநாத புரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுருவுக்குத் தக வல் தெரிவித்தார்.

இரும்புப் பயன்பாட்டில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தமிழர்களே முன்னோடி !- மஞ்சை வசந்தன்

  தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வி...